இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் முதியோர் காப்பகத்திற்கு நல உதவி

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி முன்னிலையில் இந்திராசுந்தரம் அந்தக் காப்பகத்திற்கு நேற்று வழங்கினார்.
முதியோர் காப்பகத்திற்கு நல உதவிகளை வழங்கிய காட்சி.
முதியோர் காப்பகத்திற்கு நல உதவிகளை வழங்கிய காட்சி.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் என்ற ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு 9 ஆண்கள், 25 பெண்கள் உள்பட 34 ஆதரவற்றவர்கள் உள்ளனர். அந்த காப்பகத்திற்கு 'வாட்டர் ஹீட்டர்' தேவை என்று மாவட்ட சமூகநலத்துறை மூலமாக இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத்தலைவரும், சமூக சேவகியுமான இந்திராசுந்தரத்திற்கு தெரிய வந்தது.

இதையடுத்து காப்பகத்திற்கு 'வாட்டர் ஹீட்டர்' வாங்கி கொடுக்க இந்திராசுந்தரம் முடிவு செய்தார். இதன்படி ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 'வாட்டர் ஹீட்டரை' மாவட்ட சமூகநல அலுவலர் ரஞ்சிதாதேவி முன்னிலையில் இந்திராசுந்தரம் அந்தக் காப்பகத்திற்கு நேற்று வழங்கினார்.

அப்போது அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகி சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com