என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையதளம்"

    • கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
    • இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கை வெளியிட்டுள்ளது.

    எக்ஸ் சமூக வலைதளம்,சாட் ஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை இன்று மாலை முதல் உலகமெங்கும் பல இடங்களில்  முடங்கின.

    இவை, இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்பிளேர் சேவையின் மூலம் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.

    இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கையின்படி, இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் எக்ஸ் முடக்கம் குறித்த புகார்களை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

    உள்நுழைவு சிக்கல்கள் மற்றும் சர்வர் இணைப்பு தோல்விகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.

    இந்த கோளாறை உறுதி செய்துள்ள கிளவுட்பிளேர் நிறுவனம் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.   

    • கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
    • கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது?

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து அறநிலைத்துறை இணையதளத்தில் வெளியிட கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் உள்ளது. அந்த இணையதளத்தில் நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் உள்ளது.

    இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். ஏற்கனவே ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது? இது தொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும்? என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    • சம்பத்தப்பட்ட நபர் மீது கடை உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரினார்.

    ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

    அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ரிவ்யூவால் தனது கடையின் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணையில், தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரிய நிலையிலும், கடை உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம்
    • ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.6.2025

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறயிருப்பதாவது:-

    தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு எனும் வகையின் கீழ், அண்ணா பல்கலைக் கழகத்தின் பல்கலைக்கழக வளாகங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரி பி.இ., பி.டெக், பி.பிளான் பட்டப்படிப்பிற்கான இணையதள விண்ணப்பப் படிவங்கள் 2025-26-ம் ஆண்டு வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை cfa.annauniv.edu/cfa என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்பிக்கலாம்.

    விண்ணப்பப் படிவங்கள், கல்வி சம்பந்தப்பட்ட ஆவண நகல்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணங்களை இணையதளம் வாயிலாக சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.6.2025.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டம்
    • மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கு போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 873/4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் தஞ்சாவூர் - 613001 என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

    • 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
    • வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    தாராபுரம் சர்ச் வீதியில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இங்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றம் , தாலுகா அலுவலகம் அருகில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் என 4நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற ஆணையின் படி நீதிமன்ற பணிகள், தினசரி வழக்குகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த பதிவு செய்யப்பட்ட விபரங்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் தினசரி பார்த்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. இந்தநிலையில் நீதிமன்ற வளாக இணையதள சேவையில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி , வழக்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இணையதள சேவையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என தாராபுரம் வக்கீல் ராஜேந்திரன் மற்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர்.
    • இந்த இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம்.

    புதுடெல்லி :

    சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உஷாராக இருக்குமாறு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல https://cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன' என கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள சி.பி.எஸ்.இ., ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

    • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆலோசனை படியும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து வெளிமாநில அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்களை Labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதனை பதிவு செய்வதற்கு ஆதார் கார்டு அவசியம்.

    புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. மேலும் சந்தேகங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் 04562-252130 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
    • கலெக்டர் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நிலையான வழி காட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படும்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணைய தளத்தில், தங்களது பெயர்களை பதிவு செய்து, பாஸ்போர்ட் புகைப்படம், 2 தவணை கொரோனா செலுத்தியதற்கான சான்று, வயது சான்று ஆகியவற் றை பதிவேற்றம் செய்ய வேண் டும். இதேபோல ஜல்லிக்கட் டில் பங்கேற்கும் மாடுகள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க் கப்பட்ட பிறகு, தகுதி யான நபர்களுக்கு இைணய தளத்தில் டோக்கன் பதிவேற்றப்படும். இந்த டோக்கனை பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஒரு காளையுடன் அதன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் காளையுடன் அனுமதிக்கப்படுபவர்கள், மாடுபிடிவீரர்கள், பார்வை யாளர்கள் போட்டி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றை கொண்டு வர வேண்டும்.

    ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு விளை யாட்டுகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர் களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே பார்வையா ளர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

    திறந்தவெளி அரங்கின் அளவுக்கேற்ப சமூக இடைவெளியுடன் 150 பார்வை யாளர்கள் அல்லது அனுமதிக்கப் பட்ட இருக்கைகளில் 50 சதவீதத்திற்கும் மிகாத எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
    • பாஸ்வேர்டுகளை 41 சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள்.

    இணையதளம் இரண்டு முகங்களை கொண்டது. நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உடனடியாக தருவது ஒரு முகம்.

    ஆபாசம், ஹேக்கிங் என்று வக்கிரங்களை காட்டுவது மற்றொரு முகம். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 48 சதவீதம் பேர் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக ரூ.15 ஆயிரத்்துக்கும் அதிகமான தொகையை இணையதள திருடர்களிடம் இழக்கிறார்கள், என்று ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ.23,878-ஆக உள்ளது. அப்பாடா நம்மைவிட மற்றவர்கள் கூடுதலாக இழக்கிறார்கள் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையதளத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்போது, பாஸ்வேர்டு உள்பட கணக்கு விவரங்களை திருடுவது, பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

    40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர்.

    உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையதளம், தற்போது பாதை மாறி அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் போது 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக, பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள். இப்படி அடிப்படை பாதுகாப்புகளையே சரியாக செய்யாததன் விளைவுதான் இந்த இணையதள குற்றங்கள் அதிகமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    இணையதள பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுவதும் நடக்கிறது.. இந்த தகவல்கள் யாரோ ஒரு கும்பலால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனால் பணத்தை இழக்க நேருகிறது. எனவே நமது தகவல்களை குறைந்தபட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். எனவே சுயவிவரங்களை பகிரும்போது அதிக கவனம் தேவை.

    பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையதளம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம். இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையதளம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலமாக செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தின் நிலையை அறிய https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, பட்டா மாறுதல் மனுவின் நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பட்டா மாறுதலின் நடவடிக்கையின்போது ஒவ்வொரு நிலையையும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.

    பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா, புலப்பம், அபதிவேடு ஆகியவற்றை https://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக கட்டணமில்லாமல் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.

    • கிராமங்களில் இணையதள வசதி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • பாதாள சாக்கடை வழிந்தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் செம்பனார்கோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும்.

    விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை தெரியப்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.

    வருகிற ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    அப்போது தான் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாக்கப்–படும்.

    குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்.

    கிராமங்களில் இணையதள வசதி தடை–யின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    குப்பைகள் இல்லா கிராமத்தை உருவாக்க வேண்டும்.

    மயிலாடு–துறையில் நீண்ட காலமாக பாதாள சாக்கடை வழிந்–தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் மஞ்சுளா மற்றும் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×