என் மலர்
நீங்கள் தேடியது "President Draupadi murmu"
- ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.
- பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கிவந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.
சபரிமலைக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்புகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
- ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது.
திருவனந்தபுரம்:
ஐனாதிபதி திரவுபதி முர்மு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக இருந்தது. அப்போது எல்லையில் நிலவிய போர் பதற்றம் காரணமாக அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் அவர் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது. இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கி வந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலைக்கு புறப்பட்டார்.

ஜனாதிபதி ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக பிரமடம் மைதானத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டது. அந்த தளத்தில் நேற்று வரை கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு இருக்கிறது. அதில் தான் ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் சிக்கி சரிந்ததாக தெரிகிறது.
ஜனாதிபதி வருகைக்காக நேற்று அனைத்துவிதமான ஒத்தகைகளும் நடத்தப்பட்டன. இந்தநிலையில் ஹெலிகாப்டர் தளத்தின் கான்கிரீட்டில் ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி சரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
- ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதை அளிக்கப்படுகிறது.
திருச்சி:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.
மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை வருகை தந்த அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி விருந்தளித்து உபசரித்தார்.
பின்னர் இன்று (புதன்கிழமை) காலை 9:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமான மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அதே ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு திருச்சி கொள்ளிடம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து காரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்பம் மரியாதையை அளிக்கப்படுகிறது.
அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோவிலுக்குள் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்கிறார். தொட ர்ந்து அவர் கோவில் வளாகத்தை சுற்றி பார்க்கிறார். மேலும் கோவிலில் உள்ள சிற்பங்களையும் அவர் பார்வையிடுகிறார்.
தரிசனம் முடிந்த உடன் அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதி திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு இன்று காலை 11 மணி வரை மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
- திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
சென்னை:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். நாளை மதியம் சென்னைக்கு வரும் அவர், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்கிறார்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அன்றையதினம் இரவு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஜனாதிபதி தங்குகிறார். நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திரவுபதி முர்மு திருச்சி செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செல்கிறார்.
மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதைத்தொடர்ந்து திரவுபதி முர்மு, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதித்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். திரவுபதி முர்மு பங்கேற்கும் நந்தம்பாக்கம் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதபோல அவர் கவர்னர் மாளிகையில் தங்குவதாலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஞானம் மற்றும் நல்வாழ்வின் மூலமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார்.
- தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்போம்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச்செய்தி கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம் மற்றும் நல்வாழ்வின் மூலமாக கணேச பகவான் வணங்கப்படுகிறார்.
புதிய தொடக்கங்களுக்கும், தடைகளை நீக்குவதற்கும் நாம் அவருடைய ஆசீர்வாதங்களை பெறுகிறோம். நமது சுற்றுச்சூழலை பாதுகாத்து, இந்த பண்டிகையை கொண்டாடுவோம். தூய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
- வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25-ந்தேதி, ஒவ்வொரு வருடமும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பிற மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியை அல்லாத ஒருவராக பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்தவர் பிரதமர் வாஜ்பாய் ஆவார்.
இவர் 1996-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரைக்கும், அதன்பின் 1998-ம் ஆண்டு மார்ச் 19-ந்தேதி முதல் 2004 மே 22-ந்தேதி வரைக்கும் பிரதமராக இருந்துள்ளார். மொராஜி தேசாய் அரசில் 1977 முதல் 1979 வரை வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருந்துள்ளார்.
பிரதமர் மோடி பிரதமரான பின், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25-ந்தேதி, ஒவ்வொரு வருடமும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
- ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார்.
- மக்களுக்கு சேவை செய்வதில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற ஆசீர்வதிக்கப்படுவார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஜனாதிபதிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கையும் தலைமைத்துவமும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன.
பொது சேவை, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அனைவருக்கும் நம்பிக்கை மற்றும் பலத்தின் கலங்கரை விளக்கமாகும்.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார். மக்களுக்கு சேவை செய்வதில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற ஆசீர்வதிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்தனர்.
- அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்
மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் கடந்த 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆளுநரின் செயல்கள் சட்டவிரோதம் என்று கண்டித்ததுடன் நிலுவையில் இருந்த தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தின்மூலம் தாங்களே ஒப்புதல் வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் அரசு அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடுவும் நிர்ணயித்தனர். இந்த தீர்ப்பு தொடர்பான முழு விவரமும் இன்று வெளியாகியது.
இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பு விவரத்தில், "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய வரலாற்றில் நாட்டின் ஜனாதிபதியின் செயல்பாடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கட்டளையிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- போர்ச்சுகல் அதிபரின் அழைப்பை ஏற்று 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு செல்லும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.
- கடைசியாக முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடந்த 1998-ம் ஆண்டில் போர்ச்சுகல் சென்றிருந்தார்
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கு பயணமாகியுள்ளார்.
இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு, முதல்கட்டமாக இன்று போர்ச்சுகல் சென்றடைந்துள்ளார்.
பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் ஜனாதிபதியை போர்ச்சுகலில் உள்ள இந்திய தூதர் புனீத் ஆர் குண்டல் மற்றும் இந்தியாவில் உள்ள போர்ச்சுகல் தூதர் ஜோவா ரிபேரோ டி அல்மீடியா ஆகியோர் வரவேற்றனர்.
இங்கு தனது 2 நாட்கள் பயணத்தை அங்கு முடித்து கொண்டு அடுத்தப்படியாக சுலோவாகியாவுக்கு செல்கிறார். அங்கு அவர் சுலோவாகியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் ராபர்ட் பிகோ மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ரிச்சர்ட் ராசி ஆகியோரை சந்திக்க உள்ளார்.
போர்ச்சுகல் அதிபரின் அழைப்பை ஏற்று 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு செல்லும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார். முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடந்த 1998-ம் ஆண்டில் போர்ச்சுகல் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பயணங்களின்போது இந்தியா-போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா இடையே மூலோபாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
- போர்ச்சுகல் அதிபரின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு செல்கிறார்.
- சுலோவாகியாவின் நிட்ராவில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆலைக்கு செல்ல உள்ளார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாள் அரசுமுறை பயணமாக போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா நாடுகளுக்கு செல்ல உள்ளார். இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு, முதல்கட்டமாக இன்று போர்ச்சுகல் செல்கிறார்.
இரு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க உள்ளார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களையும் சந்திக்க உள்ளார்.
சுலோவாகியாவின் நிட்ராவில் உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆலைக்கு செல்ல உள்ளார்.
போர்ச்சுகல் அதிபரின் அழைப்பை ஏற்று 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு செல்லும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார். முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடந்த 1998-ம் ஆண்டில் போர்ச்சுகல் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ந்தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு 2018-2019, 2019-2020-ம் ஆண்டு பட்டம் முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2020-21, 2021-22-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவிகளுக்கு ஜனவரி மாதம் பட்டமளிப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி பட்டமளிப்பு விழா நடத்தி சென்றுள்ள நிலையில் தற்போது காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வருகை தருவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்காக உறுதியான தகவல் இன்னும் வெளிவராத நிலையில் இன்னும் ஓரிருநாளில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.
ஜனாதிபதியாக பதியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்திற்கு குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளதால் மாணவ-மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.
- மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் சில பகுதிகளை வாசிக்காமல் தவித்தார்.
இதனால் கவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதற்கிடையே சட்டமன்றத்தில் கவர்னர் உரையின் போது நடந்த நிகழ்வு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து கொடுத்தனர்.
அக்கடிதத்தில் அரசியல் சாசன பகுதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும் அவர் தமிழ்நாடு அரசுடன் ஒரு கருத்தியல் அரசியல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதுபற்றி பார்ப்பதாக தி.மு.க. குழுவினரிடம் தெரிவித்தார்.
கவர்னர் உரை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பி வைத்துள்ளார்.
மு.க.ஸ்டாலினின் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஜனாதிபதி தனது குறிப்புடன் அக்கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர்.






