என் மலர்
நீங்கள் தேடியது "Malayalam"
- 34 வயதான ஹனி ரோஸ் ரேச்சல் படத்தை தவிர அவரிடம் வேறு எந்த படமும் இல்லை.
- 30 வயதை தொட்ட சம்யுக்தா மேனன், அபர்ணா பாலமுரளி போன்ற நடிகைகள் தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
திரையுலகில் கதாநாயகிகள் பலர் திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருந்து வருகின்றனர். பல நடிகைகள் 30 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மலையாள திரை உலகிலும் சில நடிகைகள் இன்னும் திருமண பந்தத்தில் இணையவில்லை.
பார்வதி திருவோத்து
விக்ரம் நடித்த 'தங்கலான்' படத்தின் கதாநாயகியான பார்வதி திருவோத்து 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
மடோனா செபாஸ்டியன்
நடிகை மடோனாவுக்கு 34 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் அவர் திருமண பந்தத்தில் இணையவில்லை.
ஐஸ்வர்யா லட்சுமி
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 34 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
ஹனி ரோஸ்
34 வயதான ஹனி ரோஸ் ரேச்சல் படத்தை தவிர அவரிடம் வேறு எந்த படமும் இல்லை. ஆனாலும் இன்னும் கல்யாணமா? பார்ப்போம் என்கிறார்.
மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் மாளவிகா திருமணமா? பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறார்.
இதேபோன்று 30 வயதை தொட்ட சம்யுக்தா மேனன், அபர்ணா பாலமுரளி போன்ற நடிகைகள் தனிமை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
- அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள 'அதிரடி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அருண் அனிருத்தன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனந்து, சமீர் உடன் இணைந்து பேசில் ஜோசப் மற்றும் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
- 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், லாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள கைதி படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நன்றாக வந்துள்ளதாக தமிழ் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- மாணவர்கள் தமிழக ஏற்கெனவே தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்-1-ல் 6 பாடங்களைப் பயின்று வந்தனர்.
- தமிழ் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி, காரைக்கால் மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தனர். இந்த நிலையில் முதல்கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அறிமுகமானது. தற்போது 6 முதல் 9, 11 -ம் வகுப்புகளில் நடப்பாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
புதுச்சேரியில் 127 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமலாகிறது. தமிழ் மொழி புறக்கணி க்கப்படாது என்று கல்வித்துறை உறுதி அளித்தி ருந்தது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் விண்ணப்பம் விநியோகத்தை கல்வித்துறை தொடங்கியது. இதில் அறிவியல் பாடப்பிரிவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், மனையியல், உளவியல், உடற்கல்வி, கணினி அறிவியல், தகவல் பயிற்சி, வெப் அப்ளிகேஷன், தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும், கலை பாடப்பிரிவில் வணிக படிப்பு, கணக்கு பதிவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், தகவல் பயிற்சி, வெப் அப்ளிகேஷன், உடற்கல்வி, நூலக அறிவியல், சட்டப் படிப்பு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன.
தொழிற்கல்வி பாடப்பிரிவுகளாக தட்டச்சு, தகவல் பயிற்சி, டெக்டைல் டிசைன், சுருக்கெழுத்து தமிழ்/ஆங்கிலம், உடற்கல்வி, வெப் அப்ளிகேஷன், சட்ட படிப்பு, அலுவலக செயல்முறை - பயிற்சி, புட் நியூட்ரிஷியன், தமிழ் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் தமிழக ஏற்கெனவே தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்-1-ல் 6 பாடங்களைப் பயின்று வந்தனர். இதனால் நான்கு முக்கிய பாடப்பிரிவுகளுடன் ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் பிளஸ்-1-ல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பத்தில் தமிழ் விருப்பப்படமாக இடம் பெற்றிருந்தாலும், மாணவர்கள் வேறு வழியில்லாமல் தமிழை தேர்வு செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதுவை அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு பிளஸ்-1 மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மொழிப் பிரிவில் தமிழுக்கு மட்டுமில்லாமல் ஏனாமில் தெலுங்குக்கு மாகேவில் மலையாளத்துக்கும் இதே சூழல் ஏற்பட்டுள்ளதால் மொழிப் பாட ஆசிரியர்களின் பணி பாதுகாப்பும் பாதிக்கும் சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டு.
- மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் பாராட்டு.
மலையாளத்தில் கடந்த 22ம் தேதி அன்று மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாஸி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியாகி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், வசூல் ரீதியாகவும் "மஞ்சும்மல் பாய்ஸ்" வெற்றி பெற்றுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மஞ்சும்மல் பாய்ஸ் சூப்பர்... அருமையான... அற்புதமான படம்.
சிறந்த ஃபிலிம்மேக்கிங்.. ஹேட்ஸ் ஆஃப்.
இந்த அற்புதமான திரை அனுபவத்தை தவறவிடாதீர்கள்.
சிதம்பரம், சௌபின்ஷாஹிர், விவேக்ஹர்ஷன், பர்வாபிலிம்ஸ், சுஷின்ஷியாம், ஷைஜூகாலித் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவுக்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
- நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.
தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.
அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.
மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.
பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.
இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .
கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.
சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.
சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
- அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது
- இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.
மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.
காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர். இந்த கதாபாத்திரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.
மேலும் பேய் கதாப்பாத்திரத்தில் 'கள்ளியங்கட்டு நீலி' ஆக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன. சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், அனுஷ்கா இருக்கும் 'கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்' படத்தின் வசீகரிக்கும் மோஷன் போஸ்டரை ஜெயசூர்யா பகிர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் நடிக்கும் அனுஷ்காவை வரவேற்கிறேன் எனக் கூறி உள்ளார்.

இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார்.அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படமாக இது உருவாக உள்ளது.மேலும் இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு ள்ளது.
- உலக அளவில் 'பாக்ஸ் ஆபிஸ்' கலெக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.
- மார்ச் 15 ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு திரையரங்களில் வெளியாகவுள்ளது.
பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான படம் 'ப்ரேமலு'. இந்த படம் வெளியான சில வாரங்களில் மக்கள் மனதை வென்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி, விஷ்ணுவிஜய் இசையமைத்துள்ளார். மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து மார்ச் 8 ஆம் தேதி வெளியிட்டனர். தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல திரையரங்குகளில் இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டு இருக்கிறது. உலக அளவில் 'பாக்ஸ் ஆபிஸ்' கலெக்ஷனில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ப்ரேமலு தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியாகவுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி இப்படம் தமிழ்நாடு திரையரங்களில் வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தமிழில் வெளியிடுகிறது.
மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மொழியிலும் ப்ரேமலு படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார்
- இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது
மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படம் ஆகும்.அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படும் கேரளப் பாதிரியார் கடமட்டத்து கத்தனார் பற்றிய கதைகளை அடிப்படையாக கொண்டது.இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகரும் -திரைப்பட தயாரிப்பாளர்-நடன இயக்குனருமான பிரபுதேவா கத்தனார் - தி வைல்ட் சோர்சரர் நடிகர்களுடன் இணைந்து உள்ளார்.பிரபு தேவாவை முன்னணி நடிகர் ஜெயசூர்யா, தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்கும் புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
சந்தோஷ் சிவன் இயக்கிய உறுமி படத்திற்குப் பிறகு13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார். இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது
- நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'GOAT' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார்.
நடிகர் விஜய் இன்று திருவனந்தபுரத்தில் GOAT படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார்.
அதில், "சேச்சி... சேட்டன்மார்... ஓணம் பண்டிகையில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பீர்களோ அதேபோல தற்போது உங்கள் முகத்தில் அம்மகிழ்ச்சியை பார்ப்பது எனக்கு மிக சந்தோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் நண்பா, நண்பி மாதிரி நீங்களும் வேற லெவல்ங்க" என்று விஜய் மலையாளத்தில் பேசினார்.
விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வினீத் ஸ்ரீனிவாசன் அடுத்த படைப்பாக ”வருஷங்களுக்கு சேஷம்” என்ற படத்தை இயக்கியுள்ளார்
- தியான், அஜூ வர்கீஸ், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
'மலர்வாடி ஆர்ட்ஸ் க்லப்' என்ற மலையாள படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார் வினீத் ஸ்ரீனிவாசன். 2012 ஆம் ஆண்டு வெளியான தட்டத்தின் மறையத்து படத்தை இயக்கினார்.
இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. மக்களிடம் வினீத் ஸ்ரீனிவாசன் பிரபலம் அடைய தொடங்கினார்.
இவர் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முன்னணி கதாப்பாத்திரமாக நடித்து ஹ்ருதயம் படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது. மக்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டது. இளைஞர்கள் மத்தியில் ஹ்ருதயம் படம் கொண்டாடப்பட்ட இப்படம் தமிழக மக்களாலும் ரசிக்கபட்டது.
அடுத்ததாக வினீத் ஸ்ரீனிவாசன் அடுத்த படைப்பாக "வருஷங்களுக்கு சேஷம்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியானது.
ஹ்ருதயம் வெற்றிக்கு பிறகு பிரணவ் மோகன்லால் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்துள்ளனர். அவர்களுடன் தியான், அஜூ வர்கீஸ், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
80 களில் படம் நடப்பதாக காண்பிக்கபடுகிறது. இரு நண்பர்கள் பிரணவ் மற்றும் தியானும் மிகப்பெரிய நடிகர்கள் ஆக வேண்டும் என்ற கனவோடு கேரளாவிலிருந்து சென்னை கோடம்பாக்கம் வருகின்றனர். வந்த இடத்தில் அவர்களுக்கு சினிமா துறையின் உண்மை முகம் தெரிய வருகிறது, மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதில் தியான் பிரணவினால் நம்பிக்கை துரோகம் செய்யப்படுகிறான்.
இவர்கள் திரைதுறையில் சாதித்தார்களா என்பதே கதை. டிரெயிலர் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விசாக் சுப்பிரமணியனின் மெரிலேண்ட் சினிமாஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். அமிரித் ராம்நாத் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- "சினிமா உலகில் நான் நடிகராக எளிதில் நுழைந்து உள்ளேன். என் தந்தை நடிகர் என்பதால் எனக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது
- என்னை நிரூபிக்க சினிமாவில் இன்று வரை நான் கடினமாக உழைத்து வருகிறேன்
மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். 'தி கோட் லைப்' என்ற புதிய படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் அமலாபால் , வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது.
இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்து இருந்தார். துரதிருஷ்டவசமாக 1.5 வருடங்களாக கோவிட் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரது உடல் எடையும் அதிகரித்து.
அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார்.படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.அவரது இசை படத்துக்கு கூடுதல் பலம் அளிப்பதாக அமைந்து உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28- ந் தேதி (மார்ச்) படம் தியேட்டர்களில் வெளியாகுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் பற்றி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இதில்கலந்து கொண்டு நடிகர் பிருத்விராஜ் கூறியதாவது :-

"சினிமா உலகில் நான் நடிகராக எளிதில் நுழைந்து உள்ளேன். என் தந்தை (நடிகர் சுகுமாரன்) பிரபல நடிகர் என்பதால் எனக்கும் சினிமாவில் பட வாய்ப்பு உடனடியாக கிடைத்தது. என்னை விட சிறந்த நடிகர்கள் பலர் இருந்தும் எனக்கு கதாநாயகனாகும் வாய்ப்பு தந்தையால் தான் கிடைத்தது.
என்னை நிரூபிக்க சினிமாவில் இன்று வரை நான் கடினமாக உழைத்து வருகிறேன். சினிமா குடும்பத்தில் பிறந்ததால் தான எனக்கும் வாய்ப்பு வந்தது.நான் அதிர்ஷ்டசாலியா? ஆமாம், அதிர்ஷ்டசாலி தான். எனது தந்தையால் தான் வாய்ப்பு கிடைத்ததா? ஆமாம், அவரால் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. இதை என்னால் மறுக்க முடியாது".என்றார்.
பிருதிவிராஜின் வெளிப்படையான பேச்சு குறித்து இணைய தளத்தில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






