search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்   ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
    X

    கோப்புபடம். 

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

    • ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது.
    • தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    மூலனூர்:

    தாராபுரம் தாலுகா மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி விற்பனை மறைமுக ஏலத்தில் திருப்பூா், கரூா், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 233 விவசாயிகள் 2,160 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இந்த ஏலத்தில் பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10,102க்கும், குறைந்தபட்சமாக ரூ.7,550க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் 58 லட்சத்து 16 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இதற்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.

    Next Story
    ×