search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    88 கிராமங்களுக்கு ரூ.41.98 கோடியில் குடிநீர் திட்டப்பணி
    X

    88 கிராமங்களுக்கு ரூ.41.98 கோடியில் குடிநீர் திட்டப்பணி

    • அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம்ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு பகுதியில் பாலாற்று படுக்கை அமையப்பெற்றுள்ளது.

    இப்பகுதியில் இருந்து ஜல் ஜீவன் மிசன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சோளிங்கர், அரக்கோணம், காவேரிப்பாக்கம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 88-குக்கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை பணி நேற்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் அனிதா குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மோகனசுந்தரம் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரூபாய் 41.98-கோடியில் செயல்படுத்தப்பட உள்ள கூட்டு குடிநீர் திட்டப்பணிக்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் வாயிலாக 88-குக்கிராமங்களுக்கு பாலாற்று பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    இதனால் கிராம மக்களின் குடிநீர் தேவைகள் நிரந்தரமாக பூர்த்தி செய்யப்படும்.மேலும் 2022-அடிப்படை ஆண்டின் மக்கட்தொகை 54711-நபர்களுக்கு தினசரி தேவையான 2.50- மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதேபோல் இடைக்கால ஆண்டின் மக்கட்தொகை யான 64562, நபர்களுக்கு 2.70- மில்லியன் லிட்டர் தண்ணீரும், உச்சக்கட்ட ஆண்டின் மக்கட்தொகை யான 72219-நபர்களுக்கு 2.98- மில்லியன் லிட்டர் தண்ணீரும் வழங்கும் அளவில் வடி வமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் படி பாலாற்று பகுதியில் புதிய 5-நீர் உறிஞ்சு கிணறுகளை நிரந்தரமாக அமைத்து, இதன் மூலம் பெறப்படும் குடிநீரை புதியதாக அமைக்கப்பட உள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் சேகரிக்கப்படும். பின்னர் இதில் இருந்து நெகிழ் இரும்பு குழாய்கள் மூலம் தண்ணீர் உந்தப்பட்டு மக்கள் பயனுக்கு கொண்டு வரப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அரசு அதிகாரிகள் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து வரைபடம் மூலம் விளக்கம் அளித்தனர். அப்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி பொறியாளர் சுபவாணி, நெமிலி தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் ஞானமணி, மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினர் சி.மாணிக்கம், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×