search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauldron auction"

    • மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.
    • ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    முத்தூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில் 2245 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ 85.45 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.60.15 க்கும், சராசரியாக ரூ.82.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2245 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 46 விவசாயிகள் பங்கேற்றனர்.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 32 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 7579 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 27.45 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 22.85 ரூபாய்க்கும், சராசரி 26.55 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.83 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.

    • முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும்.
    • மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    முத்தூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 1330 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 91.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.63.10 க்கும் ஏலம் போனது. மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் 23 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 6517 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.27.80 -க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.24.15-க்கும், சராசரி ரூ.27.30-க்கும் ஏலம் போனது. 2.7 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.74 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.

    • உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ரூ .2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. கொப்பரை வரத்து குறைந்ததால் அதன் விலை ரூ.2 அதிகரித்தது

    உடுமலை:

    உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து பயன் பெற்று வருகின்றனர்.நேற்று பெற்ற கொப்பரை ஏலத்தில் 22 விவசாயிகள் 67 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ 73.12 முதல் ரூ 82.28 க்கும் , இரண்டாம் தர கொப்பரை ரூ 66.89 முதல் ரூ 71.89 க்கும் இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் இறுதி செய்யப்பட்டது.அதன்படி ரூ .2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. கொப்பரை வரத்து குறைந்ததால் அதன் விலை ரூ.2 அதிகரித்தது.இதனால் ஏலத்துக்கு வருகை தந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

    • திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 165 மூட்டைகள் வந்தது.
    • மொத்தம் ரூ.5லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 165 மூட்டைகள் வந்தது. முதல் தரம் கிலோ ரூ 69 முதல் ரூ 77 வரையிலும், 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.68 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.5லட்சத்து 66ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.77க்கும், குறைந்தபட்சமாக ரூ.51க்கும் சராசரியாக ரூ.76க்கும் விற்பனையானது.
    • காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 6 விவசாயிகள் 62 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.93 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 6 விவசாயிகள் 62 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை2,667 கிலோ.முத்தூா், காங்கயம் பகுதிகளை சோ்ந்த 5 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.77க்கும், குறைந்தபட்சமாக ரூ.51க்கும் சராசரியாக ரூ.76க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.93 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    • பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும்.
    • வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கோவை

    பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும். இங்கு பொள்ளாச்சி மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து கொப்பரையை எலத்துக்கு எடுத்து செல்வார்கள்.

    வாரம் தோறும் லட்சக்கணகான ரூபாய்க்கு கொப்பரை ஏலம் போகும். இந்த நிலையில் இந்த வருடம் கொப்பரை ஏலம் நடைபெரும் நாளான செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வர உள்ளது. இதனால் வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது,

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.

    இதில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்பது வழக்கம். வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜை விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் நடத்தப்பட இருந்த கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் என்றார்.

    ×