என் மலர்
நீங்கள் தேடியது "முதியோர் காப்பகம்"
- இதுகுறித்த வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
- விசாரணை முடிந்த நிலையில் காப்பகத்துக்கு ரூ.22 கோடி அபராதம் விதித்தது.
எடின்பர்க்:
ஸ்காட்லாந்தின் இன்வெர்னஸ் நகரில் தனியார் முதியோர் காப்பகம் அமைந்துள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக் கொண்டுள்ளது.
இந்தக் காப்பகத்தில் இருந்த கேம்பல் என்ற மூதாட்டி கடந்த 2022-ம் ஆண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால் காப்பக ஊழியர்கள் யாரும் அவருடன் இல்லை. இதனால் சில மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அந்தக் காப்பகத்துக்கு சுமார் 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது
- கேரளா உயர்கல்வி அமைச்சர் பிந்து முன்னிலையில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
கேரளாவில் அரசு நடத்தும் முதியோர் நல காப்பகத்தில் வசித்து வரும் விஜயராகவன் (79), சுலோச்சனா (75) ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
முதியோர் இல்லத்தில் சந்தித்துக்கொண்ட இவர்களுக்குள் காதல் மலரவே. கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அவர்களின் திருமணக் கனவும் நிறைவேறியது
கேரளா உயர்கல்வி அமைச்சர் பிந்து, நகர மேயர் எம்.கே. வர்கீஸ் முன்னிலையில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த அழகான தருணத்திற்கு சாட்சியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று அமைச்சர் பிந்து தெரிவித்தார்.
- பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
- சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி முன்னிலையில் இந்திராசுந்தரம் அந்தக் காப்பகத்திற்கு நேற்று வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு 9 ஆண்கள், 25 பெண்கள் உள்பட 34 ஆதரவற்றவர்கள் உள்ளனர். அந்த காப்பகத்திற்கு 'வாட்டர் ஹீட்டர்' தேவை என்று மாவட்ட சமூகநலத்துறை மூலமாக இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத்தலைவரும், சமூக சேவகியுமான இந்திராசுந்தரத்திற்கு தெரிய வந்தது.
இதையடுத்து காப்பகத்திற்கு 'வாட்டர் ஹீட்டர்' வாங்கி கொடுக்க இந்திராசுந்தரம் முடிவு செய்தார். இதன்படி ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 'வாட்டர் ஹீட்டரை' மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி முன்னிலையில் இந்திராசுந்தரம் அந்தக் காப்பகத்திற்கு நேற்று வழங்கினார்.
அப்போது அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகி சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- காப்பகத்தில் உள்ள சலவை அறையில் திடீரென தீப்பிடித்தது.
- சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதியோர் காப்பகம் செயல்படுகிறது. அங்கு 75-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காப்பகத்தில் உள்ள சலவை அறையில் திடீரென தீப்பிடித்தது.
பின்னர் மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களின் சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் தீயில் கருகி 3 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






