search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது
    X

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட அனுவ்ராட் புரஷ்கார் விருதை அவரது பேரன்கள் சேக்சலீம், சேக்தாவூத் பெற்றுக்கொண்டனர்.

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது

    • ராஜஸ்தான் அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு அனுவ்ராட் புரஷ்கார் விருது வழங்கப்பட்டது.
    • இந்த விருதை அவரது பேரன்கள் பெற்றுக்கொண்டனர்.

    ராமேசுவரம்

    ராஜஸ்தானைச் சேர்ந்த சுவாமி ஆச்சார்யா துளசி, அனுவ்ராட் என்ற தனியார் சேவை மையத்தை 1949ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். உலக அமைதி, சமநிலை தன்மை, பூமி பாதுகாப்பு, சாதி மத பேதமின்மை உலகம் முழுவதும் வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைப்பை ஜெயின் சமூகத்தார்கள் இணைந்து வழி நடத்தி வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் பொது சேவைகளில் சிறந்து விளங்கும் முக்கிய தலைவர்களை கவுரவிக்கும் விதமாக 200 நபர் கொண்ட குழு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனம், முக்கிய நபர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவப்படுத்துகிறது.

    இந்த அமைப்பு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சேவைகளை கவுரவிக்கும் வகையில் அவருக்கு 2022-ம் ஆண்டிற்கான அனுவ்ராட் புரஷ்கார் விருதை அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனுராட் அறக்க ட்டளை அலுவலகத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அப்துல் கலாம் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், பேரன்கள் சேக்தாவூது மற்றும் சேக்சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதை பெற்று கொண்டனர்.

    Next Story
    ×