என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வேலூர் தங்க கோவிலில் உள்ள சக்தி கணபதிக்கு உலகிலேயே பெரிய வைடூரிய கிரீடம்
    X

    வேலூர் தங்க கோவிலில் உள்ள சக்தி கணபதிக்கு உலகிலேயே பெரிய வைடூரிய கிரீடம்

    • 880 கேரட் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாகும்.

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் 1,700 கிலோ வெள்ளியால் ஸ்ரீசக்தி கணபதி விக்கிரகம் வடிவமைத்து கற்கோவில் கட்டப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் தற்போது 880 கேரட் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லால் ஆன வைடூரியம் பதிக்கப்பட்டு, தங்கத்தால் கிரீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வைடூரிய கிரீடத்தை நேற்று சக்திஅம்மா, ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.

    இதுவரை உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல்லாக 700 கேரட் அளவிலான கல்லை கருதுகின்றனர்.

    ஆனால் தற்போது ஸ்ரீசக்தி கணபதிக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைடூரிய கல்தான் உலகிலேயே மிகப்பெரிய கல்லாகும்.

    இதன் தோராய மதிப்பு ரூ.5 கோடி இருக்கும். வைடூரியம் கேது பகவானின் சக்தியை வெளிப்படுத்துவதாகும். வைடூரிய கிரீடம் அணிந்த ஸ்ரீசக்தி கணபதியை நாம் தரிசிக்கும்போது பலவகையான தோஷங்கள் நீங்கி, மன அமைதி, ஞானம், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×