என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auction"

    • உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவை ஏலத்துக்கு விடப்படுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதியது.

    உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    இதற்கிடையே, அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன.

    இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்தக் கடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

    இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ஒவியத்திற்கான ஏலம் 20 நிமிடங்களில் முடிந்தது.
    • ஓவியத்தில் குஸ்டாவ் கிளிம்ட் தனது முக்கிய வாடிக்கையாளரின் மகளை சித்திரித்திருந்தார்.

    ஆஸ்திரியாவை சேர்ந்த பிரபல ஓவிய கலைஞர் குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியத்தை அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த சோதேபிஸ் ஏல நிறுவனம் ஏலம் விட்டது.

    இதை ஏலம் எடுக்க 6 பேர் போட்டிபோட்டனர். இதில் அந்த ஓவியம் 236.4 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி) ஏலம் போனது.

    ஏலம் எடுத்தவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஏலம் 20 நிமிடங்களில் முடிந்தது. ஏல வரலாற்றில் 2-வது அதிகபட்ச விலைக்கு விற்பனையான ஓவியம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஓவியம் 1914-1916ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வரைந்ததாகும். இந்த ஓவியம் லிசபெத் லெடரர் என்ற பெண் வெள்ளை அங்கி அணிந்து நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டும் ஓவியமாகும்.

    அந்த ஓவியத்தில் குஸ்டாவ் கிளிம்ட் தனது முக்கிய வாடிக்கையாளரின் மகளை சித்திரித்திருந்தார்.

    இந்த ஓவியம் 2-ம் உலக போரின்போது நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த ஓவியம் 1948-ம் ஆண்டு மீட்கப்பட்டது.

     

    • மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது.
    • சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக நடந்த டிரேட் முறையில் பல அணிகளில் நிறைய வீரர்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    இதில் முக்கிய மாற்றமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கும் ராஜஸ்தான் அணியில் இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கும் மாற்றப்பட்டது ஆகும். மேலும் பல அணிகள் சில வீரர்களை கழற்றி விட்டும் தக்கவைத்தும் உள்ளது.

    மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களிலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான 10 அணிகளின் தலைமை பயிற்சியாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளராக உள்ளார். மும்பை அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்தனே பயிற்சியாளராக உள்ளார். பஞ்சாப் அணிக்கு ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

    மற்ற அணிகள் பொறுத்தவரையில் ஆர்சிபி அணிக்கு ஆண்டி பிளெவர், குஜராத் அணிக்கு ரெஹ்ரா, கொல்கத்தா அணிக்கு அபிஷேக் நாயர், டெல்லி அணிக்கு பதானி, லக்னோ அணிக்கு ஜஸ்டின் லாங்கர், ஐதராபாத் அணிக்கு டேனியல் விக்டோரி, ராஜ்ஸ்தான் அணிக்கு குமார் சங்ககாரா பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • இந்தியாவின் எதிரி சொத்து காப்பாளர் துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.
    • சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது.

    உலக அளவில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பெங்களூரு புகழ்பெற்று விளங்குகிறது. டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த பயங்கரம் நடந்துள்ள நிலையில் பெங்களூருவில் பாகிஸ்தான், சீனா நாட்டினரின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 அசையா சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்த சொத்துகள் எதிரி சொத்து சட்டம் 1968-ன் கீழ் எதிரி சொத்துகளாக கண்டறியப்பட்டு உள்ளன. எதிரி நாடுகளுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்த சொத்து, 'எதிரி சொத்து' என அழைக்கப்படுகிறது.

    இந்த நடவடிக்கை 1968-ம் ஆண்டு எதிரி சொத்து சட்டத்தின் கீழ் எடுக்கப்படுகிறது. தற்போது பெங்களூரு ராஜ்பவன் ரோட்டில் உள்ள இந்த சொத்துகள், எதிரி சொத்துகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதாவது கப்பன் பூங்கா அருகே ராஜ்பவன் சாலையில் வார்டு எண் 78-ல் மொத்தம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 504 சதுர அடி பரப்பளவு கொண்ட சொத்து கண்டறியப்பட்டுள்ளது.

    விக்டோரியா சாலையில் சிவில் ஸ்டேசன் பகுதியில் 8 ஆயிரத்து 845 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு அசையா சொத்து உள்ளது. கலாசிபாளையம் 2-வது பிரதான சாலையில் 2 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டு மனை உள்ளது.

    இந்த 4 அசையா சொத்துகளும் எதிரி சொத்துக்கள் என இந்தியாவின் எதிரி சொத்து காப்பாளர் துறை அடையாளம் கண்டறிந்துள்ளது.

    பெங்களூரு மாநகர மாவட்ட நிர்வாகம் கர்நாடக அரசின் அறிவுறுத்தலின் படி சொத்துகளின் மதிப்பீட்டு பணியை முடித்துள்ளது. அதாவது அரசின் நில மதிப்பீடு, சந்தை நில மதிப்பீடு ஆகிய 2 முறைகளில் சொத்துகளின் மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகள் நடந்து வருகிறது.

    • கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது.
    • எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஓவிய கலைஞர் எம்.எப்.ஹூசைன். இந்தியாவின் பிகாசோ என போற்றப்படும் உலக புகழ்பெற்ற இவர் உலகம் முழுவதும் கலை மற்றும் உரையாடல்களை ஊக்குவிக்கும் இந்தியாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

    இவர் கடந்த 1954-ம் ஆண்டு வரைந்த பெயரிடப்படாத ஓவியம் (கிராம யாத்திரை) என்ற ஓவியம் அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற கிறிஸ்டி ஏலத்தில் பங்கேற்றது. சுதந்திர இந்தியாவின் பன்முக தன்மை மற்றும் சுறுசுறுப்பை கொண்டாடும் எம்.எப்.ஹூசைனி படைப்பாக கருதப்படும் இந்த ஓவியம் 13.8 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.119 கோடி) ஏலம் போய் உள்ளது. இது முந்தைய சாதனையான அமிர்தா ஷெர்-கில்லின் தி ஸ்டோரி டெல்லர் படத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகும்.

     

    ரூ.119 கோடிக்கு ஏலம்போன ஓவியம்.

    கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது. இந்த சாதனையை தற்போது எம்.எப்.ஹூசைனின் படைப்பு முறியடித்துள்ளது.

    ஏலத்தை நடத்திய நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு முக்கியமான தருணம் என்றார்.

    இந்த ஓவியத்தை இந்தியாவின் முக்கிய கலை சேகரிப்பாளரான கிரன் நாடாரின் கலை அருங்காட்சியகம் (கே.என்.எம்.ஏ.) ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்.பி.ஜி. நிறுவன தலைவரும், கலை சேகரிப்பாளருமான ஹர்ஸ்கோயங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எம்.எப்.ஹூசைனின் கிராம் யாத்திரா ஓவியம் ரூ.100 கோடி தடையை உடைத்து கிரன் நாடாருக்கு 13.8 மில்லியன் டாலருக்கு விற்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

    • 191விவசாயிகள் கலந்து கொண்டு93 ஆயிரத்து 118கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 76.65க்கும், குறைந்தபட்சம் ரூ.54க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    தீபாவளி பண்டிகையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த தேங்காய் பருப்பு ஏலம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. நேற்று 191விவசாயிகள் கலந்து கொண்டு93 ஆயிரத்து 118கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 76.65க்கும், குறைந்தபட்சம் ரூ.54க்கும் கொள்முதல் செய்தனர்.நேற்று மொத்தம் ரூ.62லட்சத்து 39ஆயிரத்து 823க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை உள்பட உரிமை கோரப்படாத 266 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது
    • ஏலம் எடுக்க விரும்புபவர்கள் முன்பணமாக ரூ.1000-யை நெல்லை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்

    நெல்லை:

    நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை உள்பட உரிமை கோரப்படாத இரு சக்கர வாகனங்கள்-251 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்-15 என மொத்தம் உள்ள 266 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த வாகனங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட அரசிதழில் கடந்த மே மாதம் 18-ந்தேதி வெளியிடப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு முன்னீர்பள்ளம் மற்றும் தாழையூத்து போலீஸ் நிலையங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

    அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு அந்த வாகனங்கள் தாழையூத்து போலீஸ் நிலைய வளாகத்தில் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க விரும்புபவர்கள் முன்பண மாக ரூ.1000-யை நெல்லை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் வருகிற 12-ந்தேதி கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களை முன்கூட்டியே வந்து பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏலத்துக்கு 1,121 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
    • மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது.

    அவினாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 31 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,121 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஆா்.சி.ஹெச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,500 முதல் ரூ.9,999 வரையிலும், மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.31 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் 24-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
    • தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

     மதுரை

    தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி, மதுரையில் உள்ள அலுவலக வளாகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

    ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் இந்த அலுவலக வளாகத்தில் 24-ந் தேதி காலை 11 மணிக்குள் ரூ.1000/- முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள் காவல் வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. விற்பனை வரியுடன் சேர்த்து 24-ந் தேதி உடனே செலுத்த வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி தளவாய் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு திண்டுக்கல், இடையகோட்டை, வெள்ளாளபட்டி, போத்துராவுத்தன்பட்டி, மஞ்சக்காம்பட்டி, கம்பளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 விவசாயிகள் தங்களுடைய 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 11,603 கிலோ.

    முத்தூா், காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.64.44 முதல் ரூ. 69.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59. கடந்த வார சராசரி விலை ரூ.70.02. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பல கலந்து கொண்டனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9,999 -க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150 -க்கும், சராசரி விலையாக ரூ .8,950 -க்கும் விற்பனையானது.பருத்தியின் மொத்த அளவு 3,039 மூட்டைகள், குவிண்டால் 1023.04. இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 97 ஆயிரத்து 133. இந்த மறைமுக ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    • குவின்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
    • ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ .49 லட்சத்து 44 ஆயிரம்.

     அவினாசி :

    அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு புளியம்பட்டி, அன்னூர்,சேவூர், பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1918 முட்டை பருத்தி வந்தது.

    இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் மட்டரகப் பருத்தி குவின்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.

    ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ .49 லட்சத்து 44 ஆயிரம். இந்த தகவலை சங்க மேலாண்மை இயக்குனர் மோசஸ் ரத்தினம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

    • ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.
    • ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் அக்கரைப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

    இதில், ரூ.56,950-க்கு அடிப்படை குத்தகை உரிமம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், அதிக தொகையான ரூ.3,01,100-க்கு ஏலம் எடுத்து மீன் பிடிக்க குத்தகை உரிமத்தை பெற்றார்.

    ×