மதுரை கூட்டுக்குடிநீர் திட்டம் : ஆய்வு செய்த அதிகாரிகளிடம் சலவைத் தொழிலாளர்கள் வாக்குவாதம்

முல்லை பெரியாற்றிலிருந்து மதுரை மாநகர் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. சலவைத்தொழில் செய்து வரும் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றிலிருந்து மதுரை மாநகர் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதே இடத்தில் சலவைத்தொழில் செய்து வரும் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தனியாக பாதை, படித்துறை, தங்கும்அறை மற்றும் மின்இணைப்பு வழங்கு வதாக உறுதியளித்தனர். ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் மதுரை மாநகராட்சி பொறியாளர் அரசு தலைமையில் செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி உள்பட 30 பேர் கொண்ட பொறியாளர் குழு ஆய்வுக்கு வந்தது.

அப்போது கூடலூர் சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகி குமரன் தலைமையில் பொறியாளர் குழுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு உறுதியளித்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த பொறியாளர் குழுவினர் மேயர், ஆணையாளரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின்பு கலைந்து சென்றனர்.

ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பொறியாளர் குழுவை சலவை தொழிலாளர்கள் முற்று கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com