என் மலர்tooltip icon

    இந்தியா

    பதவியேற்ற முதல்நாளே திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளை சாடிய நிதின் நபின்!
    X

    பதவியேற்ற முதல்நாளே திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளை சாடிய நிதின் நபின்!

    • சோம்நாத் பற்றி நாம் பேசும்போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.
    • இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

    பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் இன்று பதவியேற்றுக் கொண்டார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய நிதின் நபின், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதிசெய்ய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் முழு முயற்சி எடுக்க வேண்டும் எனக்கூறினார்.

    மேலும் திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக பேசிய அவர்,

    சமீபத்தில், எதிர்க்கட்சிகளால் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கவும், நீதிபதியை பதவி நீக்கம் செய்யவும் எப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நாம் பார்த்தோம். சோம்நாத் பற்றி நாம் பேசும்போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.

    நமது பாரம்பரியங்களைத் தடுக்கவும், ராமர் சேதுவின் இருப்பை மறுக்கவும், கார்த்திகை தீபத்தை எதிர்க்கவும் முயலும் இத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

    Next Story
    ×