என் மலர்
நீங்கள் தேடியது "obama"
- பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது.
- ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன் என்றார்.
வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்று உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டில் இருந்தே பல விவாதங்கள் இருந்து வருகிறது.
அவற்றுக்கு வலு சேர்க்கும் வானில் ஏற்படும் வினோதமான நிகழ்வுகள், விண்கலம் போல் தென்படும் வினோத வாகனங்கள் குறித்த புகைப்படங்கள் கசிவது உண்டு.
அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளை பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான 'ஏரியா 51'-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இதற்கிடையே அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, "பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்த ஆதாரமும் தனக்குக் கிடைக்கவில்லை" என்றார்.
ஒரு முன்னாள் அதிபரே வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்று கூறியது அமெரிக்காவில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகன், மற்றும் தொடர்புடைய துறைகள் தங்கள் வசம் உள்ள வேற்றுகிரகவாசிகள் தொடர்புடைய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
அதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. நான் அதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நிறைய பேர் அதை நம்புகிறார்கள். நான் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன்" என்று தெரிவித்தார்.
- வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி நான் பேசிய தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன்.
- நான் எந்த தவறும் செய்யவில்லை.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோரின் முகத்தை குரங்குகளின் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சி இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, வாக்குப்பதிவு இயந்திர மோசடி குற்றச்சாட்டுகள் பற்றி நான் பேசிய தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். அதை நான் பகிர்ந்தேன். அது சரிபார்க்கப்பட்டிருக்கும் என்று கருதினேன். ஆட்சேபனைக்குரிய பகுதி பற்றி எனக்கு தெரியாது. நான் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றார்.
- சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை FBI கைது செய்து அழைத்துச் செல்லும் செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. பின்னர் ஆரஞ்சு நிற உடை அணிந்து ஒபாமா சிறைச்சாலையில் இருப்பதையும் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.
முன்னதாக 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக ஒபாமா விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார்.
- மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.
- 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்
அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த 'பிக் பியூட்டிபுல்' வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின்பு, நிதி ஆதாரத்தை திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மருத்துவ உதவிக்கான நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் விரைந்து வருவதால், 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்
இந்த மசோதாவை அவை நிறைவேறினால், உழைக்கும் வர்க்க குடும்பங்களின் எதிர்கால தலைமுறைகள் கடுமையாக பாதிக்கும். இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
- அமெரிக்க ஆயுதப்படைகளின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்றுவது அல்ல.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தின் அதிகாரிகளாக நீங்கள் உள்ளீர்கள். ஏனென்றால் நான் அந்த ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பினேன். நாங்கள் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட்டு, அமெரிக்காவின் எதிரிகளை நசுக்குவது மற்றும் நமது சிறந்த அமெரிக்கக் கொடியை பாதுகாப்பது போன்ற அதன் முக்கிய பணியில் நமது ராணுவத்தை கவனம் செலுத்த வைக்கிறோம்.
ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வடிவமைக்கும் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் அவற்றை உருவாக்குகிறோம்.
ஆனால் இதற்கு முன்பு ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது. அதை ரஷியர்கள் திருடினர். அப்போது மோசமான விஷயம் நடந்தது. ஆனால் தற்போது நாங்கள் அவற்றை நிறைய (ஏவுகணை) உருவாக்குகிறோம்.
அமெரிக்க ஆயுதப்படைகளின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்றுவது அல்ல. அதன் முக்கிய பணி தேசிய பாதுகாப்பு ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- டொனால்ட் க்ளோவர் மற்றும் மலியா ஒபாமா ஆகியோர் ஏற்கனவே, ஹாரர் த்ரில்லர் தொலைக்காட்சி தொடரான ஸ்வர்மில் பணிபுரிந்துள்ளனர்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்க உள்ளார்.
டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலியா ஒபாமா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ள ஒரு குறும்படத்தில், முதல் முறையாக இயக்குநராக தனது பணியை தொடங்க உள்ளதாக டொனால்ட் குளோவர் சமீபத்தில் தெரிவித்தார்.
டொனால்ட் க்ளோவர் மற்றும் மலியா ஒபாமா ஆகியோர் ஏற்கனவே, ஹாரர் த்ரில்லர் தொலைக்காட்சி தொடரான ஸ்வர்மில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலியா ஒபாமா ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டதாரி. அவர் லீனா டன்ஹாமின் பெண்களுக்கான பயிற்சியாளராக பணியாற்றினார். அதைத் தொடர்ந்து வெய்ன்ஸ்டீன் நிறுவனத்தில் ஹாலே பெர்ரி நடித்த அறிவியல் புனைகதை நாடகத் தொடரான எக்ஸ்டாண்டில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றினார்.
- ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான்.
- அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர் சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பும் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் அதிபர் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக பேச்சிலும் செயல்களிலும் தடுமாற்றத்துடன் இருந்து வருவது அவர் மீண்டும் வேட்பாளராக போட்டியிட தகுதியானவர்தானா என்ற சந்தேகத்தை அவரது சொந்த கட்சிக்குள்ளேயே எழச் செய்தது.
இதற்கிடையில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க செய்துள்ளதாக பார்க்கமுடிகிறது, எனவே பைடன் அதிபராக போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்று ஜநாயனாய கட்சியினர் பயந்தனர்.
இந்த நிலையில்தான் அதிபர் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இந்திய- ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக அவர் முன்மொழிந்துள்ளார். கமலா ஹாரிஸுக்கு ஜனநாய கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜோ பைடனின் தடுமாற்றம் குறித்து கேள்வி எழ முக்கிய காரணமாக அமைந்தது டொனால்டு டிரம்புடன் அவர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சிதான். அதை சுட்டிக்காட்டி டிரம்பும் பைடனை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, ஊழல் நிறைந்த தீவிரவாத ஜனநாயகவாதிகள் அவரை தூக்கியெறிந்துள்ளனர். நிலையற்ற ஜோ பைடன் அமரிக்க வரலாற்றிலேயே இது வரை இருந்த மிகவும் மோசமான அதிபர். தெற்கு எல்லை விவகாரத்தில் இருந்து , தேச பாதுகாப்பு, சர்வதேச நிலைப்பாடுவரை நமது நாட்டை அழிக்க சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர் செயல்பட்டுள்ளார்.
பைடனை சுற்றியுள்ளவர்கள் அவரது உடல் மற்றும் மன நிலை, நியாபகமறதி குறித்து அமெரிக்காவிடம் பொய் சொல்லிவந்துள்ளனர். இப்போது [பைடன் விலகியுள்ள நிலையில்] மீதமுள்ளவர்களும் அவரைப் போன்றவரே ஆவர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து டிரம்ப், அவரை நான் சிரிக்கும் கமலா என்றே அழைப்பேன், அவர் சிரிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒருவரின் சிரிப்பை வைத்து நிறைய விஷயங்களை சொல்லிவிட முடியும். She is nuts. அவரை வெல்வது மிகவும் சுலபம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஜனநாயகக் காட்சியைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பைடன் தேர்தலில் இருந்து விலகியது குறித்து பேசுகையில், சண்டையில் இருந்து பைடன் எப்போதும் பின்வாங்க மாட்டார் என்று எனக்குத் தெரியும். ஆனால் தற்போதுள்ள அரசியல் சூழலை புரிந்துகொண்டு அவர் எடுத்துள்ள இந்த முடிவு அவரது வாழ்வில் எடுத்த மிகவும் கடினமான முடிவாக இருக்கும். அமரிக்காவுக்கு நன்மை பயக்காது என்றால் இந்த முடிவை அவர் எடுத்திருக்க மாட்டார் என எனக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

- அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.
- கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் பில் கேட்ஸ் நடந்து வருகிறார்.
இதுவரை வந்த ஏஐ வீடியோக்களிலேயே சிறந்த வீடியோ இதுதான் என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. அந்த வீடியோவில், பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வருகின்றனர்.
கைதி உடையில் டொனால்டு டிரம்ப், சக்கர நாற்காலியில் ஜோ பைடன், ஒபாமா, மார்க் ஸுகர்பெர்க், நரேந்திர மோடி, கமலா ஹார்ஸ், ஸேனா அதிபர் ஜி ஜிங்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபர் புதின், ஐரோப்பிய அரசியல் தலைவர்கள், போப் ஆண்டவர் என அனைவரும் வரிசையாக நடந்து வருகின்றனர்.
இறுதியாக சமீபத்தில் நடந்த மைக்ரோசாப் குளறுபடியை கிண்டலடிக்கும் வகையில், கையில் டெத் ஆப் புளூ ஸ்க்ரீன் கணினியுடன் மைக்ரோசாப் நிறுவனர் பில் கேட்ஸ் நடந்து வருவதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எலான் மஸ்க்கும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளார். ஏஐ தொழிநுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது.
- அந்த பரிசை தான் ஏன் பெற்றோம் என்பதற்கான காரணம் ஒபாமாவுக்கே தெரிந்திருக்காது.
- சட்டவிரோத குடியேற்றங்களால் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. களத்தில் ஆளுங்கட்சி [டெமாகிரடிக்] சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் மற்றும் எதிர்க்கட்சி [ரிபப்லிக்] சார்பில் நிற்கும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கமலா ஹாரிஸை ஆதரித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். நெவாடா நகரில் நடத்த மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்ற பிரச்சாரக் நிகழ்வில் பேசிய டிரம்ப், அவர்கள் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர்.
அந்த பரிசை தான் ஏன் பெற்றோம் என்பதற்கான காரணம் ஒபாமாவுக்கே தெரிந்திருக்காது. அவர் [தேர்தலில் வென்று] நிர்வாகம் செய்ய தொடங்கிய உடனே அந்த விருதை அவர் பெற்றுள்ளார். நான் அவரை விட மிகப்பெரிய, மிக சிறந்த, யூகிக்கவே முடியாத தேர்தலில் வெற்றி பெற்றேன், ஆனால் அவர்கள் ஒபாமாவுக்கு நோபல் பரிசை வழங்கியுள்ளார்கள் என்று தனது ஆதங்கத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார்.

பராக் ஒபாமாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ஒபாமாவின் இடத்தில் தான் உட்பட யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் என்று டிரம்ப் இந்த கூட்டத்தில் பேசியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சட்டவிரோத குடியேற்றங்களால் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய குப்பைத் தொட்டியாக மாறியுள்ளதாக டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போது பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை தற்போது சுமார் 2.5 கோடி பேர் முன்கூட்டியே தபால் மூலம் வாக்களித்து உள்ளதாக கூறப்படுகிறது.
- ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்களில் தனக்கு பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார்.
- கேன்ஸ் திரைப்பட விழாவில் 'ALL WE IMAGINE AS LIGHT' திரைப்படம் விருது வென்றது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா 2024ம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பட்டியலிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் பாயல் கபாடியா இயக்கிய 'ALL WE IMAGINE AS LIGHT' என்ற இந்திய திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற 'ALL WE IMAGINE AS LIGHT' திரைப்படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு வாரங்களுக்கு பின் , மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் இறந்தார்.
- 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்
உலக பணக்காரர் எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா குறித்து விசித்திரமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜோசுவா ரூபின் என்பவரது 'வைட் அவேக் பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்ற எரோல் மஸ்க் பேசியதாவது, ஒபாமா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் பெண்ணாக உடையணிந்த ஒரு ஆணை மணந்தார் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோசுவா ரூபின் உடனே, "மிஷெல் ஒபாமா ஒரு ஆண் தானா?" என்று கேட்டபோது, எரோல், "நிச்சயமாக, அது உங்களுக்குத் தெரியாதா?" என்று பதிலளித்தார்.
மேலும் 2014 ஆம் ஆண்டில் நகைச்சுவை நடிகர் ஜான் ரிவர்ஸ், மிச்செல் ஒபாமாவை திருநங்கை என்றும், பராக் ஒபாமா 'ஒரு ஓரினச்சேர்க்கையாளர்' என்றும் பேசியிருந்தார். அதற்கு இரண்டு வாரங்களுக்கு பின் , மூளை பாதிப்பு காரணமாக ரிவர்ஸ் செப்டம்பர் 4, 2014 அன்று இறந்தார்.
இதை குறிப்பிட்டு பேசிய எரோல் மஸ்க், "ஜான் ரிவர்ஸ் அதைப் பற்றிப் பகிரங்கமாகக் பேசினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்துகிடந்தார். அவர்கள் அவரை வெட்டிக் கொன்றார்கள்" என்று கூறினார்.

மேலும் " நிச்சயமாக மிஷேல் ஒபாமா ஒரு ஆண்தான். 9 அங்குல ஆண்குறி தொங்க டிராக்சூட் அணிந்து அவர் நிற்கும் புகைப்படங்களை அவர்கள் வைத்துள்ளனர்" என்று எரோல் மஸ்க் தெரிவித்தார்.
இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈஸ்டர் பெருநாளில் இலங்கையை உலுக்கி உள்ள இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் பல்வேறு தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.







