அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மரக்கன்றுகள் நடவு செய்யவும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.
அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிப்பு
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அன்னை நர்சிங் கல்லூரி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிலம்பு செல்வி தலைமை தாங்கி அப்துல் கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார்.

உடன் கல்லூரி மாண விகள் வெள்ளை சீருடைய அணிந்து மவுன அஞ்சலி செலுத்தினர். அதை தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் தங் களது வீடுகளுக்கு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்ய வும், சுற்றுச்சூழலை பாது காக்கவும் உறுதிமொழி எடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com