என் மலர்

  நீங்கள் தேடியது "Cotton sales"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
  • ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தியானது ரூ.6,909 முதல் ரூ.7,399 வரை விலை போனது.

  எடப்பாடி:

  எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான பொது ஏலத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 1161 பருத்தி மூட்டைகள் ரூபாய் 29 லட்சத்து 54 ஆயிரத்து 29-க்கு விற்பனையானது. ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தியானது ரூ.6,909 முதல் ரூ.7,399 வரை விலை போனது. கோவை, ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த பருத்தி வியாபாரிகள், சுமார் 410 குவிண்டால் அளவுள்ள பருத்தியினை கொள்முதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 4,360 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
  • 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.

  வெள்ளகோவில் :

  வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.5 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

  இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 422 விவசாயிகள் 4,360 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,373 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,900 முதல் ரூ. 8,658 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,850. கடந்த வார சராசரி விலை ரூ. 8,050. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.05 கோடி.

  ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது.
  • தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

  மூலனூர்:

  தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி விற்பனை மறைமுக ஏலத்தில் திருப்பூா், கரூா், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 233 விவசாயிகள் 2,160 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

  இந்த ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் 58 லட்சத்து 16 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா்.
  • வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

  மூலனூர்:

  வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.38 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 609 விவசாயிகள் தங்களுடைய 5,431 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டுவந்திருந்தனா்.

  மொத்த வரத்து 1,729 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ. 7,150 முதல் ரூ. 10,629 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,250. கடந்த வார சராசரி விலை ரூ. 9,050. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 1.38 கோடி.விற்பனைக்கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

  ×