search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை  கூடத்தில்   ரூ.1.93 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
    X

    கோப்புபடம். 

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.93 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.77க்கும், குறைந்தபட்சமாக ரூ.51க்கும் சராசரியாக ரூ.76க்கும் விற்பனையானது.
    • காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 6 விவசாயிகள் 62 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    காங்கயம்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.93 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த 6 விவசாயிகள் 62 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை2,667 கிலோ.முத்தூா், காங்கயம் பகுதிகளை சோ்ந்த 5 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.77க்கும், குறைந்தபட்சமாக ரூ.51க்கும் சராசரியாக ரூ.76க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.93 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    Next Story
    ×