என் மலர்
நீங்கள் தேடியது "தகவல்"
- இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- காற்றின் வேகம் காரணமாக வயர்கள் உரசியதில் தீ பிடித்து இருக்கலாம் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனர்.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் வேப்பமூட்டில் மாநகராட்சி பூங்கா உள்ளது.
டிரான்ஸ்பார்மரில் தீ
பூங்காவின் பின் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் தீ பொறிகள் கிளம்பி தீ பிடித்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் அலறியடித்தபடி நாலா புறமும் ஓடினர்.
இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
காரணம் என்ன?
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் காரணமாக வயர்கள் உரசியதில் தீ பிடித்து இருக்கலாம் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
- சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வல்லம்:
தஞ்சை வடக்குவாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 36).
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்று உள்ளது.
சம்பவத்தன்று தஞ்சை சுந்தரபாண்டியன் நகர் பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளபெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பையில் இருந்து ரெட்டிப்பாளையம் சுடுகாடு அருகே சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் 6 பேரையும் போலீசார், கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தஞ்சை பொந்தேரிபாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(வயது 28), சுந்தரபாண்டியன் நகரை சேர்ந்த முத்துக்குமார்(28), முத்துக்குமாரின் தம்பி பங்கஜ்குமார்(23), பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (20), காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த மாதவன்(25) பிருந்தாவன் பகுதி இ.எம்.ஜி.நகரை சேர்ந்த அபிசாய்(25) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நேற்று இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என தொழிலாளர் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
- மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ். தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
முதலமைச்சரின் வழிகாட்டு தலின்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம், 2021-ன்படி, கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபு ரியும் அனைத்து தொழிலாளர்களும் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி அச்சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்து தரப்பட வேண்டும் என்று அந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிட ப்பட்டு உள்ளது.
மேற்கண்ட சட்ட திருத்தத்தை கடைப்பி டிக்காத விருதுநகர் மாவட்டத்தில் 7 நிறுவன உரிமையாளர்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அக்டோபர் மாதம் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ், கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக, விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஆட்சி எல்லைக்கு உட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்கள் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பணியாளர்க ளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 5 கல்வி நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வில் தொழி லாளர் உதவி ஆய்வர்கள் செல்வராஜ், பாத்திமா, முருகள், துர்கா, சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
- மழைசேதம் குறித்து அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 1.10.2022 முதல் தொடங்கி உள்ளது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலமாக உள்ளதால் கடந்த 1 மாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ள கண்மாய், குளம், குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளது. இந்த நேரத்தில் வடகிழக்கு பருவ மழையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கு விருது நகர் மாவட்ட நிர்வாக த்தால் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையால் தங்கள் பகுதிகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து விருதுநகர் மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை அவசர கட்டுபாட்டு அறை 1077 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.
அருப்புக்கோட்டை வட்டம், பாலையம் பட்டி மேலத்தெருவை சேர்ந்த சரத்குமார் என்பவரின் குழந்தைகள் சித்தார்த் (வயது 8) மற்றும் சந்திரமணி (10) ஆகியோர் அந்த ஊரில் உள்ள ஊரணியில் குளிக்க சென்ற போது தவறி விழுந்ததில் இறந்து விட்டனர். இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கண்மாய், குளம் மற்றும் குட்டைகள் முழுவதுமாக நீர் நிரம்பியுள்ளதால் குளிப்பதற்கு செல்ல வேண்டாம்.
தங்கள் குழந்தைகளை கண்மாய்கள், குளங்கள், ஓடைகள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் இருக்கும் இடங்களுக்கு குளிப்பதற்கோ அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ அனுப்ப வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரேசன் கடை விற்பனையாளர் பணிக்கு 14-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
- மேலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14.11.2022 மாலை 5.45 மணி ஆகும்.
விருதுநகர்
விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனை யாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியி டங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக (ஆன்லைன்) மூலம் கடந்த 13.10.2022 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
மேலும், இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 14.11.2022 மாலை 5.45 மணி ஆகும். எனவே, விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நேரத்தில் எழும் தொழில்நுட்ப பிரச்சினைகளை தவிர்க்க, முன்கூட்டியே இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார்.
- தன்னுடைய தாய் வீட்டு வேலை செய்ய சொல்லியதாக கூறியுள்ளார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி ஜின்னா தெருவை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50).
இவர் மலேசியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செளவுதா பேகம் (வயது 40).இவருடைய மகள் ஹாரிஸா (வயது 13).
இவர் ராஜகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவி ஹாரிஸா வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய தாயார் மகள் வீட்டிற்கு வரவில்லை என்று பள்ளிக்கு தேடி வந்துள்ளார்.
அப்பொழுது ஹாரிஸா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்களும், பெற்றோர்களும், ஊர் மக்களும் பள்ளி முன்பு கூட்டமாக குவிந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பாபநாசம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
சம்பவ இடத்திற்கு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப் - இன்ஸ்பெக்டர்கள் இளமாறன், குமார், மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து சோதனை செய்த போது அவர் பள்ளி முடிந்து பள்ளியிலிருந்து நடந்து சென்று ராஜகிரி பகுதியில் பஸ்சில் ஏறி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
நேற்று இரவு பள்ளி மாணவி ஹாரிஸா கும்பகோணத்தில் பஸ்சில் ஏறி சென்னைக்கு சென்று ள்ளார். அங்கு கீழ்பாக்கத்தில் இறங்கியுள்ளார்.
அங்கு தனியாக வந்து கொண்டிருந்த பள்ளி மாணவி ஹாரிஸாவை பார்த்த சென்னை பெருநகர காவல் ரோந்து பணி போலீசார்கள் அந்த மாணவியை மீட்டு விசாரணை செய்ததில் தன்னுடைய தாயார் வீட்டு வேலை செய்ய சொல்லி கூறியதாக கூறியுள்ளார்.
அதனால் கோபத்தில் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னைக்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார். உடனே குரோம்பே ட்டையில் உள்ளஅவரது சித்தப்பாவை வரவழைத்து அவரிடம் சென்னை கீழ்ப்பாக்கம் போலீசார்மாணவி ஹாரி சாவை ஒப்படைத்தனர்.
பின்னர் மகள் கிடைத்த வுடன் ராஜகிரியிலிருந்து அவருடைய பெற்றோர்கள், உறவினர்கள் ஹாரிஸாவை அழைத்து வரசென்னைக்கு விரைந்துள்ளனர்.
- மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல இயங்கும்.
- இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
மதுரை
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை-விழுப்புரம் ெரயில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- மதுரை மேற்கு மண்டலத்தில் வருகிற 13-ந் தேதி குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது
- இந்த தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்களின் குறை களை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்க ளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலம் 5-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
இதில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு.
மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, பாலாஜி நகர், அவனியாபுரம்- அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து விரைவில் சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- வயல்களுக்கு செல்லும் வகையில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூரில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டிலான ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகளையும், கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளையும், கொளத்துாரில் பகுதிநேர நியாயவிலைக் கடையினையும், புதுக்குறிச்சியில் முழுநேர நியாயவிலைக்க டையினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
குன்னம் சட்டமன்றத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து வயல்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைத்துதர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கைகள் எதற்கும் கடந்தகால அரசு செவிசாய்க்க வில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அரசுப்பேருந்துகளில் கட்டண உயர்வு என்ற பேச்சுக்க இடமில்லை. டீசல் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் இருக்கும்போதும், மக்களின் மீது அந்த சுமையை வைக்காமல், அரசே அந்த சுமையினை ஏற்றுக்கொள்ளும், பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது மக்களின் நலன் காக்கும் அரசு, மக்களுக்கான அரசு எனவே, அரசுப்பேருந்துகளின் கட்டணம் உயர்வு என்ற பொய்யான செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர்.
- இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே மரூர்மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது மின்சாரம் தாக்கி செல்வராஜ் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் குடும்ப த்தினர் இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செ ல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறி த்து போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உசிலம்பட்டியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
- இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (20-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலந்து கொள்கிறார்.
எனவே உசிலம்பட்டி மின் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம். இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.
- பண்ருட்டி பகுதிகளில் ஓட்டல்கள், லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.
- உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
கடலூர்:
பண்ருட்டியில் லாட்ஜ்களில்காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சிறப்புச்சோதனையில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதைப் பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.






