என் மலர்
நீங்கள் தேடியது "abdul kalam"
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்.
- வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நினைவூட்டுகிறது.
ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார். அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடி வந்தார்.
இன்று ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். இளைஞர்களை தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை... வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- அப்துல் கலாம் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
- மணி மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், உலகப் புகழ் பெற்ற புண்ணிய தலமான ராமேசுவரத்தில் பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பாதுகாப்பு துறையில் பணியாற்றி அணுகுண்டு சோதனை, செயற்கைக்கோள் வடிவமைத்தல், அக்னி ஏவுகணை உருவாக்குவதில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாடும்போது அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைத்தது.
அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டும், அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டு உள்ளன. இன்று அப்துல் கலாமின் 10-ம் ஆண்டு நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராமேசுவரம் மணிமண்டபத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மணி மண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், போலீஸ் டி.ஐ.ஜி., மாவட்ட சூப்பிரண்டு சந்தீஷ், இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அப்துல்கலாம் பேரன்கள் சேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அப்துல் கலாம் நினைவிடத்தில் கூட்டு பிரார்த்தனையும் நடந்தது.
- தனுஷின் அடுத்த படத்திற்கு ‘கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா ' என பெயரிடப்பட்டுள்ளது.
- டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இப்படம் உருவாகிறது
சேகர் கர்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து அவரே இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் அடுத்த படத்திற்கு 'கலாம் : மிஸைல் மேன் ஆப் இந்தியா ' என பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இப்படம் உருவாகிறது
இது தொடர்பான அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தை 'ஆதிபுருஷ்' திரைப்படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்க உள்ளார். அப்துல் கலாம் பயோபிக் படம் அவர் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
- ராஜஸ்தான் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதை அவரது பேரன்கள் பெற்றுக்கொண்டனர்.
ராமேசுவரம்
ராஜஸ்தானைச் சேர்ந்த சுவாமி ஆச்சார்யா துளசி, அனுவ்ராட் என்ற தனியார் சேவை மையத்தை 1949ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். உலக அமைதி, சமநிலை தன்மை, பூமி பாதுகாப்பு, சாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பை ஜெயின் சமூகத்தார்கள் இணைந்து வழி நடத்தி வருகிறார்கள்.
ஆண்டுதோறும் பொது சேவைகளில் சிறந்து விளங்கும் முக்கிய தலைவர்களை கவுரவிக்கும் விதமாக 200 நபர் கொண்ட குழு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனம், முக்கிய நபர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவப்படுத்துகிறது.
இந்த அமைப்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சேவைகளை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 2022-ம் ஆண்டிற்கான அனுவ்ராட் புரஷ்கார் விருதை அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனுராட் அறக்க ட்டளை அலுவலகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்துல் கலாம் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், பேரன்கள் சேக்தாவூது மற்றும் சேக்சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதை பெற்று கொண்டனர்.
- அப்துல்கலாமுக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது.
- ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார்.
அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்னரும், பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று தொடர்ந்து பேசி வந்தார்.
2015-ம் ஆண்டு ஜூலை 27 அன்று மேகாலயா தலைநகர் சில்லாங்கில் உள்ள கல்லூரியில் மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்துல்கலாம் இறந்தார். அவரது 8-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள அவரது மணிமண்டபத்தின் வெளிப்பகுதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்குள்ள அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், மகன் ஜெயுலாதீன், மருமகன் நிஜாமுதீன், பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத் ஆகியோர் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா எம்.எல்.ஏ. கீதா ஜெயின், பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோரும் பங்கேற்றனர்.
அரசு சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்றனர்.
- 1,221 கியூப்களை பயன்படுத்தி அப்துல் கலாம் உருவம் வடிவமைக்கப்பட்டது.
- மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே தங் கச்சிமடம் ஊராட்சி பகு–திக்கு உட்பட்ட பேய்க்க–ரும்பு என்ற பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி–மண்டபம் அமைந்துள் ளது. இந்த மணிமண்டபத்தில் இன்று அவரது எட்டாம் ஆண்டு நினைவு தினம் கடை–பிடிக்கப்பட்டு வருகி–றது.
இதையொட்டி தமிழகத் தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதில் அவர்கள் செய்துள்ள சாதனைகளை விளக்கி மலர் அஞ்சலியும் செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா பான்ஞ் பயா என்ற மாணவர் ராமே சுவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விளையாட்டு போட் டிகளில் ஏராளமான சாத–னைகளை செய்துள்ளார்.
இந்த நிலையில் மாணவர் அப்துல்லா பான்ஞ் பயா, முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவப் படத்தையும் அவர் விஞ்ஞானியாக இருந்த–போது முதலில் ஏவிய அக்னி ஏவுகணையும் 1,221 ரூபிக்ஸ் கியூப்களை பயன்ப–டுத்தி வடிவமைத்துள்ளார்.
இந்த உருவ வடிவத்தை 4 மணி நேரத்தில் அவர் செய்து முடித்துள்ளார் என்பது உலக சாதனையா–கும். அவர் வடிவமைத்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவத்தை அப்துல் கலா–மின் மணிமண்டபத்தில் இன்று அவர் நினைவு தினத்தையொட்டி மண்டப வளாகத்தில் வைத்திருந்த–னர். இந்த உருவத்தை மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.
- அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
- மரக்கன்றுகள் நடவு செய்யவும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை நர்சிங் கல்லூரி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி தலைமை தாங்கி அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்.
உடன் கல்லூரி மாண விகள் வெள்ளை சீருடைய அணிந்து மவுன அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் தங் களது வீடுகளுக்கு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்ய வும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.
- அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் தலைமையில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி அப்துல்கலாம் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதில் மாணவ- மாணவிகளுக்கு வாசித்தல், மரம் வளர்த்தல், அறிவியல் மனப்பாங்கு வளர்த்தல் போன்ற அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
- அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான்.
- தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு கலந்து கொண்டு புதிய கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் காணொலியில் பேசியதாவது:-
அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான். தனியார் அமைப்பு ஏற்படுத்தி கொடுக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். அப்துல் கலாம் கூறியது போல தூங்க விடாத கனவுகளை துரத்தி கொண்டே இருந்தால் நாளை பெரிய தலைவராகவோ, விளையாட்டு நட்சத்திரமாகவோ, நாட்டை ஆளும் பொறுப்பிற்கோ வர முடியும். அதற்கு அடித்தளம் அமைப்பது கல்வி தான்.
இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்குரிய முயற்சிகளை தொடருங்கள். தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம். கல்வி நிச்சயம் உங்களை உயர்த்தும். நம்மால் முடியும் என நம்புங்கள். முன்னேறுவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்யை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனைதொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல்கலாம் நினைவிடத் தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராமேசுவரம் வருகை தந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து, மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முதல் போட்டி 21 கிலோ மீட்டர், இரண்டாவது போட்டி 5 கிலோ மீட்டர், மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி 3 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெ.தங்கதுரை, உதவி கலெக்டர் சிவானந்தம், கலாம் பேரன் சேக்சலீம், நகர்மன்ற தலைவர் நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.
- பேரணி வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
- பேரணியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பாளை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் இளைஞர் எழுச்சி தின பேரணி பாளை வ.உ. சி. மைதானம் முன்பு இன்று தொடங்கியது.
பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர்கள் ஹரிராமா, பெர்னாட் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி, ம.தி.தா பள்ளி ஆசிரியர் சோமு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பேரணி வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பாளை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது.இந்தப் பேரணியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பாளை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை நாட்டு நலப் பணித்திட்டம் செய்திருந்தது.
- மாணவர்கள் 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.
- மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணையை பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டு வாழ்த்தினர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு அப்துல் கலாமை நினைவு கூரும் விதமாக வைத்தீஸ்வரன் கோவில் முத்துராஜம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 210 மாணவ-மாணவிகள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே ஏ4 பேப்பரில் வரைந்து, வண்ணமிட்டு அவற்றை இணைத்து 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.

83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.
இதனை பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள் கீர்த்திமதி மனோஜ் நிர்மல், மதன், வரலட்சுமி தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் வரைந்து உருவாக்கிய 83 அடி நீளம் கொண்ட அப்துல் கலாம் ஏவுகணையை பார்வையிட்டு, வாழ்த்தினர். இதில் பள்ளி முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






