என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க கடிகாரம்"

    • உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவை ஏலத்துக்கு விடப்படுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதியது.

    உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    இதற்கிடையே, அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன.

    இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்தக் கடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

    இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார்.
    • இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது


    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினி படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.




    இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.

    மேலும் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது.

    மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி மாபியா டானாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.




    இந்நிலையில் தலைவர் 171 படத்தில் 80 களில் ரஜினிகாந்தின் பாக்ஸ் ஆபிஸ் பட போட்டியாளரான நடிகர் மோகனை இப்படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் அணுகினார். தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்க மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    மோகன் நடிப்பதற்கான சம்பள பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததும் நடிகர் மோகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.



    இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் 'கேமியோ' பாத்திரத்தில் நடிக்க வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×