search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sp office"

    • குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்–ப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய 5 உட்கோட்டங்களிலும் காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 22 மனுக்கள் மற்றும் உட்கோட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 15 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
    • இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர் ஆருண் (வயது 21). கல்லூரி மாணவர். இவரது உறவினர் ஆபிரகாம் (19).

    அரிவாள் வெட்டு

    நேற்று முன்தினம் இவர்கள் ஊரின் வடக்கே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆருணை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது.

    தகவலறிந்து இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆருணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அரி வாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் தாழையூத்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கொலை முயற்சி, தீண்டாமை பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், இளைஞரணி முத்துப்பாண்டி, தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் மற்றும் பலர் வந்தனர். பின்னர் அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் எங்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

    • தூத்துக்குடி மாவட் டத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது
    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்து திருப்தியடையாத 45 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 16 மனுதாரர்கள் என மொத்தம் 61 பேர் தங்கள் குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட் டத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    2 வாரங்களுக்கு ஒருமுறை புதன்கிழமைகளில் முகாம் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர விட்டுள்ளார். அதன்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவல கத்தில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்து திருப்தியடையாத 45 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 16 மனுதாரர்கள் என மொத்தம் 61 பேர் தங்கள் குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் உடனடியாக விசார ணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    • நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • பணிகள் முடியும் வரை எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலையில் மட்டும் மின் வினியோகம் இருக்காது

    நெல்லை:

    நெல்லை நகர்ப்புறக் கோட்டத்தில் சமாதானபுரம் பிரிவுக்குட்பட்ட எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பத்தினை அகற்ற நெல்லை மாநகராட்சி கமிஷனர் விடுத்த வேண்டுகோள் விடுத்ததையடுத்து மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி மின்கம்பத்தை மாற்றி அமைக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மின்கம்பம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மேற்பார்வை மின் பொறியாளர்குருசாமி, நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி, பாளையங்கோட்டை உபகோட்ட உதவி செயற் பொறியாளர் எட்வர்ட்பொன்னுசாமி, உதவி மின் பொறியாளர்கள் வீரபுத்திரகுமார், முத்துராமலிங்கம் பார்வையிட்டனர்.

    மேலும் இந்த பணிகள் முடியும் வரை எஸ்.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள சாலையில் மட்டும் மின் வினியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் இன்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் மனு அளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அலுவலகம் ஈரோடு வ.உ.சி. பார்க் அருகே பவானி மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் மொத்தம் 1180 உறுப்பினர்கள் உள்ளனர். லாரி உரிமையாளர் சங்கத்தின் 2017 மற்றும் 2018-ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் நகலும் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட ஆண்டு அறிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. உதாரணமாக டீசல் வாங்கியதில் ஆட்டோ மொபைல்ஸ் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் வாராக்கடன் என பல்வேறு வகையில் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே தாங்கள் ,இந்த வி‌ஷயத்தில் தலையிட்டு முறைகேடுகள் குறித்து விசாரித்து அதன் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இது பற்றி ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘‘இந்த புகாரில் எந்த ஆதாரமும் இல்லை. இப்படி தவறான புகார் கொடுப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர். #tamilnews
    கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி. ஆபீசில் இந்து முன்னணியினர் மனு அளிக்க வந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாநகர இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பாஸ்கர் தலைமையில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

    குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் 60 ஆண்டுகள் பழமையான கும்மாத்தம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான அன்னதான கூடம், விநாயகர் சிலை, அனுமன் சிலை ஆகியவற்றை ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இடித்து விட்டனர்.

    மேலும் கோவிலுக்கு பூட்டு போட்டு விட்டனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×