என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4-ந் தேதி கொப்பரை ஏலம் ரத்து
- பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும்.
- வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும். இங்கு பொள்ளாச்சி மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து கொப்பரையை எலத்துக்கு எடுத்து செல்வார்கள்.
வாரம் தோறும் லட்சக்கணகான ரூபாய்க்கு கொப்பரை ஏலம் போகும். இந்த நிலையில் இந்த வருடம் கொப்பரை ஏலம் நடைபெரும் நாளான செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வர உள்ளது. இதனால் வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது,
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
இதில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்பது வழக்கம். வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜை விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் நடத்தப்பட இருந்த கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் என்றார்.






