search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 166567"

    முதல் தலைமுறை இளைஞர்கள் சேவை சார்ந்த தொழில்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் துவங்க  முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர்  மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது . 

    இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ரூ .10 லட்சம் முதல் 5 கோடி வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெறவும் தமிழக அரசின் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 
    25 % அல்லது அதிக பட்ச மானியம் ரூ.75 லட்சமாக உயர்த்தி வழங்கவும் மேலும் மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10% மானியம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    மேலும் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3% வட்டி மானியமாகவும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு 
    வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது. 

    மகளிர்களுக்கு 50% ஒதுக்கீடும் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். தற்போது குறைந்தபட்ச கல்வி தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது . 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். 

    ஏற்கனவே மத்திய- மாநில அரசு திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் கடனுதவி பெற இயலாது . விவசாயம், வாகனம் மற்றும் மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் தவிர்த்து ஏனைய உற்பத்தி மற்றும் சேவை சார்த்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

    எனவே தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து அதன் நகல் மற்றும் சான்றிதழ்களுடன் பொதுமேலாளர் , மாவட்டத் தொழில் மையம் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சிவகங்கை 630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தொழில்மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது அலுவலர்களை 8925533991 , 8925533990 மற்றும் 8925533989 என்ற செல்லிடபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. 
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் வியாபாரிகளுக்கு மானியத்தில் ஐஸ் பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.
    • மீனவா்களுக்கான ஐஸ் பெட்டிகள் ராம நாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வை க்கப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 1500-க்கும் அதிகமான விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மூலம் பாரம்பரிய முறையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மீனவர்களுக்கு மத்திய-மாநில அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மானியத்தில் ஐஸ் பெட்டிகள் மற்றும் இருசக்கர வாகனம் வழங்கு வதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக ராமநாத புரம் மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் சாா்ந்த மத்திய அரசின் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பிரதமா் மீன்வள திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் 30 ஏழை மீன் வியாபாரிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மீன்களை பதப்படுத்தி விற்கும் வகையில் உதவும் ஐஸ் பெட்டிகள் வழங்கப்பட உள்ளன.

    மீனவா்களுக்கான ஐஸ் பெட்டிகள் ராம நாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வை க்கப்பட்டுள்ளன. மொத்த விலையில் 40 சதவீதம் மானியத்தில் ஐஸ் பெட்டி கள் உள்ளிட்டவை மீன வா்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    தற்போது முதல் கட்ட மாக ஐஸ் பெட்டிகள் வந்துள்ளன. ஆகவே இரு சக்கர வாகனங்கள் வந்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×