சரோஜா தேவி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்.சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
சரோஜா தேவி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்
Published on: 

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது இரங்கலை தெரிவித்து இருந்தார்.

அந்த வரிசையில் நடிகை குஷ்பு, பாக்கியராஜ், வைரமுத்து ஆகியோர் அவர்களது இரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

வைரமுத்து - நல்ல தோழியை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

குஷ்பு - சரோஜா தேவி அம்மா எல்லா காலத்திலும் ஒரு சிறந்த நடிகை

என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com