உடல்நலக்குறைவால் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.கவியூர் பொன்னம்மாவின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாகும் என்று முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா மறைவு
Published on

மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா (80) காலமானார்.

மலையாள நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளவர் கவியூர் பொன்னம்மா. இவர், 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.

அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். கவியூர் பொன்னம்மா மறைவிற்கு கேரள திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com