search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "E- We project"

    • உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ரூ .2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. கொப்பரை வரத்து குறைந்ததால் அதன் விலை ரூ.2 அதிகரித்தது

    உடுமலை:

    உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கொப்பரையை கொண்டு வந்து பயன் பெற்று வருகின்றனர்.நேற்று பெற்ற கொப்பரை ஏலத்தில் 22 விவசாயிகள் 67 மூட்டை கொப்பரையை மறைமுக ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ 73.12 முதல் ரூ 82.28 க்கும் , இரண்டாம் தர கொப்பரை ரூ 66.89 முதல் ரூ 71.89 க்கும் இ-நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் இறுதி செய்யப்பட்டது.அதன்படி ரூ .2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது. கொப்பரை வரத்து குறைந்ததால் அதன் விலை ரூ.2 அதிகரித்தது.இதனால் ஏலத்துக்கு வருகை தந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

    ×