என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fine"

    • இதுகுறித்த வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
    • விசாரணை முடிந்த நிலையில் காப்பகத்துக்கு ரூ.22 கோடி அபராதம் விதித்தது.

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்தின் இன்வெர்னஸ் நகரில் தனியார் முதியோர் காப்பகம் அமைந்துள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக் கொண்டுள்ளது.

    இந்தக் காப்பகத்தில் இருந்த கேம்பல் என்ற மூதாட்டி கடந்த 2022-ம் ஆண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால் காப்பக ஊழியர்கள் யாரும் அவருடன் இல்லை. இதனால் சில மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அந்தக் காப்பகத்துக்கு சுமார் 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • ஏழு முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பதிவாகி உள்ளது.
    • போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

     பெங்களூருவில் பொருத்தப்பட்டுள்ள சமீபத்திய புலனாய்வு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமராக்களில், சித்தராமையா 2024 முதல் ஏழு முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பதிவாகி உள்ளது.

    ஏழு விதிமீறல்களில் ஆறு, முதல்வர் வாகனத்தின் முன் இருக்கையில் பயணித்தபோது சீட் பெல்ட் அணியாததற்காக இருந்தன. மேலும் வானம் அதிவேகமாக இயக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளன. 

    விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே ரூ.2,500 அபராத தொகையை சித்தராமையா செலுத்தியுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  

    • துருக்கியில் அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ளது.
    • சாலை விதிகளை மதிக்காத போக்குவரத்து மந்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல் காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஓட்டிக்கொண்டு சென்றார்.

    அப்போது அவர் கார் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டபடியும், நாட்டின் அதிபர் எரோடகனின் பிரசாரத்தைக் கேட்டபடி சென்றார். மேலும், காரை மணிக்கு 180 முதல் 200 கி.மீட்டர் வேகத்தில் இயக்கினார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்நிலையில், நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரியே சாலை விதிகளை மதிக்காமல் காரை இயக்கியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.

    அங்கு அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ள நிலையில் அவர் அந்த வீடியோவை உடனடியாக நீக்கினார். தொடர்ந்து அப்துல் காதீருக்கு ரூ.20 ஆயிரம் (9 ஆயிரம் லிராக்கள்) அபராதம் விதிக்கப்பட்டது.

    • தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
    • ஆதாரங்கள் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.

    திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். சோதனையின்போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஜுன் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.

    மேலும், சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத் துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    • கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
    • கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

    குஜராத் உயர்நீதிமன்ற வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் கழிவறையில் இருந்தபடி பங்கேற்ற நபரின் வீடியோ கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    வைரலான அந்த வீடியோவில், அந்த நபர் காதில் புளூடூத் ஹெட்போன்களை அணிந்துகொண்டு கழிப்பறைக்கு சென்று வசதியாக தனது தொலைபேசி கேமராவை வைட் ஆங்கலில் தெரியும்படி வைக்கிறார்.

    பின் தன்னைத்தானே அவர் சுத்தம் செய்து கொள்வதை வீடியோ காட்டுகிறது. இது அனைவரையும் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

    கடந்த ஜூன் 20 ஆம் தேதி தன் மீதான எப்ஐஆர் ஒன்றை ரத்து செய்யக்கோரி அந்த நபர் அளித்த மனு மீது நீதிபதி நிர்சார் தேசாய் அமர்வில் நடந்த விசாரணையின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய குஜராத் உயர்நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    • ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.

    ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது

    அதில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உச்சவரம்பு 1.5 மடங்காக இருந்த நிலையில், தற்போது 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது

    மேலும், சரியான காரணமின்றி பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் 10 சதவீத அபராதத்தை, அதிகபட்சமாக ரூ.100 ஆக நிர்ணயிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும்.

    • பெண் ஒருவர் பைக் எஞ்சினில் அமர்ந்துகொண்டு இளைஞரை இறுக்கமாக கட்டிபிடித்தபடியே பயணம் செய்துள்ளார்.
    • இந்த காதல் ஜோடி ஹெல்மெட் கூட அணியவில்லை.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் காதல் ஜோடி பைக்கில் ஆபத்தான பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்ட, பெண் ஒருவர் பைக் எஞ்சினில் அமர்ந்து கொண்டு இளைஞரை இறுக்கமாக கட்டிபிடித்தபடியே பயணம் செய்துள்ளார். இந்த காதல் ஜோடி ஹெல்மெட் கூட அணியவில்லை.

    இதனை அவ்வழியே காரில் வந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தது.

    இதனையடுத்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காதல் ஜோடிக்கு போக்குவரத்து போலீசார் ரூ.53,500 அபராதம் விதித்தனர் . அபராத செலானை நொய்டா போக்குவரத்து போலீசார் தங்களது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

    • விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும்.
    • பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    லண்டன்:

    விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர்.

    இதற்கு விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு சுமார் ரூ.60,000 அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான ரியானேர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

    • திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் LBW முறையில் அவுட் ஆனார்.
    • இந்த அவுட் குறித்து பெண் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 5-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி 11.5 ஓவரில் 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பான ஆடிய அஸ்வின், சாய் கிஷோர் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

    ரீபிளேவில் பந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. ஆனால் ஏற்கனேவே 2 ரிவ்யூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரிவ்யூ எடுக்க முடியவில்லை.

    இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது காலில் அடித்தார். பின்னர் தனது கிளவுஸை கழட்டி வெளியே வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில் பெண் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஊதியத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • 2023 ஆம் ஆண்டு முதல் ஷியாமலா புறாக்களுக்கு உணவு வழங்கி வந்துள்ளார்.
    • புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தினர்.

    சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷியாமலா என்ற மூதாட்டிக்கு ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பறவை, விலங்குகளுக்கு வனவிலங்கு மேலாண்மை துறையிடம் இருந்து உரிய அனுமதி பெற்று உணவளிக்க வேண்டும் என அந்நாட்டு சட்டம் கூறுவதால் ஷியாமலாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

    2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷியாமலா புறாக்களுக்கு உணவு வழங்கி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அப்போது அரசாங்கத்திடம் ஒப்புதல் பெறாமல் வனவிலங்குகளுக்கு உணவு அழிப்பது சட்டவிரோதம் என்று அவரிடம் தெரிவித்த அதிகாரிகள் புறாக்களுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

    இதன் பிறகும், 2024 நவம்பர் வரை ஷியாமலா பலமுறை புறாக்களுக்கு உணவளித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், பிப்ரவரி 19 அன்று, ஷியாமலா தனது வீட்டிற்கு அருகில் புறாவை பிடிக்க முயற்சி செய்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    புறாக்களுக்கு அனுமதி பெருமாள் உணவு அளித்த குற்றச்சாட்டிற்காக நீதிமன்றம் அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • சம்பத்தப்பட்ட நபர் மீது கடை உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
    • தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரினார்.

    ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

    அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ரிவ்யூவால் தனது கடையின் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணையில், தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரிய நிலையிலும், கடை உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில் போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை.
    • உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவு.

    நெல்லையைச் சேர்ந்த பேச்சிவேல் என்பவரை 2 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதாக அவரது தாயார் சந்திரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்படி, 2019ம் ஆண்டில் நெல்லை டவுன் காவல் நிலைய காவலர் மகாராஜன், உதவி ஆய்வாளர் விமலன் மீது அவர் புகார் அளித்தார்.

    மேலும், அப்போது போலீசார் தனது மகனைத் தேடி வந்து மளிகை கடையில் நுழைந்து ஆத்திரத்தில் பொருட்களை உடைத்து ரூ. 10 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் தெரிவித்தார்.

    இந்து புகார் மனு மீதான விசாரணையின்போது, நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில் போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும், 20 வழக்குகள் நிலுவையில் உள்ள பேச்சிவேலை பிடிக்க முயன்றபோது விழுந்ததில் காயம் என கூறி புகாரை தள்ளுபடி செய்ய போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த புகார் மீதான இன்றைய விசாரணையில்," பேச்சிவேலுவின் காலில் சிலிண்டரை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தியதை போலீசார் மறைத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பேச்சிவேல் எப்போது கைது செய்யப்பட்டார்? முதலுதவி அளிக்கப்பட்ட விவரங்களையும் காவல்துறை மறைத்துள்ளதாக" மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் காயமடைந்து பேச்சிவேல் சிகிச்சை பெற்ற தகவலை மறைத்ததாகக் கூறி போலீசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தாக்கியதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    ×