நீண்ட நாள் கனவு நிறைவேறியது - சேரன் கொடுத்த புது அப்டேட்
Santhya
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி நடித்துள்ள சேரன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான பதிவில், "நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது..
மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தில் நடிக்கிறேன். என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.