என் மலர்
நீங்கள் தேடியது "x"
- கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
- இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கை வெளியிட்டுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளம்,சாட் ஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை இன்று மாலை முதல் உலகமெங்கும் பல இடங்களில் முடங்கின.
இவை, இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்பிளேர் சேவையின் மூலம் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கையின்படி, இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் எக்ஸ் முடக்கம் குறித்த புகார்களை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
உள்நுழைவு சிக்கல்கள் மற்றும் சர்வர் இணைப்பு தோல்விகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.
இந்த கோளாறை உறுதி செய்துள்ள கிளவுட்பிளேர் நிறுவனம் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
- 2022ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
- 2023 மே மாதம் லிண்டாவை சிஇஓ-வாக நியமித்தார்.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்னர் டுவிட்டர் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மூத்த விளம்பர நிர்வாகியான லிண்டா யாக்காரினோவை சிஇஓ-வாக நியமித்தார்.
சுமார் இண்டு வருடம் பணியாற்றிய நிலையில், லிண்டா தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்த அவர் "எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் xAI (Chatbot Grok உருவாக்கிய நிறுவனம்) உடன புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்த எக்ஸ் இன்னும் சிறந்ததை எட்டவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
- தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A இன் கீழ் முடக்க இந்திய அரசு உத்தரவிட்டது
- தேவையற்ற முறையில் தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி கணக்குகளின் முடக்கத்தை எக்ஸ் நீட்டித்தது.
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்ச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
ஜூலை 3 ஆம் தேதி, ராய்ட்டர்ஸ் உட்பட 2,355 கணக்குகளை ஒரு மணி நேரத்திற்குள், எந்த விளக்கமும் இல்லாமல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69A இன் கீழ் முடக்க இந்திய அரசு உத்தரவிட்டது என்று எக்ஸ் சர்வதேச விவகாரங்கள் குழு குற்றம்சாட்டியது.
உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்றால் குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால், வேறு வழியின்றி உத்தரவைப் பின்பற்றியதாக எக்ஸ் தெரிவித்தது.
ஜூலை 3 ஆம் தேதி எந்த புதிய தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் போன்ற முக்கிய சர்வதேச செய்தி சேனல்களைத் தடுக்க அரசுக்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் கணக்குகள் முடக்கப்பட்டவுடன், அவற்றை உடனடியாக இந்தியாவில் தடை நீக்க வேண்டும் என்று அரசு எக்ஸ்-க்கு கடிதம் எழுதியது.
ஜூலை 5 இரவு முதல் தொடர்ச்சியான பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, ஜூலை 6 இரவு 9 மணிக்கு மேல் தான் எக்ஸ், ராய்ட்டர்ஸ் மற்றும் பிற கணக்குகளைத் தடை நீக்கியது.
இதற்காக எக்ஸ், 21 மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டது என்றும் அரசு தெரிவித்துள்ளது. தேவையற்ற முறையில் தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி கணக்குகளின் முடக்கத்தை எக்ஸ் நீக்க தாமதித்ததாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கணக்குகளை முடக்கும் உத்தரவுகள் தொடர்பாக எக்ஸ் நிறுவனம் இந்திய அரசை அடிக்கடி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே நேரடி தாக்குதல் தொடங்கியது.
- இந்திய அரசின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை.
இந்தியாவில் 8000 எக்ஸ் கணக்குகளை முடக்க மத்திய அரசு நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே நேரடி தாக்குதல்கள் தொடங்கியுள்ள நிலையில் எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் கூறியதாவது, இந்திய அரசின் நிர்வாக உத்தரவினை ஏற்று இந்தியாவில் உள்ள 8000 எக்ஸ் வலைத்தள கணக்குகளை முடக்கும் பணியில் ஈடுபட்டுளோம்.
ஆனால், இந்திய அரசின் கோரிக்கைகள் மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த தடை உத்தரவுகளால் பாதிக்கப்படும் அனைத்து பயனர்களும் நீதிமன்றங்களிலிருந்து தகுந்த நிவாரணம் பெற நாங்கள் ஊக்குவிக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
- 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது.
ஜம்மு காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா உடைய கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் X கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டது. அமைச்சர் கவாஜா ஆசிப், "இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் இந்தியா, அதன் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது.
இதில் பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் உடைய சேனல் மற்றும் பிரபல செய்தி நிறுவனங்களின் சேனல்களும் அடங்கும்.
- 2019 புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இதுவாகும்.
- சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு ஆகியவை இதில் அடங்கும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
2019 புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் இதுவாகும். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா மறுப்பு ஆகியவை இதில் அடங்கும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா அதிரடியாக குறைத்துள்ளது.
இந்நிலையில் பிரபல சமூக ஊடக தளமான X இல் மத்திய அரசு அறிவுறுத்தல் பேரில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
- குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது
- எக்ஸ் தள பக்கத்தை மீட்க முயற்சி செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு பதிவு
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஷ்புதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "X தளத்தில் எனது இ-மெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர். X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
- ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார்.
உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் தற்போது அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) துறையின் தலைவராக உள்ளார். அதிபர் டிரம்ப் உடன் மிகவும் நெருக்கம் காட்டி வரும் எலான் மஸ்க் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கிக் கொள்வது வழக்கம்.
எலான் மஸ்க்குக்கு வெவ்வேறு பெண்கள் மூலம் இதுவரை 14 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மகள் திருநங்கையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எனவே தனது மகள் இறந்துவிட்டதாக எலான் மஸ்க் கூறி வருகிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதை எலான் மஸ்க் தவிர்த்து வருகிறார்.
இதற்கிடையே ஆஸ்லே செயின்ட் கிளார் என்ற எழுத்தாளர் எலான் மஸ்க்கின் குழந்தையை தான் பெற்றெடுத்ததாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் ஆஷ்லேயின் ஆண் குழந்தை என்னுடையதா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அவளுக்கு ₹21 கோடி கொடுத்தேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பதிவில், "தெரியாமலேயே... நான் ஆஷ்லேக்கு $2.5 மில்லியன் (கிட்டத்தட்ட ரூ.21.4 கோடி) கொடுத்துள்ளேன், மேலும் அவளுக்கு வருடத்திற்கு $500k (ரூ.4.3 கோடி) அனுப்புகிறேன்" என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
அரசு துறைகளில் எலான் மஸ்க்கின் ஆதிக்கத்தை கண்டித்து அவரின் டெஸ்லா நிறுவன கார்களை அமெரிக்கர்கள் புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே ஆஷ்லே தனது டெஸ்லா காரை விற்பதாகக் அறிவித்திருக்கிறார். இதனால் மனம் நொந்துபோன எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.
- டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று எலான் மஸ்க் மாற்றினார்.
- X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.
உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.
முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பொம்மை நாயகி’.
- இப்படம் அடுத்த மாதம் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் சுபத்ரா, ஸ்ரீமதி, ஜி.எம் குமார், அருள்தாஸ், ஹரிகிருஷ்ணன், ஜெயச்சந்திரன், இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி, லில்லி ஜான், ராக்ஸ்டார் ரமணியம்மா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற பிப்ரவரி-3ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் யோகிபாபு, அதியன் ஆதிரை, பிராங்க்ளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் யோகிபாபு பேசியதாவது, "இந்த படத்தில் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவே இல்லை. பா.ரஞ்சித்தின் அட்டகத்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில் திடீரென இருபது நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். அந்த சமயத்தில் நான் சுந்தர்.சியின் கலகலப்பு படத்திற்காக தேதிகள் கொடுத்திருந்ததால் அந்த வாய்ப்பு மிஸ் ஆனது. ஆனால் பரியேறும் பெருமாள் படம் மூலமாக நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பை என்னை அழைத்து தந்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நன்றி.

இந்த படம் தந்தை மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன். சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதேசமயம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து என்னை நம்பி அழைத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்க" என்றார்.
- டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது
- X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்றார்.
உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.
- மெட்டா நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டது.
டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றுவதற்கான காரணத்தை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார். இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
"நிறுவனம் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டுவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார்.
டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது. வெளியானதில் இருந்து அதிக பிரபலமாக இருந்துவந்த திரெட்ஸ் ஆப் டவுன்லோட்களில் பல சாதனைகளை படைத்தது.
இந்த நிலையில், டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டுவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கி இருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாக இருந்து வருகிறது. எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.






