என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvananthapuram"
- பலரை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய மாடலிங் நடன இயக்குனர் கைது செய்யப் பட்டுள்ளார்.
- கூடரஞ்சி சந்தை அருகே உள்ள பாலகன்னி பகுதியை சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் பஹிதி(வயது27).
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய மாடலிங் நடன இயக்குனர் கைது செய்யப் பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக் கோடு கூடரஞ்சி சந்தை அருகே உள்ள பாலகன்னி பகுதியை சேர்ந்த அஜிஸ் என்பவரின் மகன் பஹிதி(வயது27). இவர் மாடலிங் துறையில் நடன இயக்குனராக உள்ளார். வாலிபர் பஹிதி இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார்.
அதில் அவருக்கு ஏராளமானோர் நண்பர்களாக உள்ளனர். மாடலிங் துறையில் நடன இயக்குனராக இருப்பதால் அவருடன் ஏராளமான இளம்பெண்களும் இன்ஸ்டாகிராமில் பழகி வந்திருக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பஹிதி, இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை தனது ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பழகிய இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களை பல இடங்களுக்கு அழைத்து சென்று அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பின்பு அதனை கூறி மிரட்டி அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்துக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவரது ஆசை வலையில் ஏராளமான இளம்பெண்கள் சிக்கி ஏமாந்துள்ளதாக தெரிகிறது.
அவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரியக்கூடிய ஐ.டி. ஊழியர், பஹிதி மீது போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்த போது பஹிதி பல இளம்பெண்கள் மட்டும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் எத்தனை பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தார்? எத்தனை பேரிடம் நகை-பணத்தை அபகரித்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த மாடலிங் நடன இயக்குனர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
- இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. பிரதமர் மோடி துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது:
* கேரளாவில் பிறந்த ஆதி சங்கராச்சாரியாருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
* கேரளாவில் ஒருபுறம் வாய்ப்புகளை அள்ளித்தரும் பெரிய கடலும் மறுபுறம் இயற்கை அழகும் உள்ளது.
* புதிய யுகத்தின் வளர்ச்சியாக கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் அமையும்.
* விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவில் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.
* பெரிய சரக்கு கப்பல் களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இந்தியா கூட்டணியின் வலுவான தூணாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளார்.
* விழா மேடையில் பினராயி விஜயன், காங்கிரசின் சசிதரூர் உள்ளதால் இன்று பலரின் தூக்கம் பறிபோகும்.
* இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தன்னுடன் மேடையை பகிர்வதால் பலரின் தூக்கம் பறிபோகும்.
* கேரளா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்கு விழிஞ்சம் துறைமுகம் ஒரு உதாரணம். தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் டிகியு கொள் கலன்களை கையாளும் திறன் கொண்டது.
* விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது.
- விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் பகுதியில் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகம் ரூ.8ஆயிரத்து 900 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்ட துறைமுகத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது.
முதற்கட்ட பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு முடிவுக்கு வந்தநிலையில், சோதனை ஓட்டங்கள் கடந்தஆண்டு (2024) ஜூலை மாதத்தில் நடைபெற்றது. மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கப்பட்டு சோதனைஓட்டம் நடத்தப்பட்டது. முதற்கட்ட கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு கட்ட பணிகள் 2018-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது. மேலும் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதியாகும். இதனால் பல்வேறு நாடுகளுக்கான பயண தூரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து பெரிதளவில் குறைவாகவே இருக்கும்.
விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் ஆண்டுக்கு 10லட்சம் கொள்கலன்கள் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. மூன்று கட்ட பணிகளும் முடிவடையும் பட்சத்தில் 45லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இதையடுத்து பிரதமர் மோடி ராஜ்பவனுக்கு சென்று இரவில் தங்கினார்.
இந்தநிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விழிஞ்சம் துறைமுகத்துக்கு சென்றார். பின்பு துறைமுக திறப்பு விழாவில் பங்கேற்று விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரமாண்ட சரக்கு கப்பலான எம்.எஸ்.டி. செலஸ்ட்னோ மரேஸ்காவை வரவேற்று விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்பு விழிஞ்சம் துறைமுகத்தின் செயல்பாட்டு வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார்.
இந்த விழாவில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகர், முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்த சோனோவால், மத்திய மந்திரிகள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், கேரள துறைமுக மந்திரி வி.என். வாசவன், மாநில மந்திரிகள் சிவன்குட்டி, அனில், சாஜி செரியன், முன்னாள் மத்திய மந்திரிகள் ராஜீவ் சந்திரசேகர், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், சசிதரூர் எம்.பி., அதானி குழும தலைவர் கவுதம் அதானி, திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், துறைமுக நிர்வாக இயக்குனர் கரண் அதானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கும் உடல் நலக்குறைவும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கேரளாவில் துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்நிலையில் திருவனந்தபுரம் கிளிப்பாலம், கரமன், அட்டுக்கல், மணக்காடு, கமலேஸ்வரம், ஸ்ரீவராகம் மற்றும் பேட்டா பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி-பேதி ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இவர்கள் அட்டக்குளங்கரா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஷவர்மா வாங்கி சாப்பிட்டதால் தான் உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட உணவகம் சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த உணவுகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
- ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.
- தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகம்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் ரூ.8 ஆயிரத்து 867 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவின் முதல் அரை தானியங்கி துறைமுகமான இதனை வருகிற 2-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
இதனை கேரள மாநில துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விழிஞ்சம் துறைமுகத்தை மே 2-ந் தேதி பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த துறைமுகம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படு வதன் மூலம் கேரளா, உலகின் கடல்சார் வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும்.
- பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கோர்ட்டில் சிறுமி புகார்.
- விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோர்ட் உத்தரவு.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் போத்தன்கோடு பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
11 வயதில் மகள் இருக்கும் நிலையில், அவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அவர்களது விவாகரத்து தொடர்பான ஆலோசனை குடும்ப நல கோர்ட்டில் நடந்தது. மனுதாக்கல் செய்த தம்பதியிடம் குடும்பநல கோர்ட்டு உறுப்பினர்கள் தனித்தனியாக விசாரண நடத்தினர்.
மேலும் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கினர். அது மட்டுமின்றி அந்த தம்பதியின் மகளான 11 வயது சிறுமியிடமும் வாக்கு மூலம் பெறப்பட்டது. அப்போது தனது தாய்க்கு ஆண் நண்பர் ஒருவர் இருப்பதாவும், தனது தந்தை இல்லாத நேரத்தில் தாயை பார்க்க வீட்டிற்கு வந்து சென்ற அவர் தன்னிடம் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் கோர்ட்டில் சிறுமி தெரிவித்தார்.
அதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று தாய் கூறிவிட்டதாகவும் கோர்ட்டில் அந்த சிறுமி கூறியிருக்கிறார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பநல கோர்ட்டு உறுப்பினர்கள், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக வஞ்சியூர் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாயின் ஆண் நண்பர் முதல் குற்றவாளியாகவும், சிறுமியின் தாய் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் போத்தன்கோடு பகுதியில் நடந்திருப்பதால், அந்த வழக்கு போத்தன்கோடு போலீஸ் நிலையத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போத்தன் கோடு போலீசார் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபிறகு, இந்த சம்பவத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே. சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்தது.
- சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா், அக்கட்சியின் கேரள மாநிலத் தலைவராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக கேரள பாஜக மாநிலத் தலைவராக இருந்த கே.சுரேந்திரன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் ராஜீவ் சந்திரசேகா் வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.
இப்பதவிக்கு ராஜீவ் சந்திரசேகா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் கட்சியின் கவுன்சில் கூட்ட நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மற்றும் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநில பாஜக தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

கா்நாடகத்தில் இருந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தோ்வான ராஜீவ் சந்திரசேகா், மத்திய பாஜக கூட்டணி அரசில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா், நீா் வளம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளாா்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும் பணியாற்றியுள்ள ராஜீவ் சந்திரசேகா் பணியாற்றி உள்ளார். கடந்த மக்களவைத் தோ்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்ட ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

- கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்.
- புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.
வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு, சபரிமலை தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல், பம்பையில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்த போதிலும் கோவிலில் கட்டுப்பாடு இல்லை. எனவே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யப்பனை தரிசனம் செய்ய காத்திருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. எனினும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் சரண கோஷம் முழங்க அய்யப்பனை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.
- தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை பயிற்சி போட்டியில் பங்கு பெற திருவனந்தபுரம் வந்தது.
- மழை காரணமாக பயிற்சி ஆட்டம் நடைபெறவில்லை.
திருவனந்தபுரம்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி உலக கோப்பை பயிற்சி போட்டியில் பங்கு பெறுவதற்காக கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. மழை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சி ஆட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட்டிங் ஸ்டாப்ஸ் ஆகியோர் திருவனந்தபுரம் என்ற பெயரை திணறி, திணறி உச்சரித்தனர். கடைசியில் சரியான முறையில் உச்சரித்தனர்.
திருவனந்தபுரம் என்ற பெயரை வீரர்கள் உச்சரித்ததுடன், சரியாக சொன்னோமா என சிரிப்புடன் காட்சி அளிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது
- நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.
நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.
அதில், "சேச்சி... சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.
விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது.
- ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகிறார்.
தன்னை மரத்தில் மறைத்து வைத்து, உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு, மன்னன் மார்த்தாண்டவர்மா அமைத்த ஆலயம், புனிதம் மிக்க அம்மச்சிபிலா மரம் உள்ள கோவில், நெய்யாற்றங்கரையில் அமைந்த சிறப்பு மிக்க தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்யாற்றங்கரை கிருஷ்ணசுவாமி கோவில்.
தலவரலாறு
திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி, அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர், மார்த்தாண்ட வர்மா. அப்போது மன்னர் குடும்பத்தில் குழப்ப சூழ்நிலை இருந்தது. அதேநேரம் திருவிதாங்கூர் மன்னர்களுக்கு பகைவர்களாக விளங்கிய எட்டுவீட்டு பிள்ளைமார்கள், யுவராஜனை கொல்ல திட்டமிட்டனர்.
இதனால் யுவராஜா மிகவும் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார். அவ்வப்போது மாறுவேடத்தில் வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சமயம் நெய்யாற்றங்கரைப் பகுதிக்கு வந்தபோது, பகைவர்கள் கொடிய ஆயுதங்களோடு இவரை பின்தொடர்ந்தனர். யுவராஜா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன், நிலையை உணர்ந்து, அருகில் இருந்த பலாமரத்தின் பொந்தில் யுவராஜாவை மறைந்து கொள்ளச் சொன்னான். யுவராஜாவும் மறைந்து கொண்டார்.
பகைவர்கள் அந்த இடம் வந்ததும், சிறுவனை விசாரித்தனர். சிறுவன் வேறு திசையைக் காட்டி மன்னரைக் காத்தான். மன்னர் உயிர் பிழைக்க வைத்த அந்த மரத்தை `அம்மச்சிபிலா' என்று அழைத்தனர்.
யுவராஜனாக இருந்த மார்த்தாண்டவர்மா, பல தடைகளைக் கடந்து மன்னனாக முடிசூட்டிக் கொண்டார். ஆனால் அவருக்கு தன்னைக் காத்த மரமும், சிறுவனும் மறந்துபோயினர். இதற்கிடையில் மன்னன் மார்த்தாண்டவர்மா, தன் எதிரிகளான எட்டு வீட்டுப்பிள்ளைமார்கள் வம்சத்தை பூண்டோடு அழித்தார்.
ஒரு நாள் கனவில் தோன்றிய கிருஷ்ணர், `அன்று மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து உன் உயிர் காத்தது நான்தான். என்னை மறந்து விட்டாயே. இனியும் தாமதிக்காமல் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பு" என்றார்.
தன் தவறை உணர்ந்த மன்னர், தன் உயிர்காத்த அந்த மரத்தையே ஆதாரமாக வைத்து, ஆலயம் எழுப்ப தீர்மானித்தார். அருகே உள்ள ஒரு ஊரில் சிலை உருவாக்கப்பட்டது. கல்லால் உருவான அந்த கிருஷ்ணன் சிலையை அவ்வூரில் இருந்து படகில் ஏற்றி வந்தனர். ஆனால் அச்சிலையோ ஆலயம் வர விரும்பாமல் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. பிரசன்னம் பார்த்தபோது `ஐம்பொன் சிலையே வேண்டும்' என உத்தரவு வந்தது. அதன்படியே ஒன்றரை அடி உயர ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அச்சிலை, மன்னரின் கனவில் கிருஷ்ணர் தோன்றிய வடிவில் அமைக்கப்பட்டது. இவரே இன்று நெய்யாற்றங்கரை ஶ்ரீகிருஷ்ணசுவாமி என அழைக்கப்படுகிறார். கி.பி. 1755-ம் ஆண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னரைக் காத்த அந்த பலாமரமும் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆலய அமைப்பு
தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உயரமான நுழைவு வாசலின் மேற்புறத்தில் கீதை உபதேசக் காட்சி, சுதை வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. நீண்ட நடைப்பந்தல், அடுத்து தங்கக் கொடிமரம் வரவேற்கின்றது. பலிக்கல், நமஸ்கார மண்டபம், படிகள், கதவுகள், சுவர்கள் அனைத்தும் பித்தளைத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளன. `ஶ்ரீகோவில்' எனப்படும்
கருவறையானது, சதுர வடிவில் அமைந்துள்ளது. கருவறை செம்புத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. கருவறைக்குள் ஒன்றரை அடி உயர பஞ்சலோக கிருஷ்ணன் மேற்கு முகமாக காட்சி தருகின்றார். இரு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகள் தாங்கி, விரித்த தலைமுடியுடன் அருள் காட்சி வழங்குகின்றார். கருவறையை சுற்றிலும் சித்திர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. வேட்டைக்கு ஒரு மகன், தர்மசாஸ்தா, நடராஜர், ராமர் பட்டாபிஷேகம், நரசிம்மர், கணபதி, மகாலட்சுமி, கிராத மூர்த்தி படங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் கிருஷ்ணன் மீது சாத்திய வெண்ணெய், நோய் தீர்க்கும் அருமருந்தாக கருதப்படுகிறது.
தினமும் அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலயத்தில், பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரியும் நல்லமுறையில் கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நெய்யாற்றங்கரை. இங்கு செல்ல கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் மற்றும் ரெயில் வசதிகள் உள்ளன.
- ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து
- ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர்.
பிரபல மோகினியாட்டக் கலைஞர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக விமர்சித்த பரத நாட்டியக் கலைஞர் கலமண்டலம் சத்யபாமா மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் நாட்டியப் பள்ளி நடத்தி வரும் மூத்த மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார்.
அதில், "மோகினியாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்களின் கால்களைச் சற்று அகலமாக விரித்து வைத்து ஆட வேண்டியதிருக்கும். ஒரு ஆண் இவ்வாறு கால்களை விரித்து வைத்துக் கொண்டு மோகினியாட்டம் ஆடினால் அது பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.
ஆண்கள் மோகினியாட்டம் ஆட வேண்டும் என்றால் அதற்கு அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஒருவர் காகத்தின் நிறத்தில் இருக்கிறார். அழகானவர்கள் ஆடும் மோகினியாட்டத்தை ஆடுவதற்க்கு அவர் தகுதியற்றவர். அவர் அருவருப்பான மோகினியாட்டத்தைத்தான் ஆடி வருகிறார்" என்று சத்யபாமா அந்த நேர்காணலில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
மோகினியாட்டக் கலைஞரான சத்யபாமா தனது நேர்காணலில் குறிப்பிட்ட அடையாளங்கள், ஆர்.எல்.வி ராமகிருஷ்ணனை தான் என கேரளாவைச் சேர்ந்த பலரும் தெரிவித்தனர்.
இவரது இந்த பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு கேரள அமைச்சர்கள் சஜி செரியன், ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மோகினியாட்ட கலைஞரான ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் மோகினியாட்டம் தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். கேரளாவில் மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சகோதரர் ஆர்.எல்.வி.ராமகிரஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.






