search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance Camp"

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் மனு அளித்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சிவனுபாண் டியன் (தலைமையகம்), சவுந்தரராஜன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு பிரிவு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை போலீஸ் சூப்பி ரண்டுவிடம் வழங்கினர்.

    பெறப்பட்ட மனுக்கள் குறித்து அவர் விசாரணை மேற்கொண்டார் மேலும் சில மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

    இந்தமுகாமில் நிலப்பிரச்சினை, பணப்பிரச்சினை தொடர் பாக ஏராளமானவர்கள் மனு அளித்திருந்தனர்.

    • நாளை நடக்கிறது
    • பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது

    வேலூர்:

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) நிறுவனம் சார்பில், நாளை (செவ்வாய்க்கிழமை) வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் குறைதீர்வு முகாம் நடக்கிறது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் காட்பாடி மாதா கோவில் பின் தெரு, க்ளூனி கான்வென்ட் 14/2, (காமராஜ் ஜூஸ் கடை அருகில்), திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவையில் உள்ளஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் உள்ள, பிளெஸ்ஸோ மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் குறைதீர்வு முகாம் நடக்கிறது. இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை குறைதீர் முகாம் நடக்கிறது.

    இதில், உறுப்பினர்களுக்கான சேவைகள், குறைகளை நிவர்த்தி செய்தல், முதலா ளிகள், பணியாளர்கள், ஒப்பந்ததா ரர்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியர்க ளுக்கான இணையதள சேவைகள், முதலாளி கள், ஊழியர்க ளுக்கான சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடர்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு, ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பி த்தல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளி களிடமிருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், மின்- நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்த தாரர்களின் விவரங்களைப் பதிவேற்றுதல் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • மாவட்ட வருவாய் அலுவலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் 2 மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார்.

    மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மாற்றுத்திற னாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளிகள் 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.4 லட்சமும், .இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிக ளுக்கான ஈமச்சடங்கு தொகை ரூ.17 ஆயிரம் வீதம் 8 நபர்களுக்கு ரூ.1.36 லட்சம் என மொத்தம் ரூ.5.36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • 250 மனுக்கள் பெறப்பட்டது

    சிவகங்கை

    திருப்பத்தூரில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையம், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர் பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணைய பதிவாளர் கோமதி மனோஜா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் இருந்து 250 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களில் 8 மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செவித் திறன் கருவி, மடக்கு சக்கர நாற்காலி, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், காவல்துறை, குழந்தைகள் நலக்குழு, இளைஞர்; நீதிக் குழுமம், சட்டப் பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    தேசிய குழந்தை உரிமை கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நாளை (14-ந் தேதி) திருப்பத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    இதில், காணாமல் போன குழந்தைகள், கடத்தி செல்லப்பட்ட குழந்தைகள், நிதி ஆதரவு (மாதம் ரூ.4000 வீதம்) குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்> ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் தேவைப்படும் குழந்தைகள், குழந்தை திருமணம், கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், சட்ட உதவி, குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளார், கொத்தடிமை குழந்தைகள், பிச்சை எடுக்கும் குழந்தைகள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள், சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள், போதை பொருள் பயன்பாடு ஆகியவை தொடர்பாக பொதுமக்கள், குழந்தைகள் இம்அமர்வில் கலந்து கொண்டு நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.
    • இந்த மாதம் நாளை மறுநாள் 2-வது சனிக்கிழமை நடை பெறும். இக்குறைதீர் முகாமில் சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பொது விநியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த மாதம் நாளை மறுநாள் 2-வது சனிக்கிழமை நடை பெறும். இக்குறைதீர் முகாமில் சேவைகளை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

    இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம்,புதிய குடும்ப அட்டை அல்லது நகல்அட்டை கோரி விண்ணப்பித்தல் மேற்கொள்ளலாம்.

    குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொதுவிநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் அளித்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கச் செல்லும் பயனாளர்கள் உரிய ஆவணங்களுக்குரிய ஆதார் அட்டை, பிறப்பு அல்லது இறப்பு சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள் ஆகியவற்றினை எடுத்து செல்ல வேண்டும்.கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட கைபேசியினை கொண்டு செல்ல வேண்டும். இந்த முகாம் மற்றும் பொது விநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 93424 71314-க்கு தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது.
    • பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெறுகிறது. அதன்படி அவினாசி தாலுகாவில் சேவூர் கிராமத்திலும், தாராபுரம் தாலுகாவில் சூரியநல்லூர் கிராமத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் துங்காவி கிராமத்திலும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்திலும், உடுமலை தாலுகாவில் கணபதிபாளையம் கிராமத்திலும், ஊத்துக்குளி தாலுகாவில் விருமாண்டம் பாளையம் கிராமத்திலும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    காங்கயம் தாலுகாவில் சேனாபதி பாளையம் கிராமத்துக்கு வேலப்ப நாயக்கன் வலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அனைத்து குடிமை பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் செயற் பொறியாளர் வளன்அரசு மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    வள்ளியூர்:

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வள்ளியூர் செயற் பொறியாளர் அலுவ லகத்தில் நடைபெற்றது. நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வள்ளியூர் செயற் பொறி யாளர் வளன்அரசு மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசுகையில், நெல்லை, தென்காசி மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை நாட்களில் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணியில் இருந்து மின் தடங்கல் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்கு வதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வனத்துறையுடன் இணைந்து தொடர் ஆய்வு பணிகளை நடத்தி வன விலங்குகளால் மின் பாதைகள் மற்றும் மின் கம்பங்கள் சேதமாகி இருந்தால் உடனடியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டார். வள்ளியூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

    • ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 512 மனுக்கள் பெறப்பட்டன.
    • துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 512 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு நிவாரணத் தொகையாக 2 பயனாளி களுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை, ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்கள், 2 பயனாளி களுக்கு சலவை பெட்டி களும் என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாநகராட்சி சார்பில் 5-ந்தேதி குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் 12.30 வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 5-ந்தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. மண்டலம் 4-ல் உள்ள வார்டுகள் செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவத நல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லெட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளி வீதி, கீரைத்துறை, வில்லா புரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டு பகுதி மக்கள் பங்கேற்கலாம்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெற இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவ கங்கை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2-வது செவ்வாய்கி ழமை சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

    அதில் முதல்-அமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இ-சேவை மையம் மூலமாக விண்ண் பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை ரசீதுகள் கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளி கள் ஒப்புகை ரசீதுடன் கூடிய இணைய வழி விண்ணப்பத்துடனும், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத் தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளும், வைப்புத்தொகை பத்திர நகல், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக முகப்பு நகல், பயனாளியின் (தாய் மற்றும் மகள்) 2 பாஸ்போர்ட் புகைப்படம் ஆகிய உரிய சான்றுகளுடன், இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு, 91500 57749 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
    • இந்த தகவல் மதுரை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்க ளுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற

    22-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

    மண்டலம் 2 (வடக்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகள்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு காணலாம்.

    இந்த தகவல் மதுரை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×