search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி"

    ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    மூலனூர்:

    மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 1073 பேர் பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

    பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.15,877-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9 ஆயிரத்து 580-க்கும், சராசரி விலையாக ரூ.12 ஆயிரத்து 230-க்கும் விற்பனையானது.

    பருத்தியின் மொத்த அளவு 9,432 மூட்டைகள், குவிண்டால் 3118.60. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 58 லட்சத்து 16 ஆயிரத்து 567-க்கு 21 வியா பாரிகள் மறைமுக ஏலத்தில் எடுத்தனர் என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப் பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    100 நாள் திட்ட தொழிலாளர்களை பருத்தி சாகுபடி செய்யும் வயல்களுக்கு அனுப்ப வேண்டும்.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தொழிலாளர் பற்றாக்குறை, நிலையில்லாத விலை, பி. ஏ. பி., பாசன சுற்று குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

    விவசாய தொழிலாளர்கள் பலர் திருப்பூர், கோவை, சென்னை போன்ற தொழில் நகரங்களுக்கு வேலைக்கு சென்று விட்டனர். மீதமிருக்கும் தொழிலாளர்களும் 100நாள் திட்ட வேலைக்கு சென்று விடுகின்றனர்.

    பருத்தி மற்றும் நூல் விலை ஏற்றம் காரணமாக இன்று விசைத்தறி மற்றும் பின்னலாடை துறை உள்ளிட்ட தொழில்கள் முடங்கி உள்ளன. இதனால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் 100 நாள் திட்ட தொழிலாளர்களை பருத்தி சாகுபடி செய்யும் வயல்களுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ×