என் மலர்
நீங்கள் தேடியது "Justice GR Swaminathan"
- நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையெழுத்து
- வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காகவே இந்த செயல்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன.
இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் சொன்னவாறே இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று, ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர். அதில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையொமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அமித்ஷா, நீதிபதிக்கு எதிரான இந்த தீர்மானம் அர்த்தமற்றது என்றும், தங்களது வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தி வருகிறார்.
- மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது?
- அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்றும், தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென ( இம்பீச்மெண்ட் ) நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை நேற்று அளித்துள்ளோம். இதனையடுத்து நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவைத் தலைவர், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும். எனவே, மக்களவைத் தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 'இம்பீச்மெண்ட் நோட்டீஸில்', அவர் ஒருதலைச் சார்போடும் ,அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடந்துகொள்கிறார்; ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ; ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பவை உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.
இந்நிலையில், அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சியாகவுள்ளது. 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கின் வரம்புகளை மீறி, அதற்குத் தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் உள்துறைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைத்துள்ளார்.
இது சட்டத்தை மீறுவதோடு மட்டுமின்றி, மாநில-மத்திய அரசுகளை அவமதிப்பதுமாகும். குறிப்பாக, இந்திய அரசின் உள்துறை செயலாளரை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைத்திருப்பது உள்நோக்கம்கொண்டதாகவுள்ளது. இந்திய மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது? அவரிடம் இவர் என்ன எதிர்பார்க்கிறார்? நீதிமன்ற அவமதிப்புக்கு அவர் என்ன செய்ய வேண்டுமென இவர் விரும்புகிறார்? அதிகார வரம்பை மீறி இந்த மூவருக்கும் அழைப்பு அனுப்பியிருப்பது இவரே எடுத்த முடிவாகத் தெரியவில்லை.
இவருக்குப் பின்னணியில் ஒரு சதிக்கும்பல் வேலை செய்வதாகத் தெரிகிறது. திருப்பரங்குன்றம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார் என கருத வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.
அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, தானே முன்வந்து பதவி வில வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.
- நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 150 மக்களவை எம்பிக்கள் கையொப்பம்
- அப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இம்பீச்மெண்ட் முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயரை ஜி.ஆர். சுவாமிநாதன் பெறுவார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன.
இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சொன்னவாறே இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று, ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர்.
நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 மக்களவை எம்பிக்கள் கையொப்பமிட்ட தீர்மான கடிதத்தை டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், எம்.பி. கனிமொழி, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர்.
சுவாமிநாதன் பதவிநீக்கம் செய்யப்படுவாரா?
ஒருவேளை இந்த தீர்மானம் ஏற்கப்பட்டால், மூன்று பேர் கொண்ட குழு நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று விசாரணைக் குழு உறுதி செய்யும்பட்சத்தில் நாடாளுமன்ற அவையில் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படும்.
அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறும். இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிப்பார். அப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இம்பீச்மெண்ட் முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயரை ஜி.ஆர். சுவாமிநாதன் பெறுவார்.







