என் மலர்

  நீங்கள் தேடியது "victims"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை செலவீனத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
  • பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் வழிகாட்டுதலின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.

  மயிலாடுதுறை:

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18.12.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் சாலை விபத்தால் எற்படும் உயிரிழப்பை குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்துக்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மை காக்கும் 48திட்டத்தை தொடங்கி வைத்தார்.

  இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள் பிற மாநிலத்தவர் வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும்கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரைகட்டணமின்றி மருத்துவ சிகிச்சைஅளிக்கப்படும்.

  தேர்தெடுக்கப்பட்ட81 மருத்துவ சிகிச்சை முறைகளு க்கு நபர் ஒருவருக்கு ரூ. ஒரு லட்சம்வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

  மேலும் இத்திட்டத்தில் சாலை விபத்தில்பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாகஅனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம்வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81) சிகிச்சை அளிக்கப்படும் 48 மணி நேரத்திற்குமேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக இருந்தால் அல்லது தொடர் சிகிச்சைநடைமுறைகள் தேவைப்பட்டால் பின்வரும் வழிகாட்டுதலின் படி சிகிச்சைகள் வழங்கப்படும்.

  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளிமேற்கொள்ளும் சிகிச்சை திட்டத்தில் அங்கீகரிக்கப்ப ட்டிருத்தல் நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவ மனையிலேயே மேல் சிகிச்சை தொடரலாம்.

  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளியாக இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவ மனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார்காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சை பெற விரும்பினால், நோயாளியைநிலைப்படுத்தி அதே மருத்துவமனையிலோ சிகிச்சைக்கான கட்டணத் தொகையை தனி நபரோசெ லுத்தி சிகிச்சை தொடரலாம்.

  மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 2327 நபர்களுக்கு இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

  இத்திட்டத்தில் பயன டைந்த மயிலாடுதுறை மாவட்டம்சின்னக்குடியை சேர்ந்த ஜனகன் என்பவர் தெரிவித்தாவது நான் எனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழந்து பலத்த காயமடைந்து மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

  நம்மைகாக்கும் 48 திட்டத்தால் தற்போது மூச்சு குழாயில் குழாய் பொருத்தப்பட்டு குணமடைந்து வருகிறேன் முதலமைச்சருக்கு நன்றி.அராயபுரத்தை சேர்ந்த அன்புமணி தெரிவித்தாவது நான் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் நேருக்குநேர் மோதியதில் பலத்த காயம டைந்து அரசு பெரியார் மருத்துவமனையில் இத்திட்ட த்தில் சிகிச்சை பெற்று முதல் அமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

  சென்னிமலை:

  தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

  பெருந்துறை நிலைய அலுவலர் நவீன்தரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வெள்ளோடு குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

  வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

  இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

  மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை செல்லும் தங்கள் நாட்டினர் உஷாராக இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. #SriLankablasts #Colomboblast
  வாஷிங்டன்:

  இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

  இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் தனது நாட்டினருக்கு அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  இலங்கையில், பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்தோ அல்லது விடுக்காமலோ மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும். சுற்றுலா தலங்கள், போக்குவரத்து வாகனங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு கட்டிடங்கள், ஓட்டல்கள், கிளப்புகள், உணவு விடுதிகள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.

  எனவே, இலங்கைக்கு செல்லும் அமெரிக்கர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

  சுற்றுலா தலங்கள் மற்றும் நெரிசல் மிகுந்த இடங்களில் செல்லும்போது, சுற்றிலும் நடப்பனவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றுங்கள். ஊடகங்களில் உடனடி செய்திகளை கவனியுங்கள். அதற்கேற்ப உங்கள் பயண திட்டத்தை மாற்றி அமையுங்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் நடப்பு நிலவரத்தை பார்த்து வாருங்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இதுபோல், கனடாவும் இலங்கை செல்லும் தனது நாட்டினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இதுகுறித்து கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  வெளிநாடுகளில் கனடா மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, கனடா அரசு அவ்வப்போது நம்பகமான தகவல்களை அளித்து வருகிறது. அதற்கேற்ப கனடா நாட்டினர் தங்களது பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம்.

  இலங்கைக்கு செல்வது உங்களது விருப்பம். வெளிநாடுகளில் உங்களது தனிப்பட்ட பாதுகாப்புக்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SriLankablasts #Colomboblast
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை குண்டுவெடிப்புக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். #Colomboblast #Obama #SriLankaAttack
  நியூயார்க்:

  இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  ஈஸ்டர் பெருநாளில் இலங்கையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்பு, மீட்பு மற்றும் புதுப்பித்தலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான நாளில் நடந்திருக்கும் இந்த தாக்குதல், மனிதநேயத்தின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்திப்பதுடன், இலங்கை மக்களுக்கு துணையாகவும் நிற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். #Colomboblast #Obama #SriLankaAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. #SriLankablasts #Colomboblast #EiffelTower
  பாரீஸ்:

  இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர்.  இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் நேற்று முன்தினம் இரவு அணைக்கப்பட்டன.

  எப்போதும் நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஈபிள் கோபுரம் இலங்கை மக்களின் துயரத்தில் பங்கு கொண்டது. இதனால் ஈபிள் கோபுரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

  இதற்குமுன் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்காகவும், 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகரின் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களுக்காகவும் ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குள் அணைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. #SriLankablasts #Colomboblast #EiffelTower 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு அறிவித்துள்ளது. #SriLankablast #blastvictimscompensation
  கொழும்பு:

  இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 400-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இந்நிலையில், நேற்றைய தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடாக அரசு அறிவித்துள்ளது.

  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்ட இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளுக்காக கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  இலங்கையின் ஒரு லட்சம் ரூபாய் இந்தியாவின் 40 ஆயிரம் ரூபாய்க்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankablast #blastvictimscompensation
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போபால் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ரூ.7,800 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. #BhopalGas #Victims #Compensating #SupremeCourt
  புதுடெல்லி:

  மத்திய பிரதேசத்தின் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இதை சுவாசித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செத்து மடிந்தனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

  மிகப்பயங்கர பேரழிவாக கருதப்படும் இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடியை இழப்பீடாக வழங்கியது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனத்தை தற்போது டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

  இந்த நிலையில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு மற்றும் பிற நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கேட்டு மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே வழங்கிய ரூ.715 கோடிக்கு மேல் கூடுதலாக ரூ.7,844 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சிவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தனர். இந்த மனு மீது ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். #BhopalGas #Victims #Compensating #SupremeCourt 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்து உள்ளார். #GajaCyclone #Rajinikanth
  சென்னை:

  நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வரும் மன்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு. நமது நிவாரணப்பணிகள் தொடரட்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.  #GajaCyclone #Rajinikanth
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள வெள்ள பாதிப்புக்கு ம.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #KeralaFlood #MDMKVaiko
  சென்னை:

  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  கேரள மாநிலத்தில் நூறாண்டு காலத்தில் ஏற்படாத இயற்கை பேரிடராக நேர்ந்த பிரளயம் போன்ற வெள்ளப் பெருக்கால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளிக்கிறது. கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்கள் வேண்டுகிற நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  கேரள மாநில அரசுக்கு ம.தி.மு.க. ரூ.10 லட்சம் ரூபாய் நிதி வழங்குகிறது. மேலும், தேவையான நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்புகிறது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #KeralaFlood #MDMKVaiko
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ரெயில்கள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல ரெயில்வே இலாகா ஏற்பாடு செய்துள்ளதாக ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளார். #PiyushGoyal #KeralaFlood
  புதுடெல்லி:

  கேரளாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பரிதவித்த 4 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் நிதி உதவி அளிப்பதுடன், ஏராளமான நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகின்றன.  இந்தநிலையில் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பதிவில், “எனது அமைச்சகம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்யும். மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்ய உறுதி கொண்டுள்ளது. பல்வேறு மாநில அரசு முகமைகள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் இதர முகமைகள் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை ரெயில்கள் மூலம் இலவசமாக எடுத்துச் செல்ல ரெயில்வே இலாகா ஏற்பாடு செய்துள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.  இந்த நிலையில், புனே மற்றும் குஜராத்தின் ரத்லாம் நகரங்களில் இருந்து டேங்கர்களில் குடிநீர் ஏற்றிய 2 ரெயில்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  #PiyushGoyal #KeralaFlood
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி. ஆபீசில் இந்து முன்னணியினர் மனு அளிக்க வந்தனர்.

  வேலூர்:

  வேலூர் மாநகர இந்து முன்னணி மாவட்ட பொருளாளர் பாஸ்கர் தலைமையில் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 

  குடியாத்தம் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் 60 ஆண்டுகள் பழமையான கும்மாத்தம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான அன்னதான கூடம், விநாயகர் சிலை, அனுமன் சிலை ஆகியவற்றை ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இடித்து விட்டனர்.

  மேலும் கோவிலுக்கு பூட்டு போட்டு விட்டனர். இதுகுறித்து குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print