என் மலர்
நீங்கள் தேடியது "Khushbu"
- ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
- கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.
90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையயாக விளங்கிய ரோஜா தற்போது மீண்டும் காம்பேக் கொடுத்துள்ளார். ஆந்திர அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த ரோஜா கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
ஆந்திராவில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்ற ரோஜா தனது திரைப்பட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழ் திரைப்படம் மூலம் அவரின் கம்பேக் நிகழ்கிறது.
கடைசியாக 2015 ஆம் ஆண்டில் ரோஜாவின் கில்லாடி, புலன் விசாரனை 2 ஆகிய படங்கள் வெளியாகின.
இந்நிலையில் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லெனின் பாண்டியன்' படத்தில் ரோஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரோஜாவின் கதாபாத்திர வீடியோவை நடிகை குஷ்பு வெளியிட்டுள்ளார்.
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது.
- பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்.
- சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது இரங்கலை தெரிவித்து இருந்தார்.

அந்த வரிசையில் நடிகை குஷ்பு, பாக்கியராஜ், வைரமுத்து ஆகியோர் அவர்களது இரங்களை பதிவிட்டு வருகின்றனர்.
வைரமுத்து - நல்ல தோழியை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

குஷ்பு - சரோஜா தேவி அம்மா எல்லா காலத்திலும் ஒரு சிறந்த நடிகை
என கூறியுள்ளார்.
- குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது
- எக்ஸ் தள பக்கத்தை மீட்க முயற்சி செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு பதிவு
நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஷ்புதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "X தளத்தில் எனது இ-மெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர். X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
- ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகிகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி யுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி யது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குண்டூர் பர்மா காலனியில் குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தற்போது இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக சமந்தா உருவெடுத்து உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் சமந்தாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் வசித்து வரும் பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி உள்ளார். அவருக்கு கோவில் அமைத்து கோவிலினுள் சமந்தாவின் மார்பளவு சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வருகிறார்.
கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர்.
கோவிலில் உள்ள சமந்தா சிலை முன்பு குடும்பத்தோடு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர்.
- பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்.
சென்னை:
சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.
அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.
இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
டுவிட்டரில் குஷ்பு, ஆண்கள், பெண்களை துஷ்பிரயோகம் செய்தால் அது அவர்கள் வளர்ந்த வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது.
பெண்களை இழிவுபடுத்துவதன் வாயிலாக இதுபோன்ற ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இத்தகைய ஆண்கள், தங்களை கருணாநிதியை பின்பற்றுபவர்கள் என்று சொல்லி கொள்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இதுதான் புதிய திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்.
இதை யார் பேசியிருந்தாலும், அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு போதும் இந்த நடத்தையை ஏற்க முடியாது.
இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தனது தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.
- தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
- தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னை:
சென்னை ஆர்.கே. நகரில் தி.மு.க. பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் பேசும்போது, பாரதிய ஜனதா கட்சியில் உள்ள நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு மிக ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார். இரட்டை அர்த்தம் தரும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார். தி.மு.க. பேச்சாளரின் பேச்சை மேடையில் இருந்த யாரும் கண்டிக்காமல் சிரித்தபடி ரசித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தி.மு.க. பேச்சாளரின் ஆபாசமான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு பெண்ணாகவும், மனிதராகவும் இதற்கு நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன் என்றும் இதுபோன்ற பேச்சுக்களை தி.மு.க.வும், தலைவர் மு.க.ஸ்டாலினும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று கூறி உள்ளார்.
இந்நிலையில் சைதை சாதிக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் மேடையில் பேசிய பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வெளி வந்துள்ளது. இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கனிமொழி கூறினார்.
- கனிமொழியின் பதிவுக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதாவை சேர்ந்த நடிகைகள், குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.
சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவியது. குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து தி.மு.க. எம்.பி. கனிமொழி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
தி.மு.க. இதை பொறுத்துக்கொள்ளாது. இதற்காக எனது தலைவர் ஸ்டாலின் மற்றும் அறிவாலயம் சார்பாக நான் மன்னிப்பு கோருகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழியின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா?
- உங்கள் மாநிலத்தில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதல்வர் நீங்கள்.
சென்னை:
தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் சமீபத்தில் நடிகை குஷ்புவை பொதுக்கூட்ட மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக விமர்சித்து பேசினார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. ஒரு பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். அதற்கு குஷ்பு பதிலுக்கு நன்றி கூறினார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குஷ்புவை அதிருப்தி அடைய செய்து உள்ளது. இது தொடர்பாக அவர் ஆவேசமாக கூறியதாவது:-
மிகவும் கீழ்த்தரமாக பொதுமேடையில் பேசியதை தமிழகமே கேட்டு உள்ளது. பேசியவர் மன்னிப்பு கேட்டாயிற்றே இத்துடன் இந்த பிரச்சினையை விட்டு விடலாமே? என்று தி.மு.க.வை சேர்ந்த சிலர் பேசுகிறார்கள்.
அவர்களுக்கு நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். உங்கள் குடும்ப பெண்களையும் இதே போல் ஒருவர் பேசினால் நீங்கள் பரவாயில்லை விட்டு விடுவோம் என்று சும்மா விட்டு விடுவீர்களா?
இந்த சம்பவத்தால் என் மனசு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதை பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்ந்து புரிந்து கொள்வார்கள்.
இதை நான் சாதாரணமாக விட்டு விடப்போவதில்லை. தேசிய மகளிர் ஆணையத்தில் வழக்கு தொடுக்க போகிறேன். எனக்கும் 19 மற்றும் 22 வயதில் 2 மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்.
உன்னை எவ்வளவு தரக்குறைவாக பொது மேடையிலேயே பேசிய போதும் நீ தைரியமாக என்ன செய்தாய்? என்று என் மகள்கள் என்னிடம் கேட்பார்கள் அல்லவா?
என் மகள்களை போல எத்தனையோ பெண் குழந்தைகள் என்னை ஒரு ரோல் மாடலாக ஏற்று இருக்கிறார்கள்.
நான் பயந்து ஒதுங்கினால் அவர்கள் எல்லாம் என்னை பற்றி என்ன நினைப்பார்கள். அவர்கள் எதிர்காலத்தில் தைரியமாக ஒவ்வொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும் அல்லவா?
பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா? அப்படி பேசியவரை அப்படியே விட்டு விடலாமா?
இந்த பிரச்சினையில் நான் பயந்து ஒதுங்கி விடவும் மாட்டேன். விட்டு விடவும் மாட்டேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் தூங்கி விழிக்கும்போது பயந்து கொண்டே எழும்புவதாகவும், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் யார் என்ன பிரச்சினையை இழுத்து வைத்து உள்ளார்களோ? என்று நினைத்து கொண்டு தூக்கமின்றி தவிப்பதாக கூறியிருந்தார்.
இப்போது அவர் நினைத்தது போலவே அவரது கட்சிக்காரர் ஒருவர் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து இருக்கிறார். நாகரீகமே இல்லாமல் பேசிய அவர் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை?
நான் முதல்-அமைச்சரிடம் கேட்கும் ஒரே ஒரு கேள்வி இது தான். வேறு எந்த கட்சிக்காரர்களாவது உங்கள் கட்சியை சேர்ந்த பெண்களை இது போல பேசி இருந்தால் சும்மா விட்டு விடுவீர்களா? இதற்குள் வழக்கு போட்டு உள்ளே தள்ளி இருப்பீர்கள். அவர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று அதகளம் செய்து இருப்பீர்கள்.
ஆனால் நான் பாரதிய ஜனதாவில் இருப்பதால் தான் நீங்கள் இதை கண்டு கொள்ளவில்லை. இதுவரை மவுனம் காத்து வருகிறீர்கள். நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடாதவர்களாக இருக்கலாம். ஆனாலும் உங்கள் மாநிலத்தில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதல்வர் நீங்கள்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு பெண் பாதிக்கப்பட்டும் நீங்கள் எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்? யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகவும் அபாயகரமானது.
உங்கள் கட்சிக்காரர்களால் உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். இப்போது உங்கள் கட்சிக்காரர்களால் எங்களை போன்ற பெண்களுக்கு தூக்கம் கெட்டு போகிறதே? இதற்கு பதில் சொல்வது யார்? இந்த விவகாரத்தை நான் சாதாரணமாக விடப்போவது இல்லை.
இனிமேலும் யாரும் பெண்களை கீழ்த்தரமாக விமர்சிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவித்து முன் வரும் கட்சிகள் எல்லாம் இப்போது எங்கே போனது. ஏன் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.
மற்ற கட்சிகளில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நியாயம், பாரதிய ஜனதாவில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நியாயமா?
இவ்வாறு குஷ்பு கூறினார்.
- பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ, கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல.
- தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாகர்கோவில்:
சென்னையில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் சைதை சாதிக் என்பவர் பா.ஜ.க.வில் உள்ள நடிகைகள் குஷ்பு, கவுதமி, காயத்ரி ரகுராம், நமீதா ஆகியோரை பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூம் பங்கேற்றிருந்தார்.
இந்தநிலையில் இதுதொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. பேச்சாளர் பேசிய கருத்திற்கு கூட்டம் முடிந்தவுடன் அவரை அழைத்து கண்டித்தேன். பெண்களை இழிவாக பேசுவது என்பது எனக்கோ, கழகத்திற்கோ உடன்பாடு இல்லை. ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்த பின்னரும் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக குஷ்பு ஏதேதோ பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
குஜராத்தில் வீட்டிற்குள் புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு தண்டனை காலம் முடிவதற்குள் அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பா.ஜனதா கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?
- இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது. மொத்தம் 1100 இடங்களில் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
சென்னையில் 66 இடங்களில் நடைபெற்றது. இதில் அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல் தலைவர் சத்யராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது.
மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா?
முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் எழுதி கொடுப்பதைத்தான் படிப்பது வழக்கம்.
மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி உள்ளன. பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள்.
இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை.
இதே நிலை தி.மு.க.வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள்.
இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ரூ.720 கோடிக்கு மது விற்றதாக கொண்டாடுகிறார்கள்.
தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார்.
இந்த போராட்டம் இத்துடன் முடிந்து போகாது தொடரும். அண்ணாமலை தலைமையில் தாமரை மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகணேஷ், திருவொற்றியூர் மேற்கு மண்டல் தலைவர் பாலு ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தண்டையார்பேட்டையில் மண்டலத் தலைவர் வீரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொருக்குப்பேட்டை காரனேசன் நகரில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் போஸ்கோ மாணிக்கம், சக்திவேல், அருள் முருகன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர ராஜ், கோவிந்த ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புறநகர் பகுதிகளான தாம்பரம், பம்மல், பெருங்க ளத்தூர், சிட்லபாக்கம், ஊரப்பாக்கம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருங்களத்தூர் பகுதியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொற்றாமரை சங்கரன் மண்டல தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் பால் பாக்கெட்டை கீழே கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பழனி வேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிட்லபாக்கத்தில் மாவட்ட செயலாளர் வேதசுப்ரமணியம் தலைமையிலும் பம்மலில் வழக்கறிஞர் அலேக்ஸ் சுதாகர் தலைமையிலும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மண்டல தலைவர் கணேஷ் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரப்பாக்கத்தில் மாவட்ட தலைவர் டி.ஜி.மோகனராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் விளையாட்டு பிரிவு மாநில துணை தலைவர் பாலாஜி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






