search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Design"

    • வழிசெலுத்தல் எனும் தொழில்நுட்பம் மூலம் இந்த விமானங்களை இயக்குவது சிறப்பு அம்சமாகும்.
    • மலை பகுதிகள் மற்றும் வெப்பம் அதிகமாக உள்ள பொக்ரானில் இந்த ஆளில்லா விமானிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    தாம்பரம்:

    சென்னை குரோம் பேட்டையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின் எம்.ஐ.டி. மேம்பட்ட வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கும் முனைவர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் உருவாக்கிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட டிரோன் எனப்படும் 500 ஆளில்லா விமானங்களை இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கியது.

    நாட்டின் வட கிழக்கு மாநிலங்களின் எல்லை பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் எளிதாக அணுக முடியாத இடங்களில் இந்த டிரோன்களை இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது.

    கடந்த வாரம் மத்திய மந்திரி அமித்ஷா, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூனில் இந்தோ திபெத் எல்லை காவல் படையின் 62-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, இந்த டிரோன் வடிவமைத்த குழுவை பாராட்டினார். மேலும் அவர் பேசும் போது எல்லை கண்காணிப்பு நிலையங்களில் மருந்துகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உதவும் என்று கூறினார்.

    இந்த ஆளில்லா விமானங்கள் கடும் பனி, மழை மற்றும் வேகமான காற்று வீசும் போது கூட பயன்படுத்த முடியும். 1 கிலோமீட்டர் உயரம் வரை சென்று பறக்கக்கூடிய இந்த டிரோன்கள், ஒரு சுற்றில் சுமார் 20 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். புவியிடங்காட்டி எனப்படும் ஜி.பி.எஸ். பயன்படுத்திய இந்த குழு, வழிசெலுத்தல் எனும் தொழில்நுட்பம் மூலம் இந்த விமானங்களை இயக்குவது சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆளில்லா விமானங்களின் எடை சுமார் 100 கிலோ ஆகும், மற்றும் இவை 15 முதல் 20 கிலோ மருந்துகள், உணவு பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களை ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எடுத்து செல்லும் திறன் கொண்டவையாகும்.

    அருகாமையில் இருக்கும் சென்சார் மூலம் சுலபமாக தரைக்கு திரும்ப இந்த விமானங்களை இயக்க முடியும். தரையில் திரும்பி வந்த உடன் சில நிமிடங்களிலேயே ஆர்மிங் சுவிட்ஸ் எனும் கருவி தயார் நிலைக்கு வந்த உடன், இந்த ஆளில்லா விமானத்தை மறுபடியும் இயக்க வைக்க முடியும். உயர்ந்த மலை பகுதிகள், அடர்ந்த காடுகள், வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மலை பகுதிகள் மற்றும் வெப்பம் அதிகமாக உள்ள பொக்ரானில் இந்த ஆளில்லா விமானிகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    இந்த ஆளில்லா விமானங்கள் அவசர அறுவை சிகிச்சைக்காகவும், உடல் உறுப்புகள் மற்றும் அறிய வகை ரத்தம் மற்றும் குருதித்திரவவிழையம் விரைவாக எடுத்து செல்லவும் இந்த மையம் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

    • 1,221 கியூப்களை பயன்படுத்தி அப்துல் கலாம் உருவம் வடிவமைக்கப்பட்டது.
    • மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் அருகே தங் கச்சிமடம் ஊராட்சி பகு–திக்கு உட்பட்ட பேய்க்க–ரும்பு என்ற பகுதியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் மணி–மண்டபம் அமைந்துள் ளது. இந்த மணிமண்டபத்தில் இன்று அவரது எட்டாம் ஆண்டு நினைவு தினம் கடை–பிடிக்கப்பட்டு வருகி–றது.

    இதையொட்டி தமிழகத் தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதில் அவர்கள் செய்துள்ள சாதனைகளை விளக்கி மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

    அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா பான்ஞ் பயா என்ற மாணவர் ராமே சுவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விளையாட்டு போட் டிகளில் ஏராளமான சாத–னைகளை செய்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவர் அப்துல்லா பான்ஞ் பயா, முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவப் படத்தையும் அவர் விஞ்ஞானியாக இருந்த–போது முதலில் ஏவிய அக்னி ஏவுகணையும் 1,221 ரூபிக்ஸ் கியூப்களை பயன்ப–டுத்தி வடிவமைத்துள்ளார்.

    இந்த உருவ வடிவத்தை 4 மணி நேரத்தில் அவர் செய்து முடித்துள்ளார் என்பது உலக சாதனையா–கும். அவர் வடிவமைத்த ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவத்தை அப்துல் கலா–மின் மணிமண்டபத்தில் இன்று அவர் நினைவு தினத்தையொட்டி மண்டப வளாகத்தில் வைத்திருந்த–னர். இந்த உருவத்தை மணி–மண்டபத்திற்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனை–வரும் பார்த்து வியந்து மாணவனை பாராட்டி சென்றனர்.

    • தகுதியான கட்டிட கலைஞர், சிவில் என்ஜினீயரை கொண்ட நிறுவனங்கள் பங்கேற்கலாம்
    • சென்னையில் 10 ஏரிகளை ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்கான வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது.

    சென்னை:

    மழை நீரை சேகரித்து குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி தருவதோடு, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதில் ஏரிகளும், குளங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் சென்னையில் ஏரிகளில் வீடுகள் கட்டுவதும், குப்பைகள் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் சென்னையில் ஏரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 20 ஏரிகள் உள்ளன. இவற்றில் பல ஏரிகள் ஆக்கிர மிக்கப்பட்டிருப்பதோடு குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன. இதனால் ஏரிகளின் பரப்பளவு சுருங்கி வருவதோடு சென்னையில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    சென்னை நகரின் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் சென்னையில் ஆக்கிரமிப்புகள் போக எஞ்சியுள்ள ஏரிகளையாவது முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் சென்னையில் 10 ஏரிகள் ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான 'லேக் பிரண்ட் ரீ கனெக்ட்' எனப்படும் ஏரி வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    சென்னையில் பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல், கொளத்தூர் ஆகிய ஏரிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஏரி கள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், பராமரிப்பு இல்லாததாலும் அதன் கட்டமைப்பை இழந்துவிட்டன.

    எனவே இந்த ஏரிகளும், அதன் முகப்பு பகுதிகளும் சீரமைக்கப்படுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒரு தகுதி வாய்ந்த கட்டிட கலைஞர், இயற்கை சார்ந்த கட்டிட கலைஞர், சிவில் என்ஜினீயர் ஆகியோரை கொண்டிருப்பதுடன் மற்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

    குறைந்தபட்சம் ஒரு ஏரிக்கான வடிவமைப்புகளை உருவாக்கி வருகிற ஏப்ரல் 17-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின் முடிவுகள் வெளியான பிறகு திட்டங்களுக்கான டெண்டர் வருகிற ஜூன் மாதம் இறுதி செய்யப்படும்.

    இந்த ஏரிகள் அனைத்திற்கும் பொதுவாக இருக்க வேண்டிய சில அம்சங்களில் திறந்த வெளிகளும் அடங்கும். தற்போதைய ஏரியின் தன்மை, நிலத்தின் அளவு, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்றதா என ஆய்வு செய்யப்படும். ஏரி அமைப்பு, முகப்பு தோற்றம், பறவைகளுக்கான வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் ஆகிய அனைத்தும் இதன் கட்டமைப்புகளில் ஒரு பகுதியாக இருக்கலாம்.

    நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், ஏரியின் எல்லை மேம்பாடு, தூய்மையான கரை பகுதிகள், தோட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், வாகன நிறுத்தும் வசதிகள், ஆம்பி தியேட்டர்கள், உணவகம், நீர் விளையாட்டுகள், மீன்பிடிதளம், விளையாட்டு பகுதி பொது வசதி, படகு சவாரி போன்ற வடிவமைப்புகளும் இடம் பெற வேண்டும். இந்த ஏரிகள் பொழுதுபோக்கு மற்றும் பொருளாதார சேவைகளுக்கான வாய்ப்பையும் கொண்டிருக்க வேண்டும்.

    இந்த ஏரிகளில் தண்ணீ ரை சேமித்து வைப்பதன் மூலம் சென்னையின் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். மேலும் கோடை காலத்தில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஏரியின் தனித்துவமான இடம் மற்றும் இயற்கை அம்சங்களை கருத்தில் கொண்டு வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×