என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free bus travel"

    • மதுரையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் கையில் குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறி உள்ளனர்.
    • இலவச பஸ் என்பதால் தங்களை பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்து கண்டக்டர் அவமதிப்பதாக கூறி பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவி பகுதியில் இருந்து மெயின் அருவிக்கு பயணம் செய்வதற்காக மதுரையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் கையில் குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறி உள்ளனர்.

    அப்போது பஸ் கண்டக்டர் அந்த பெண்களை கீழே இறங்குமாறு கூறியதோடு, அலட்சியமாக அடுத்த பஸ்சில் வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இலவச பஸ் என்பதால் தங்களை பஸ்சில் ஏற மறுப்பு தெரிவித்து கண்டக்டர் அவமதிப்பதாக கூறி பஸ்சை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து சுற்றியுள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒன்று கூடி பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மகளிர் விடியல் பயணம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் 132.91 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3.65 கோடி முறை பெண்கள் நகரப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக ஏப்ரல் மாதத்தில 28-ந்தேதியில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 13.59 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

    மகளிர் விடியல் பயணத்திட்டத்தில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
    • காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    காலநிலை மாற்றம் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடந்தது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரிசி விலை உயர்ந்துள்ளது.

    சென்னையில் தற்போது 3500 பஸ்கள் இருக்கும் நிலையில் அதை 8000 பஸ்களாக உயர்த்த வேண்டும்.


    பெண்களுக்கு இலவச பஸ் சலுகை வழங்கப்படுவது போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவச பஸ் சலுகை கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாக வாய்ப்புள்ள மற்ற இடங்களில் இதனை விரிவுபடுத்த வேண்டும். அப்போது தான் பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன் படுத்துவார்கள்.

    மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு 4 ஆயிரம் பேர் இறக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
    • அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்தோர்கள் இலவசமாக பயணிக்க டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    இச்சேவைகளை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்நிலையில் மாநகர போக்குவரத்துக்கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணிக்க வரும் 21-ந்தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.

    அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்தோர்கள் இலவசமாக பயணிக்க டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

    ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகளிருக்கான இலவச பஸ் பயணத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 4.72 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். மு.கோபால் ஆய்வு செய்தார்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப்பொறுப் பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளும் விதமாக, விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பேருந்துகளில் உள்ள மகளிரிடம் இத்திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்ததுடன், மகளிர் அனைவரும் தினமும் பஸ்களில் பயணம் செய்யும்போது நடத்துநர்கள் இலவச பயணச்சீட்டு வழங்குகிறார்களா? எனவும், நடத்துநர்கள் தங்களிடம் கனிவான முறையில் நடந்து கொள்கிறார்களா? என கேட்டறிந்தார்.

    மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் 244 சாதாரண டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 1.38 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இது சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிப்பவர்களில் 65.97 சதவீதம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இதுநாள்வரை 4.72 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்தார். முன்னதாக, போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் அவர்கள், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஆய்வு மேற்கொண்டதுடன், பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதை மத்திய புதுப்பிக்கும் தொழிற்கூடம், டயர் பிரிவு மற்றும் தகுதி சான்று பிரிவுகளில் ஆய்வு செய்ததுடன், உரிய நேரத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு வந்துள்ளனரா? என்பதை ஆய்வு செய்தார். 

    மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் பஸ்களை சரியானநேரத்தில் இயக்கவேண்டும் எனவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ள தவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் எனவும், அதிகப்படியான பயணிகள் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கிடவும் அலுவலர்களுக்கு போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.மு.கோபால் அறிவுறுத்தினார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில், போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். மு.கோபால், விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மோகனிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) லிட்., மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×