என் மலர்
நீங்கள் தேடியது "individual"
- கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
- ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையை அடுத்துள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (42) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கணவர் முத்துப்பாண்டி கண்டித்துள்ளார்.
இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கணவன்-மனைவி இருவரும் பிரிந்தனர். அதன்பின் ராஜேஸ்வரி தனது தவறை உணர்ந்து இனிமேல் பரமசிவத்துடன் பழக மாட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து கணவன், மனைவி மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் ராஜேஸ்வரியிடம் பேச பரமசிவம் முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு, இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த பரமசிவம் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டு திண்ணையில் தூங்கி இருந்த ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு பரமசிவம் அங்கிருந்து தப்பினார்.
இது தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடி தலைமறைவாகிய பரமசிவத்தை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
அவர் வெளியூருக்கு எங்காவது தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே பரமசிவத்தை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் பரமசிவத்தை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 180 மி.லி. கொண்ட 96 மது பாட்டில்கள் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது.
- காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் பெருங்கடம்பனூர் - சிக்கல் சாலையில் உள்ள குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் காரைக்கால் பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட வெளி மாநில 90மிலி கொண்ட 1920 மது பாட்டில்களும், 180மிலி கொண்ட96 மது பாட்டில்களும் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயமும் இருந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் வந்த நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த தென்னரசன் (வயது 57), வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெரு காளியப்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த யாசர் அரபாத் (35), காரைக்கால், தருமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் (47), காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த கருணாகரன் (43) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
- பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
- சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வல்லம்:
தஞ்சை வடக்குவாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 36).
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்று உள்ளது.
சம்பவத்தன்று தஞ்சை சுந்தரபாண்டியன் நகர் பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளபெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பையில் இருந்து ரெட்டிப்பாளையம் சுடுகாடு அருகே சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் 6 பேரையும் போலீசார், கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தஞ்சை பொந்தேரிபாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(வயது 28), சுந்தரபாண்டியன் நகரை சேர்ந்த முத்துக்குமார்(28), முத்துக்குமாரின் தம்பி பங்கஜ்குமார்(23), பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (20), காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த மாதவன்(25) பிருந்தாவன் பகுதி இ.எம்.ஜி.நகரை சேர்ந்த அபிசாய்(25) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நேற்று இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அர்ஜுனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கீரிமேடு பகுதியில் புதுவை மாநில மதுபானங்கள் விற்பனை செய்வதாக எஸ்.பி. ஸ்ரீ நாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அவரது ஆணையின் படி டி.எஸ் பி. பார்த்திபன் தலைமையிலான தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் காவலர்கள் கிரிமேடு பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது கிரிமேட்டை சேர்ந்த அர்ஜுனன் (வயது 42) என்பவர் வீட்டின் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்தார். அவரிடம் இருந்து 41 புதுவை மது பாட்டில்கள், 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அர்ஜுனன் மீது வழக்குப் பதிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரபு செய்து கைது செய்தார்.