என் மலர்
நீங்கள் தேடியது "வேலூர் தங்க கோவில்"
- சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.
- ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோரன்கள் பறக்க தடை செய்யப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வருகை தந்தார்.
அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மேயர் சுஜாதா ஆகியோர் வரவேற்றனர்.
கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 1,700 கிலோ வெள்ளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விநாயகரையும், 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாலட்சுமியையும் தரிசனம் செய்தார்.
சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.
பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நட்டார். சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். தங்க கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.
ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோரன்கள் பறக்க தடை செய்யப்பட்டது. வேலூர், அணைக்கட்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தரிசனம் முடிந்ததும் ஜனாதிபதி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.
- 880 கேரட் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாகும்.
வேலூர்:
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் 1,700 கிலோ வெள்ளியால் ஸ்ரீசக்தி கணபதி விக்கிரகம் வடிவமைத்து கற்கோவில் கட்டப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது 880 கேரட் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வைடூரிய கிரீடத்தை நேற்று சக்திஅம்மா, ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.
இதுவரை உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல்லாக 700 கேரட் அளவிலான கல்லை கருதுகின்றனர்.
ஆனால் தற்போது ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைடூரிய கல்தான் உலகிலேயே மிகப்பெரிய கல்லாகும்.
இதன் தோராய மதிப்பு ரூ.5 கோடி இருக்கும். வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாகும். வைடூரிய கிரீடம் அணிந்த ஸ்ரீசக்தி கணபதியை நாம் தரிசிக்கும்போது பலவகையான தோஷங்கள் நீங்கி, மன அமைதி, ஞானம், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






