search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Informative"

    • நாய் சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அண்ணா சத்யா தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதற்கிடையே அந்த நாய் நேற்று இரவு தண்ணீர் குடிப்பதற்காக அவரது வீட்டு தோட்டத்தில் இருந்த சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது.

    பின்னர் நாயின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கோபாலகிருஷ்ணன் இது குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீய ணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர். நாயை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.

    • பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
    • சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    வல்லம்:

    தஞ்சை வடக்குவாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 36).

    இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்று உள்ளது.

    சம்பவத்தன்று தஞ்சை சுந்தரபாண்டியன் நகர் பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கள்ளபெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பையில் இருந்து ரெட்டிப்பாளையம் சுடுகாடு அருகே சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் 6 பேரையும் போலீசார், கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் தஞ்சை பொந்தேரிபாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(வயது 28), சுந்தரபாண்டியன் நகரை சேர்ந்த முத்துக்குமார்(28), முத்துக்குமாரின் தம்பி பங்கஜ்குமார்(23), பள்ளியக்ரஹார‌ம் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (20), காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த மாதவன்(25) பிருந்தாவன் பகுதி இ.எம்.ஜி.நகரை சேர்ந்த அபிசாய்(25) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நேற்று இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    ×