என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆகாஷ் பாஸ்கரன்"

    • அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
    • ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

    இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

    மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    • ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
    • அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது.

    இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.

    சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக்கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    • தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
    • ஆதாரங்கள் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.

    திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். சோதனையின்போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஜுன் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.

    மேலும், சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத் துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    • தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
    • கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். சோதனையின்போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.

    சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    • தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஆகாஷ் பாஸ்கரன் தற்போது டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்கள் தயாரித்து வருகிறார்

    பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் 'நானும் ரவுடிதான்', 'அமரன்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், ஆகாஷ் பாஸ்கரன். தற்போது டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்கள் தயாரித்து வருகிறார். தனுஷ் நடித்து, இயக்கி வரும் 'இட்லி கடை' படம்தான் அவரது தயாரிப்பில் வெளிவர இருக்கும் முதல் படமாகும்.

    அதேபோல சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து வரும் 'பராசக்தி' படத்தையும் தயாரிக்கிறார். அதனைத்தொடர்ந்து அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தை அவரே இயக்கி தயாரிக்கிறார்.

    இதுதவிர, சிம்புவின் 49-வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் கூட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை ஆகாஷின் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இட்லி கடை, பராசக்தி மற்றும் சிம்புவின் 49-வது படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனுஷ் நடிக்கும் இட்லிக்கடை படத்தை ஆகாஷ் தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் ஆகாஷின் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

    தயாரிப்பாளர் ஆகாஷ் துணை முதலமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் என தகவல் வெளியாகி உள்ளது.

    அண்மையில் நடந்த ஆகாஷ் பாஸ்கரன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்று இருந்தார்.

    • சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
    • இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குக்கிறார்

    அண்மையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு STR 49-ன் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

    இந்த படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

    சமீபத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கலந்துக் கொண்ட நேர்காணலில் STR49 படத்தை குறித்து சில தகவல்களை கூறியுள்ளார் அதன்படி " இந்த படத்திற்காக பல இயக்குனர்களை நாங்கள் தேடினோம். அப்பொழுது நடிகர் சிம்பு தான் இயக்குனர் ராம்குமாரை பரிந்துரைத்தார். இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இது இருக்கும்" என கூறியுள்ளார்.

    சிம்பு தற்பொழுது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×