அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி சார்பில் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சி

பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.1000பேர் கலந்து கொண்டு திருப்பூர் குமரன் சிலை அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
 ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.
 ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.
Published on

திருப்பூர் : 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாநகர மாவட்டஅ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆணைப்படி திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் சண்முகம் , திருப்பூர் மாநகர மாவட்ட துணைச்செயலாளர் கனிஷ்கா சிவக்குமார் தலைமையில் 1000பேர் கலந்து கொண்டு திருப்பூர் குமரன் சிலை அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதில் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆனந்த கிருஷ்ணன் , மாவட்ட இணை செயலாளர் மஞ்சுளா, மாவட்ட பொருளாளர்- மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, பொதுக்குழுஉறுப்பினர்கள் ஜீப்ரா ரவி,அரவிந்த், ஜெயந்தி,சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் சிதம்பரம் செல்வராஜ் ,கே.சி.மயில்சாமிமற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், பல்லடம் ,அவிநாசி ஆகிய தொகுதியின் தொண்டர்கள் ,மகளிர் அணி பொறுப்பாளர்கள், ஒன்றியம், வட்ட, கிளைக்கழகம், பகுதி , நகர பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com