search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
    X

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட காட்சி.

    தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

    • தூத்துக்குடி மாவட் டத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது
    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்து திருப்தியடையாத 45 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 16 மனுதாரர்கள் என மொத்தம் 61 பேர் தங்கள் குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட் டத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    2 வாரங்களுக்கு ஒருமுறை புதன்கிழமைகளில் முகாம் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர விட்டுள்ளார். அதன்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவல கத்தில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்து திருப்தியடையாத 45 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 16 மனுதாரர்கள் என மொத்தம் 61 பேர் தங்கள் குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் உடனடியாக விசார ணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    Next Story
    ×