search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regulation Shop"

    • காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    முத்தூர்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள் 8 மூட்டைகள் (338 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.92-க்கும், குறைந்த பட்சமாக ரூ.50-க்கும், சராசரியாக ரூ.90- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார். 

    • திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்துக்கு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
    • பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.22.51 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

     அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்துக்கு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

    இதில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் தர நிலக்கடலை ரூ.8,000 முதல் ரூ 8,340 வரை, இரண்டாம் தரம் ரூ.7,450 முதல் ரூ.8,000 வரை, மூன்றாம் தரம் ரூ.6,500 முதல் ரூ.7,450 வரை, பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.22.51 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

    தீபாவளியையொட்டி நவம்பா் 13 ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் நவம்பா் 14 ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நிலக்கடலை ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.
    • ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    முத்தூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில் 2245 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 85.45 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.60.15 க்கும், சராசரியாக ரூ.82.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 32 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 7579 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.83 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.

    • முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும்.
    • மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    முத்தூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 1330 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 91.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.63.10 க்கும் ஏலம் போனது. மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் 23 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 6517 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.27.80 -க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.24.15-க்கும், சராசரி ரூ.27.30-க்கும் ஏலம் போனது. 2.7 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.74 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.

    • வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
    • சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் எள், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

     ெவள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள்தோறும் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பொருள்களை கொள்முதல் செய்கின்றனா்.

    இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் எள், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், 21 மூட்டை எள், 61 மூட்டைகள் கொப்பரை, 11 ஆயிரம் தேங்காய் என மொத்தம் 9 டன் விளைபொருள்களை வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். இதன் மூலம் ரூ.4.39 லட்சம் வா்த்தகம் நடைபெற்றுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் தங்கவேல் தெரிவித்துள்ளாா். 

    • 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 50.37 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு வரை ஏலம் நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 157 விவசாயிகள் தங்களுடைய 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 70 டன். காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி பகுதிகளைச் சோ்ந்த 11 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 79. கடந்த வார சராசரி விலை ரூ. 79.65. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 50.37லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • திருப்பூர் மாவட்டத்தில்15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல் படுகின்றன.
    • இதுவரை 8 விற்பனைக் கூடங்கள் இ-நாம் வர்த்தக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அவிநாசி, சேவூர், பெதப்பம்பட்டி, மூலனூர்,அலங்கியம் உள்ளிட்ட 15 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல் படுகின்றன.அந்தந்த பகுதியில் விளையும் பயிர்களுக்கு ஏற்ப பருத்தி, நிலக் கடலை, தேங்காய், தேங்காய் பருப்பு, கொப்பரை என பல்வேறு விளைப்பொருட்கள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சந்தைப் படுத்தப்படுகின்றன.அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மறுகட்டமைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட அளவில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இதுவரை 8 விற்பனைக் கூடங்கள் இ-நாம் வர்த்தக முறையின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன. வருகிற ஏப்ரல் தொடங்கி அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இ-நாம் வர்த்தகத்துக்குள் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கு தேவையான கம்ப்யூட்டர் வசதிகள், தொழில்நுட்ப கட்டமைப்பு, பகுப்பாய்வு மையம் உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்த 70 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இ-நாம் வர்த்தக முறையில் நாட்டின் எந்தவொரு இடத்தில் இருந்தும் வியாபாரிகள் விளைப்பொருட்களை கொள்முதல் செய்து கொள்ள முடியும். இடைத்தரகர் தலையீடு தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரி விக்கின்ற னர்.சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை பொறுத்தவரை நிலக்கடலை வர்த்தகம் பெருமளவில் நடக்கும். தற்போது கொப்பரை கொள்முதல் மேற்கொள்ள அனுமதி கேட்டும் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

    • எடை 2,599 கிலோ. கிலோ ரூ. 22.20 முதல் ரூ. 26.65 வரை விற்பனையானது.
    • மொத்தம் 69 விவசாயிகள், 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 5 டன் தேங்காய், கொப்பரை ஆகியவற்றின் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.ஏலத்துக்கு, 6,875 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 2,599 கிலோ. கிலோ ரூ. 22.20 முதல் ரூ. 26.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 26.15.86 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 2,523 கிலோ. கிலோ ரூ. 60.15 முதல் ரூ. 80.85 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 78.80.

    மொத்தம் 69 விவசாயிகள், 9 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.59 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
    • பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.39 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 547 விவசாயிகள் 5,464 மூட்டைகளில் மொத்தம் 1,770 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,850 முதல் ரூ. 8,699 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,050. கடந்த வார சராசரி விலை ரூ. 7,850. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.39 கோடி.

    பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். 

    • காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சோ்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.
    • ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா். 

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.09 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 4 விவசாயிகள் 31 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை1,444 கிலோ.

    காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளை சோ்ந்த 3 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.81க்கும், குறைந்தபட்சமாக ரூ.63க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.09 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா். 

    • மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை நடைபெற்றது.
    • 259 விவசாயிகள் தங்களுடைய 2,572 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 73 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 259 விவசாயிகள் தங்களுடைய 2,572 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 854 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 13 வணிகா்கள் இதை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 7,550 முதல் ரூ. 9,819 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,880. கடந்த வார சராசரி விலை ரூ. 8,950. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 73 லட்சம்.

    விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.28 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
    • ஏலத்தில் 750 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    அவினாசி:

    சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.28 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 750 மூட்டை நிலக்கடலைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,700 முதல் ரூ.7,850 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,200 முதல் ரூ.7,450 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,050 வரையிலும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.28 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×