search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauldron"

    • விவசாயிகளின் வங்கி கணக்கில் கிரைய தொகையானது நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
    • ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூா் விற்பனை குழுவுக்கு உள்பட்ட ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிகழாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ. 108.60 என்ற வீதத்தில் விவசாயிகளிடமிருந்து அரைவை கொப்பரை நேபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதுவரை 1602 விவசாயிகளிடமிருந்து 2 ஆயிரத்து 499 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நி லையில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டமானது வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய அரசாணை பெறப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது, சிறு குறு விவசாயிகள் நலனை கருதி அவா்களிடமிருந்து கொப்பரை கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனா்.

    விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிரைய தொகையானது நேரடியாக வரவு வைக்கப்படுவதுடன் தரத்தின் அடிப்ப டையிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் இப்பகுதியைச் சாா்ந்த தென்னை விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்றது.
    • ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற கொப்பரை டெண்டரில் 92 மூட்டைகள் வரத்து வந்தது. முதல் தரம் கிலோ ரூ 71 முதல் ரூ 76 வரையிலும் 2-ம் தரம் கிலோ ரூ 55 முதல் ரூ.69 வரையிலும் விலை போனது. ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேங்காய் கொப்பரை கிலோ ரூ.200 நிர்ணயம் செய்ய வேண்டும்.
    • நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    பேராவூரணி:

    பேராவூரணியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேராவூரணி ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் விளக்க உரையாற்றினார்.

    இக்கூட்டத்தில், உரித்த தேங்காய் ஒரு கிலோ ரூ.60, கொப்பரை ஒரு கிலோ ரூ. 200 என மத்திய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்து தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்க வேண்டும்.

    நெல் குவிண்டாலுக்கு ரூ. 3000 விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் பன்னீர்செல்வம், முருகேசன், தங்கராஜ், தேசகாவலன், ரவி, கருணா மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி , இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    • 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 50.37 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் செவ்வாய்க்கிழமை இரவு வரை ஏலம் நீடித்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 157 விவசாயிகள் தங்களுடைய 1,406 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 70 டன். காங்கயம், வெள்ளக்கோவில், நஞ்சை ஊத்துக்குளி, ஊத்துக்குளி ஆா்.எஸ், சிவகிரி பகுதிகளைச் சோ்ந்த 11 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    ஒரு கிலோ ரூ. 60.40 முதல் ரூ. 82.35 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 79. கடந்த வார சராசரி விலை ரூ. 79.65. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 50.37லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா். 

    • அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும்.

    திருப்பூர் :

    குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (டான்பெட்) அனுமதி அளித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்தில் கொப்பரை கொள்முதல் செய்திட பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வாவிபாளையம் முத்தூர் வளாகத்தில் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிேலா ரூ.105.90 என்ற விலையில 6 சதவீதத்திற்குள் ஈரப்பதத்துடன் சீரான சராசரி தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிலோ கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி கொப்பரையை கொண்டு வந்து வருகிற 30-ந்தேதி வரை விற்பனை செய்யலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

    • கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அவிநாசி:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின், அவிநாசி ஒன்றியம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தத்தனூர் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க கொப்பரை கொள்முதல் விலையை கிலோவுக்கு 150 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும்.அனைத்து பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். தென்னை, பனை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காங்கயம் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த 13 விவசாயிகள் 151 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.76 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம், சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த 13 விவசாயிகள் 151 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை7,500 கிலோ.காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.50.89க்கும், சராசரியாக ரூ.78க்கும் விற்பனையானது.

    ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    • வழக்கமாக அரசு கொப்பரை கொள்முதல் துவக்கினால் வெளி மார்க்கெட்டில் விலை உயரும்.
    • ஏற்றுக்கூலியாக மூட்டைக்கு 21 ரூபாய் செலவாகிறது.

    காங்கயம் :

    தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில்அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை துவக்கிவிவசாயிகளிடமிருந்து, கிலோ 105.90 ரூபாய்க்கு நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.கடந்த பிப்ரவரி 1-ந்தேதி துவங்கி வரும், ஜூலை, 31-ந்தேதி வரை இம்மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக அரசு கொப்பரை கொள்முதல் துவக்கினால் வெளி மார்க்கெட்டில் விலை உயரும். ஆனால் நடப்பாண்டு வெளி மார்க்கெட்டில் 85 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. அரசு கொள்முதல் மையங்களுக்கு நேரடியாக விவசாயிகள் கொப்பரை கொண்டு வர வேண்டும்.ஆதார், வங்கிக்கணக்கு எண் நகல், பட்டா, சிட்டாவுடன் முன் பதிவு செய்து வரும் விவசாயிகளிடம் ஈரப்பதம், நிறம் உள்ளிட்ட காரணங்களினால் கழிக்கப்படுகிறது.கொண்டு வரும் 70 சதவீதம் கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு அதற்குரிய தொகையை உடனடியாக செலுத்தாமல் 25 முதல் 40 நாள் வரை தாமதம் ஆகிறது.

    மேலும் விளை நிலத்திலிருந்து கொள்முதல் மையத்திற்கு கொண்டு வரும் சரக்கு வாகன வாடகை மட்டுமின்றி மையத்தில் ஏற்றுக்கூலியாக 50 கிலோ மூட்டைக்கு 21 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, விவசாயிகளுக்கு 40 ரூபாய் வரை செலவாகிறது.இதனால்அரசு கொப்பரை கொள்முதல் மையத்திற்கும், வெளி மார்க்கெட்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.கொண்டு வந்து தரமற்ற கொப்பரை என கழித்து, விற்றதற்கும், தொகை தாமதமாவதால் பெரும்பாலான தென்னை விவசாயிகள் அரசு கொப்பரை கொள்முதல் மையத்திற்கு உற்பத்தி செய்த கொப்பரையை கொண்டு வராமல் வியாபாரிகளிடம் விற்று வருகின்றனர்.

    வியாபாரிகள், எண்ணெய் உற்பத்தி ஆலைகள் 'சிண்டிகேட்' அமைத்து விலையை உயர்த்தாமல், குறைத்து வாங்குகின்றனர்.எனவே அரசு கொப்பரை கொள்முதலில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, விவசாயிகளும் அலைகழிக்கப்படாமல் கொள்முதல் செய்யவும், ஆதார விலையை உயர்த்தவும் போக்குவரத்து கட்டணம் விவசாயிகளுக்கு வழங்கவும் வேண்டும்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    அரசு கொப்பரை கொள்முதல் துவங்கினால், வெளி மார்க்கெட்டில் விலை உயர வேண்டும். ஆனால், கடந்த 6 மாதமாக விலை உயரவில்லை.வழக்கமான விலையை விட குறைந்து 85 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. கொப்பரை கொள்முதல் மையத்திற்கு, கொப்பரை கொண்டு சென்றால் ஈரப்பதம், நிறம் என தரப்பரிசோதனையில் 20 முதல் 40 சதவீதம் கழிக்கப்படுகிறது.

    அதற்குப்பின் ஏற்றுக்கூலியாக மூட்டைக்கு 21 ரூபாய் செலவாகிறது. கிராமத்திலிருந்து ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டு வர 20 ரூபாய் வரை செலவாகிறது. இதனை கணக்கிட்டால்அரசு கொள்முதல் மையத்தை விட வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை கிடைப்பதோடுஉடனடியாக பணம் கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து கொப்பரையும், எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும்.போக்குவரத்து கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளவும், ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் ஆதார விலை நிர்ணயித்து ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×