search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆய்வு
    X

    குடிநீர் திட்டப்பணிக்கான இடத்தை வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆய்வு செய்த காட்சி.

    குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆய்வு

    • வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது.
    • விழா நடைெபறும் இடத்தை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ெஜகதீஷ் ஆய்வு செய்தார்.

    திசையன்விளை:

    வள்ளியூர் ஒன்றியத்தில் 179 கிராமங்களுக்கும், ராதாபுரம் ஒன்றியத்தில் 181 கிராமங்களுக்கும், நாங்குநேரி ஒன்றியத்தில் 259 கிராமங்களுக்கும், களக்காடு ஒன்றியத்தில் 149 கிராமங்களுக்கும், சேரன்மாதேவி ஒன்றியத்தில் 22 கிராமங்களுக்கும், பாளையங்கோட்டை ஒன்றியத்தில் 41 கிராமங்களுக்கும் என 831 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.605 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா நடைெபறும் இடத்தை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ெஜகதீஷ் ஆய்வு செய்தார்.

    இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், படையப்பா முருகன், ஊராட்சி மன்ற தலை வர் பேபிமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் புளோ ரன்ஸ் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×