search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  ரூ.1.10  லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
    X

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

    • முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும்.
    • மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    முத்தூர்:

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 1330 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 91.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.63.10 க்கும் ஏலம் போனது. மொத்தம் 1330 கிலோ கொப்பரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது.

    முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் 23 பேர் நேற்று விற்பனை கூடத்திற்கு 6517 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.27.80 -க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.24.15-க்கும், சராசரி ரூ.27.30-க்கும் ஏலம் போனது. 2.7 டன் தேங்காய்கள் மொத்தம் ரூ.74 ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் தங்கவேல் தெரிவித்தார்.

    Next Story
    ×