என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "information"
- தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும்.
- கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது.
பொன்னேரி:
பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை நம்பி சுற்றி உள்ள ஏராளமான மீனவ கிராமமக்கள் மீன்பிடித்து வருகிறார்கள். பழவேற்காட்டில் கடலும் ஏரியும் சந்திக்கும் இடமான முகத்துவாரம் வழியாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள், இறால், நண்டுகள் கிடைத்து வருகின்றன.
தினமும் 6மணி நேரத்திற்கு ஒருமுறை கடல் நீர் ஏரிக்கும் அடுத்த ஆறு மணி நேரம் ஏரி நீர் கடலுக்கும் செல்லும். அப்போது கடல் வாழ் உயிரினங்கள் நீர் ஏற்றத்தின் போது ஏரிக்குள் நுழைவதும் இனப்பெருக்கம் செய்து விட்டு கடலுக்குள் வெளியேறுவதும் இயற்கையாக நடக்கும் நிகழ்வு ஆகும். இந்நிலையில் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது .இதனால் கடல் நீர் ஏரிக்கும் ஏரி நீர் கடலுக்கும் செல்வது தடைபட்டதோடு ஏரியின் ஆழம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பழவேற்காட்டில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ரூ.27 கோடியில் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் மத்திய வனவிலங்கு துறை அனுமதி கொடுக்காததால் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. இதனால் தற்போது முகத்துவார பகுதி முழுவதும் மணலால் அடைபட்டு மீனவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதற்கிடையே பழவேற்காடு முகத்துவார பகுதியில் கற்கள் கொட்டி முகத்துவார சுவர் கட்ட மத்திய வனவிலங்கு வாரியம் அனுமதி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முகத்துவாரத்தின் இருபுறமும் தலா 160 மீட்டர் மற்றும் 150 மீட்டர் என 2 சுவர்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
எனவே விரைவில் பழவேற்காடு முகத்துவார பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, முகத்துவாரத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. நீர் பரிமாற்றம் இல்லாததால், கடல் உயிரினங்கள் முட்டையிட ஏரிக்கு வராததால் மீன்பிடித்தல் குறைந்து வருகிறது. முகத்து வார பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்றார்.
- அண்ணா பஸ் நிலைய பகுதியில் 25-ந் தேதி மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 25-ந் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்து வக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி அரசு ராசாசி மருத்துவ மனை, வைகை வடகரை, கோரிப்பளையம், ஐம்பு ரோபுரம், மாரியம்மன் கோவில்தேரு, சின்னக் கண்மாய் தெரு, ஓ.சி.பி.எம். பள்ளி, கான்சாபுரம், தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, இஸ்மாயிஸ்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50அடி ரோடு, குலமங்கலம் ரோடு, மீனாட்சிபுரம், சத்திய மூர்த்தி 1,2,3,4,5,6,7-வது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், நரிமேடு மெயின்ரோடு. சாலை முதலியார் ரோடு, நேரு பள்ளி பகுதிகள்.
அன்னைநகர், எல்ஐஜி காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தேரு கே.டி.கே. தங்கமணி தெரு, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா அண்ணாநகர், 80அடி ரோடு, அம்பிகா தியேட்டர் சுற்றியுள்ள பகுதிகள், சுந்தரம் தியேட்டர் ரோடு, மானகிரி, சதா சிவநகர், அழகர் கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யா நகர், மின்நகர், கொடிக்குளம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், அன்பு நகர், தாசில்தார் நகர், மருது பாண்டியர் தெரு, எல்.கே.டி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
இந்த தகவலை வடக்கு செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2222 காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு 7.1.2024 நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும், டெட் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 17.11.2023 அன்று முதல் நடைபெற்று வருகிறது.இப்பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு எடுக்கும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு மாதிரி வினாத்தாட்கள் தயார் செய்து தர வேண்டும்.
போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும். பயிற்றுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக்குறிப்பு, மாதிரி வினா மற்றும் தொடர்புடைய பாடத்தின் உடன் எடுத்து வர வேண்டும். மேலும், 10-15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் மாதிரி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மேற்கண்ட நிபந்தனை களுக்குட்பட்டு, விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரகுறிப்பு மற்றும் கல்விசான்று நகல்களுடன் 22.11.2023 மற்றும் 23.11.2023 ஆகிய 2 நாட்களில் அலுவலக நேரத்தில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவனத்தில் நேரடி ஆய்வு
- கோவை பிரஸ் காலனி பகுதியில் மேலும் ஒரு ஆய்வகம் அமைக்க 30 ஏக்கர் நிலம் வாங்க திட்டம்
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாஸ்டியர் இன்ஸ்டியூட் ஆரம்பத்தில் ரேபிஸ் எனும் வெறிநாய்கடிக்கான தடுப்பூசி மற்றும் கக்குவான், ரண ஜன்னி உள்ளிட்ட முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் இடமாக இருந்தது.
இந்நிலையில் இங்கு மத்திய அரசின் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் முத்தடுப்பு மருந்துகள் தயாரிக்க 137 கோடி ரூபாயில் உலக தர கட்டுமானம் மற்றும் உள் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பர்வீன் பவார் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கு மருந்துகள் தயாரிக்கப்படும், இடங்களை பார்வையிட்டு ஆய்வக விவரங்களை கேட்டறிந்தார். பின்பு அவர் கூறியதாவது:-
குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் 137 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட் 19 தடுப்பூசி ஆய்வகமாக செயல்பட்டது. இந்த ஆய்வகம் பல உயிர்காக்கும் மருந்துகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வகத்தை பலப்படுத்தும் வகையில் மற்றுமொரு ஆய்வகம் கோவையில் பிரஸ் காலனி பகுதியில் அமைக்க 30 ஏக்கர் நிலத்தை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது இதனால் மேலும் பல அரியவகை உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.
இப்பணிகளுக்காக பல ஆண்டுகளாக பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. அவர்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குன்னூர் உப்பாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி பாரதி பர்வீன் பவார், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான காப்பீடு அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 27 கோடி பேருக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 27 ஆயிரம் மருத்துவமனைகளிலும் இதனை செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 53 லட்சம் பேருக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது
- இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
2023-24-ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் சம்பா பயிர் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும்பொழுது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் இப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நெல் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் கடந்த 15-ந் தேதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனை மேலும் நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பயிர் காப்பீடு செய்ய வருகிற 22-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு ள்ளது.
எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் சம்பா பயிரிட்டுள்ள அனைத்து விவசாயிகளும் நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி வரும் 22-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி மண்ணச்ச நல்லூர் அருகே உள்ள மேல காவல் கார தெருவை சேர்ந்தவர் மணிமேகலை என்கிற மணிகண்டன் (வயது 30) திருநங்கையான இவர் திருச்சி கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே நேற்று இரவு நடந்து சென்றார்.
பின்னர் திடீரென மாயமான அவர் இரவு 9 மணி அளவில் அங்குள்ள முட்புதரில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சக தோழி இறந்த தகவல் அறிந்த திருநங்கைகள் நூற்றுக்கு மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கடந்த கத்தி மற்றும் ஆணுறைகளை கைப்பற்றினர்.
கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மணிமேகலை கடந்த 4 ஆண்டுகளாக இரவு நேரங்களில் அதே பகுதியில் நடமாடி வந்துள்ளார்.
ஆகவே அவரை புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பின்னர் ஏற்பட்ட தகராறில் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அந்த நபர் அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபராக இருக்கலாம் என கருதுகிறார்கள். ஆகவே மணிமேகலையின் தோழிகள் மூலமாக கொலையாளியை துப்பு துலக்கி வருகின்றனர்.
பொதுவாக மணிமேகலை மட்டுமல்லாமல் வேறு திருநங்கைகளும் அந்த ஆற்றுப் பாலத்தில் இருப்பார்கள். ஆகவே மணிமேகலைக்கு நெருக்கமான நபர்கள் யார்? யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வருகிற 18-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.
- மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் உள்வட்டம் தெற்குத்தரவை (நியாய விலைக்கடை), ராமேசுவரம் வட்டம்-புதுரோடு- (நியாய விலைக்கடை), திருவா டானை வட்டம் - மல்லனூர் (நியாய விலைக்கடை), பரமக்குடி வட்டம் - கள்ளிக்குடி (நியாய விலைக்கடை), முது குளத்தூர் வட்டம் - புல்வாய்க்குளம் (நியாய விலைக்கடை), கடலாடி வட்டம் - பிள்ளையார்குளம் (பஞ்சாயத்து இ-சேவை மையம்), கமுதி வட்டம் - பாக்குவெட்டி (நியாய விலைக்கடை) கீழக்கரை வட்டம் - நேருபுரம், (நியாயவிலைக்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம் - மோர்ப்பண்ணையில் (நியாயவிலைக் கடை) குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெறும்.
இதில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப் பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத் திருத்தம், புகைப்படம் பதி வேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற் கொள்ளப்படும்.
மேலும் நியாய விலைக்கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறை பாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத் திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டை தாரர்கள் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலை மையில் செயல்படும் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழு மூலம் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க மாதம் இருமுறை கூட்டாய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி செல்லா, இடை நின்ற குழந்தைகள் பிற் காலத்தில் குழந்தை தொழி லாளர்களாக மாறுவதை தடுக்கும் வகையில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, காவல் துறை ஆள்கடத்தல் பிரிவு, மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு ஆகியோர் அடங்கிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் கடந்த 13-ந்தேதி சிவகங்கை மற்றும் மானாமதுரை, 18-ந்தேதி இளையான்குடி புதூர் மற்றும் 20-ந்தேதி
திருப்பாச்சேத்தி அருகில் டி.வேலாங்குளம் பகுதிகளில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இளையான்குடி புதூர் பகுதியில் 4 பள்ளி செல்லா இடைநின்ற மாணவ-மாணவிகள், மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்த 1 மாணவி ஆகி யோரை அவர்கள் வீட் டிற்கு சென்று அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
மேலும் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லா இடைநின்ற 1 மாணவியை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல குழுவில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு இல்லத்தில் சேர்க்கப் பட்டுள்ளார். இதுபோன்று குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குழுவின் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளிச்செல்லா இடை நின்ற குழந்தைகளை கண்ட றிந்து பள்ளிகளில் சேர்க்கப் பட்டு கல்வி கற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பழனிச் சாமி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு நேரில் சென்றார்.
- பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த நடுவீரப் பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 27). இவருக்கும் பிரியா என்ப வருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திரு மணம் நடைபெற்றது. தற்போது பிரியாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று பழனிச் சாமி தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு நேரில் சென்றார். பின்னர் தனது மனைவி பிரியாவிடம் தீபாவளி சீட்டு கட்டுவதற்கு பணம் கேட்டதாக கூறப்படு கிறது ஆனால் பிரியா பணம் தராததால் பழனிச் சாமி மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டில் பழனிச்சாமி தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கிடந்தார். இத்தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்