என் மலர்
நீங்கள் தேடியது "High Court"
- மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.
சென்னை:
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை செயல்படுகிறது.
இந்த மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'மதுபான விற்பனை நேரத்தை மதியம் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மது விற்பனை நேரத்தை அரசு குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனாலும் இது நடைமுறைக்கு இன்னும் வரவில்ல.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் உள்ளதா? என்பதை உதவி சொலி சிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் தலைமையிலான குழுவினர் டாஸ்மாக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இதுபற்றி அக்டோபர் 23-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் வகையில், மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது. அனேகமாக மதியம் 2 மணியில் இருந்து 10 மணி வரை கடை திறக்கும் நேரத்தை மாற்றி அமைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான சாதக, பாதகங்களை அரசு விரிவாக ஆலோசித்து வருகிறது.
- எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அறிவிப்பு.
- பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பொன்னேரி:
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கு தடைவிதித்து அறிவிக்க முடியாது எனவும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதை முன்னிட்டு, பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் ஆலோசனைப்படி நகர செயலாளர் செல்வக்குமார் தலைமையில் புதிய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நகரத் துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி முன்னாள் பேரூர் தலைவர் சங்கர் நகரத் துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள், செந்தில்குமார், சுரேஷ் கோவிந்தராஜ், அதிமுக நிர்வாகிகள் சம்பத், அருன்ராஜ், அருண், ஸ்ரீதர் திருக்குமார், நாகராஜ், செல்வம், வெங்கடேசன், லட்சுமி, சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோர்ட்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய அவசர விளக்கு வெளிச்சத்தில் நீதிபதி வழக்குகளை விசாரித்தார்.
- என்.எல்.சி., போராட்டம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டபோதும், இதுபோலத் தான் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். காலை 11.35 மணிக்கு மின்சார வினியோகம் அவரது கோர்ட்டு அறையில் திடீரென தடைப்பட்டது. இதனால் கோர்ட்டு அறை இருளில் மூழ்கியது. இதனால் கோர்ட்டு அறையின் கதவு திறந்து வைக்கப்பட்டது.
மின்சாரம் இல்லாததால் ஏ.சி.யும் வேலை செய்யவில்லை.கோர்ட்டு சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய அவசர விளக்கு வெளிச்சத்தில் நீதிபதி வழக்குகளை விசாரித்தார்.
நீண்ட நேரம் மின்சாரம் வராததால் ஒரு கட்டத்தில், என் கோர்ட்டில் மட்டும்தான் மின்சாரம் இல்லையா? வேறு கோர்ட்டுகளில் உள்ளதா? வெளிநாட்டு சதி எதுவும் உள்ளதா? என்று நீதிபதி கிண்டலாக கேள்வியும் எழுப்பினார். கோர்ட்டு அதிகாரியும், வக்கீல்களும், "பல கோர்ட்டுகளில் மின்தடை ஏற்பட்டது. பின்னர், மின்சாரம் வந்துவிட்டது. ஆனால் உங்கள் கோர்ட்டில் மட்டும் மின்சாரம் தடைபட்டுள்ளது என்றனர்.
இதை கேட்டு சிரித்துக்கொண்டு வியர்வையுடன் வழக்கை விசாரிக்க தொடங்கினார். சுமார் 12 மணியளவில் மின் வினியோகம் வழங்கப்பட்டது.
ஏற்கனவே, என்.எல்.சி., போராட்டம் தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டபோதும், இதுபோலத் தான் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், பல மணி நேரம், இருளில் வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
- அறிவிப்பை மீறி பொருத்தியிருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- ஐகோர்ட்டின் உத்தரவையடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அமைச்சர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களில் அலங்கார விளக்குகள் பொருத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவின்படி அரசு வாகனங்களில் நியான் விளக்குகள், பிளாஷ் விளக்குகள், பல வண்ண எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட விளக்குகளை பொருத்துவது சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த அறிவிப்பை மீறி பொருத்தியிருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவையடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
- தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்திருக்காது.
- விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு.
விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது,
மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், "தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இருந்திருக்காது" என்றனர்.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்க்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரில் பலத்த காயங்களுடன் தந்தை, தாய், மகன் என 3 பேரும் சிக்கி தவித்தனர்.
- மகன் சிவராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
வானூர்:
சென்னை மேற்கு மாம்பலம் சுப்பையா நகரை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷன் (வயது 58). உயர்நீதிமன்றத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லலிதா (55), மகன் சிவராமகிருஷ்ணன் (23) ஆகியோருடன் நேற்று இரவு மயிலாடுதுறையில் உள்ள கோவிலுக்கு செல்ல காரில் புறப்பட்டார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்த இந்த காரை சிவராமகிருஷ்ணன் ஓட்டி வந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகேயுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் கார் வந்தபோது, அடையாளம் தெரியாத நபர் திடீரென சாலையை கடக்க முயற்சித்தார். அவர் மீது மோதாமல் இருக்க சிவராமகிருஷ்ணன் காரினை திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகிலிருந்த மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் அப்பளம் போல நொறுங்கிய காரில் பலத்த காயங்களுடன் தந்தை, தாய், மகன் என 3 பேரும் சிக்கி தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கோட்டக்குப்பம் போலீசார், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் 3 பேரையும் மீட்டனர். புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி உயர்நீதிமன்ற உதவி அலுவலர் ஸ்ரீவர்ஷன், அவரது மனைவி லலிதா இருவரும் இறந்தனர். இவர்களது மகன் சிவராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.டி.வி. தினகரனிடம் அபராதத் தொகை ரூ.31 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
- பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எஸ். பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து உள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
அ.ம.மு.க., தலைவர் டி.டி.வி.தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை இயக்குனர் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி உத்தரவிட்டார். ஆனாலும், அவர் ரூ.31 கோடி அபராத தொகையை இதுவரை செலுத்தவில்லை.
எனவே, டி.டி.வி. தினகரனிடம் அபராதத் தொகை ரூ.31 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், "டி.டி.வி. தினகரனிடம் இருந்து அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுத்தார்.
இதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் சிவில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, டி.டி.வி.தினகரனை திவாலானவர் என்று அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று கூறினார்.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.
- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியே சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கனராக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறப்பது தொடர்கதையாகி வந்தது.
இதையடுத்து வனவிலங்குகள் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களும், இதர வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள தாளவாடி வட்டார மக்கள் அவசர தேவைகளுக்காக இரவு நேரத்திலும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக அனுமதிச்சீட்டு (பாஸ்) வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. இதன்படி தாளவாடி வட்டார மக்களுக்கு வாகன அனுமதிச்சீட்டு வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவின்படி சத்தியமங்கலம்-மைசூரு சாலையில் இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவசர தேவைகளுக்காக இந்த சாலையில் பயணிக்கும் உள்ளூர் மக்கள் தங்களின் ஆதார் அட்டையை காட்டினால் அனுமதிக்கப்படுகின்றனர். இதை வரைமுறைப்படுத்தும் வகையில் தாளவாடி வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வருவாய்த்துறை மூலம் வாகன அனுமதிச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இந்த அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து தாளவாடி வட்டாட்சியர் ரவிசங்கர் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி.புத்தகம், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளின் ஜெராக்ஸ் நகல்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.
- சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
- எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.
சென்னை:
தூத்துக்குடியைச் சேர்ந்த பாஸ்கல் சசில் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, மாநில முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு அரசு முதியோர் இல்லத்தை அமைக்க வேண்டும் கூறி உள்ளது.
இந்த சட்டப்படி, தமிழ்நாட்டில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு அரசு, முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.
முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருவதாகவும் அரசு கூறியுள்ளதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறிவிட்டது என்று தெரிகிறது.
சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வு, எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது.
அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என மனுதாரர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
- நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
- வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த திருநங்கை தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்தது. ஆணாக இருந்துவந்த ஜகாத், தனது வயிற்றில் குழந்தையை சுமந்து பெற்றெடுத்தார். இதனை ஜியா பாவல் அறிவித்தார்.
ஆனால் தங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு கோழிக்கோடு மாநகராட்சி மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் குழந்தைக்கு ஜியா பாவலை தந்தை என்றும், ஜஹாத்தை தாய் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் திருநங்கை தம்பதியான ஜியா பாவல் மற்றும் ஜஹாத் ஆகிய இருவரும் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் தங்களது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய்-தந்தை என்று இருப்பதற்கு பதிலாக பெற்றோர் என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
அந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குழந்தையின் தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை ஆணாக அடையாளப்படுத்தி, தற்போது சமுதாயத்தில் ஆணாக வாழ்ந்து வருவதால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை மற்றும் தாயின் பெயரை தவிர்க்குமாறு மனுதாரர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் தங்களை பெற்றோர் என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அதிகாரிகள் மறுத்ததாகவும் கோர்ட்டில் தம்பதியினர் தெரிவித்தனர். அதனைக்கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் உண்மையான குறையை தீர்க்குமாறு மாநில அரசு வக்கீலிடம் தெரிவித்தார்.
ஆனால் மனுவில் சில தொழில் நுட்ட குறை பாடுகளை அரசு வக்கீல் சுட்டிக்காட்டினார். இதையடுத்து அந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.