என் மலர்
நீங்கள் தேடியது "Memorial Day"
- இமானுவேல்சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் கிராமத்தில் இமானுவேல் சேகரன் சிலை உள்ளது. அவரது நினைவு தினத்தை யொட்டி இந்த சிலைக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர்.
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழ்நாடு முதல்-அமைச்ச ருக்கு ராஜபாளையம் தொகுதி பொதுமக்கள் சார்பாகவும், எம்.எல்.ஏ. என்ற முறையிலும் நன்றிகள் தெரிவித்து கொள்வதாக அப்போது எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நகர செய லாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், ஒன்றிய துணை செயலாளர்கள் மலர் மன்னன், குமார், மாவட்ட பிரதிநிதி கணேசன், மாவட்ட அணியின் துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரமக்குடியில் உள்ள சுதந் திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகர–னார் நினைவிடத்தில் செப்டம்பர் 11-ந்தேதி தியாகி நினைவு தினம் அனுசரித்தல் தொடர் பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை முன்னிலையில், மாவட்ட மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், தலைமை–யில் அனைத்துத்துறை அலு–வலர்கள் மற்றும் சமு–தாய அமைப்புகளின் பிரதிநிதி–களுடன் ஆலோச–னைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் கலெக்டர் தெரி–வித்ததாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு விதிமுறைகளை பின் பற்றி நினைவு தின நிகழ்ச் சியில் பங்கேற்றிடும் வகை–யில் அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் ஒத்துழைப்பு கொடுத்து காவல் துறையு–டன் ஒருங்கிணைந்து தேவை–யான முன் அனுமதிகளை பெற்றிட வேண்டும்.
காவல்துறை வழிகாட்டு–தலின்படி அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விளம் பர பலகை வைத்துக் கொள் ளவும். வெளி மாவட்டங்க–ளிலிருந்து வருபவர்களுக்கு தேவையான முன் அனுமதி காவல்துறை மூலம் அனுமதி சீட்டு பெற்று வந்து செல்ல தேவையான நடவடிக்கை–களை முன்கூட்டியே மேற் கொள்ள வேண்டும்.
மேலும் நினைவிடத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக தேவையான சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நினைவு நாள் அன்று வெளியூரிலிருந்து பரமக்குடி–யில் உள்ள நினைவிடத்திற்கு வரக்கூடியவர்களுக்கு காவல்துறையின் மூலம் உரிய வழித்தடங்கள் வழி–யாக பேருந்து சென்று வர திட்டமிடப்பட்டுள்ளது. அனும–திக்கப்பட்ட வழித்த–டங்களில் சென்று நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றுச் செல்லவும். மேலும் விழா–வினை சிறந்த முறையில் நடத்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் தார்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ராமநாதபுரம் வரு–வாய் கோட்டாட்சியர் கோபு, தாசில்தார்கள் ஸ்ரீதர் (ராம–நாதபுரம்), பழனிக் குமார் (கீழக்கரை), கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜய–குமார், தேவேந்திரர் பண் பாட்டு கழகம் சார்பில் தலைவர் பரம்பை பாலா உள்ளிட்ட நிர்வாகிகள், புதிய தமிழகம் கட்சி சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முத்துக் கூரி (ராமநாதபுரம்), மகேஷ் (பரமக்குடி) மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.கே.முனியசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கள் முனியசாமி (கிழக்கு), சேகர் (மேற்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல் தலைமை தாங்கி னார்.
கருணாநிதி உருவப் படத்திற்கு நிர்வாகிகள் மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சி யில் மாவட்ட மாணவரணி கதிர் ராஜ்குமார், நகர செயலா ளர் கார்த்திகேயன், பேரூ ராட்சி மன்ற தலைவர் கோகிலா ராணி, நாராய ணன், மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலையில் மாவட்ட தி.மு.க. சார்பில் நடந்தது
- அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு, கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு உணவு வழங்குதலை தொடங்கி வைத்தார்.
தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.முத்து, பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலைஞர் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பொதுப்பணித்துறை அமைச்ச ரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பின ருமான எ.வ.வேலு கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து, 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
- கருணாநிதி நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
- தி.மு.க. ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சாயல்குடி
சாயல்குடியில் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் மற்றும் சாயல்குடி பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் அனுச ரிக்கப்பட்டது. சாயல்குடி மும்முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், சாயல்குடி பேரூர் செயலாளர் வெங்க டேஷ் ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் சத்தியேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி காமராஜ், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், துணை சேர்மன் மணி மேகலை, பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன், சாயல்குடி புனித ராஜன் உள்ளிட்ட தி.மு.க. ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- மரக்கன்றுகள் நடவு செய்யவும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை நர்சிங் கல்லூரி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி தலைமை தாங்கி அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்.
உடன் கல்லூரி மாண விகள் வெள்ளை சீருடைய அணிந்து மவுன அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் தங் களது வீடுகளுக்கு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்ய வும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.
- அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ஆசிரியர்கள், மாணவர்கள்
- அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர்
அரியலூர்,
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக், கல்லூரிகளில் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், அப்து ல்கலாம் படத்துக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை, அரியலூர் அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, தங்கபாண்டி இளநிலை உதவியாளர் மணி கண்டன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர். லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சௌ ந்தர்ராஜன் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதே போல் மாவட்ட த்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூ ரிகளில் அப்துல்கலாம் நினைவுத் தினம் அனுசரி க்கப்பட்டது.
- இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
- மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 19 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர்.
பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த துயர சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் ஆகினும், இன்னும் பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் விலகவில்லை.
- தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.
- சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எளிய மக்களுக்கான இதழியல் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்களுக்காக 'தினத்தந்தி' நாளிதழைத் தொடங்கி அதில் வெற்றி கண்ட மாமனிதர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.
புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம்பிடித்து முடிசூடா மன்னராக திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.
- தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம். தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.
தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழர் தந்தையின் நினைவு நாளில் அன்னைத் தமிழுக்கு தொண்டாற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.